Published : 20 Nov 2014 10:21 AM
Last Updated : 20 Nov 2014 10:21 AM

நாடின் கார்டிமர் 10

தென்னாப்பிரிக்காவின் கலாச்சாரம், மக்கள், தற்காலப் பிரச்சினைகள் ஆகியவற்றை சார்ந்து ஏராளமான நூல்களை எழுதியதன் மூலம் புக்கர், நோபல் பரிசுகளை பெற்ற நாடின் கார்டிமர் பிறந்த நாள் இன்று. அவரைப் பற்றிய அறிய முத்துக்கள் பத்து….

 தென்னாப்பிரிக்க பெண் எழுத்தாளரான இவர் ஸ்பிரிங்க்சு என்ற ஊரில் பிறந்தவர். பெற்றோர் யூத இனத்தைச் சேர்ந்தவர்கள். கத்தோலிக்க கன்னியர் மடப் பள்ளியில் பயின் றார். பின்னர், விர்வாட்டர்ஸ் ரான்ட் பல்கலைக்கழகத் தில் பட்டப் படிப்பில் சேர்ந் தார். ஆனால், படிப்பைத் தொடர முடியவில்லை.

 தாயார், கருப்பின மக்கள் கல்வி பெற முடியாத நிலை கண்டு வருந்தி அவர்களுக்காக மழலையர் பள்ளியைத் தொடங்கியவர். தாயைப் போலவே இவரும் கருப்பின மக்களின் துன்பங்களைக் கண்டு வருந்தினார்.

 பள்ளிப் பருவத்தில் நாட்டியம், நீச்சல், விளையாட்டில் ஆர்வம் கொண்டிருந்தார். ஆனால் இவரது இதயம் பலவீனமாக இருப்பதாக எண்ணிய தாயார் இவரை எதிலும் கலந்துகொள்ள விடாமல் வீட்டிலேயே பாதுகாப்பாக வைத்திருந்தார்.

 தனியாக வீட்டுக்குள் அடைபட்டுக்கிடந்த இவர் கதைகளை எழுதத் தொடங்கினார். இவரது முதல் கதை 15-ம் வயதில் வெளியானது. 15 புதினங்கள் உட்பட மொத்தம் 24 நூல்கள் எழுதியுள்ளார். இவற்றில் 3 நூல்கள் நிறவெறி அரசால் தடைசெய்யப்பட்டன.

 இவரது சிறுகதைகளில் பல தொகுக்கப்பட்டு, “நேருக்கு நேர்” (Face to Face) என்ற பெயரில் 1947ல் பிரசுரம் செய்யப்பட்டது. அந்நாட்டின் இனவெறி கொள்கைகள் குறித்து, ஏராளமான கட்டுரைகளையும் எழுதியுள்ளார். இவரது படைப்புகள் 40 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

 15-க்கும் மேற்பட்ட கவுரவ முனைவர் பட்டங்கள் இவருக்கு வழங்கப்பட்டன. இவரது எழுத்துகள் பெரும்பாலும், தென்னாப்பிரிக்காவின் கலாச்சாரம், மக்கள், தற்காலப் பிரச்சினைகள் ஆகியவற்றை சார்ந்தே அமைந்திருந்தன. எழுத்துரிமை, பத்திரிகை சுதந்திரம் ஆகியவற்றுக்காகவும் குரல் கொடுத்தார்.

 எச்.ஐ.வி./எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வையும் மக்களிடையே பரப்பினார்.

 1980களில் இனவெறிக்கு எதிரான போராளிகளுக்கு ஆதரவாக எழுதினார். பல ஆண்டுகள் சிறையில் இருந்து விடுதலைப் பெற்ற நெல்சன் மண்டேலாவை நேரில் சந்தித்து வாழ்த்து கூறினார். இளம் வயதில் கருப்பர் இன மக்களுக்கு ஆதரவாக எழுதத் தொடங்கிய இவர் இறுதி வரை தொடர்ந்து செய்துவந்தார்.

 இவரது படைப்புகள் மூலம் தென்னாப்பிரிக்க வெள்ளையின அரசின் இனவெறியை வெளி உலகுக்கு அம்பலப்படுத்தினார்.

 நாடின் தன் மகனுடன் இணைந்து 2 ஆவணப் படங்களையும் தயாரித்துள்ளார். 1974-ல் புக்கர் பரிசு இவருக்கு வழங்கப்பட்டது. ஏராளமான கவுரவப் பட்டங்களையும் விருதுகளையும் இவர் வென்றுள்ளார். 1991-ல் 88-ஆவது வயதில் இலக்கியத்துக்கான நோபல் பரிசை வென்ற இவர் 90-ஆவது வயதில் காலமானார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x