Last Updated : 28 Oct, 2015 09:30 AM

 

Published : 28 Oct 2015 09:30 AM
Last Updated : 28 Oct 2015 09:30 AM

இன்று அன்று | 28 அக்டோபர் 1955: உழைப்பால் வென்ற இந்திரா!

பெப்சிகோ நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாகப் பொறுப்பேற்ற மகிழ்ச்சியுடன் அமெரிக்காவில் உள்ள தனது வீட்டுக்குத் திரும்பினார் இந்திரா நூயி.

அந்தச் செய்தியைத் தன்னுடைய அம்மாவுக்குச் சொல்ல நினைத்தார். அப்போது அவரது அம்மா அவரிடம், “ராஜ் கிஷன் (இந்திரா நூயியின் கணவர்) அலுவலகத்திலிருந்து வந்திருக்கிறார். அவருக்குக் கொஞ்சம் பால் வாங்கி வா” என்றாராம். கோபம் வந்தாலும் அடக்கிக்கொண்டு பால் பாக்கெட்டை வாங்கி வந்தாராம் இந்திரா.

“அம்மா அத்தனை கண்டிப்பானவர்” என்று சொல்லும் அதே இந்திராதான் அம்மாவின் கட்டுப்பாடுகளையும் தாண்டி, சென்னையிலிருந்து அமெரிக்காவில் மேல்படிப்பு படிக்கச் சென்றவர்.

1955 அக்டோபர் 28-ல் சென்னையில் பிறந்தவர் இவர். உலகின் அதிகாரமிக்க 50 பெண்களில் ஒருவராக ஃபார்ச்சூன் நிறுவனத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

அயராத உழைப்பால் பெண்களுக்கு முன்னுதாரணமாக இருக்கும் இந்திரா, தூக்கத்தைவிட உழைப்புக்கே முக்கியத்துவம் தருவேன் என்று கூறுகிறார். ஆம், தினமும் நான்கே நான்கு மணி நேரம்தான் தூக்கத்துக்கு ஒதுக்குகிறார் இந்திரா!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x