Published : 01 Jun 2017 09:54 AM
Last Updated : 01 Jun 2017 09:54 AM
பாஸ்கரின் வீட்டுக்கு வந்து பேசிக் கொண்டிருந்த பக்கத்து வீட்டு ராகவன் கிளம்பிச் சென்றதும், மனைவி ரோகிணியிடம் வந்தார் பாஸ்கர்.
“பக்கத்து வீட்டுக்காரரான ராக வனோட நாம நல்லாத்தான் பழகு றோம். ஆனாலும் அவருக்கு நம்ம மேல அசூயையும் பொறா மையும்தான் இருக்குபோல!” சொன்னார் பாஸ்கர்.
“ஏன் அப்படி சொல்றீங்க? இவ்வளவு நேரம் நல்லாத்தானே பேசிட்டுப் போனார்” நிதானமாகக் கேட்டாள் ரோகிணி.
“நல்லா பேசிட்டிருந்தாரா? இவ் வளவு நேரம் தன்னைப் பற்றியும் தன் தம்பிகளைப் பற்றியுமே கர்வமா பேசிட்டிருந்தாரு. கவ னிச்சல்ல?”
“ஆமா கேட்டுட்டுத்தான் இருந் தேன். அவர் எப்படி மளிகை கடை நடத்தி முன்னுக்கு வந்தார்னு சொன்னார். அவரோட ஒரு தம்பி சைக்கிள் கடை நடத்தியும், இன்னொரு தம்பி பழைய பேப்பர் கடை நடத்தியும் முன்னுக்கு வந்தது பற்றி சொன்னார். இதுல அசூயையும் பொறாமையும் எங்கே யிருந்து வந்தது?” எதார்த்தமாகக் கேட்டாள் ரோகிணி.
“என்ன சொல்றே நீ? ரெண்டு நாள் முன்னாடி நம்ம ராஜேஷுக்கு ப்ளஸ் 2 ரிசல்ட் வந்திருக்குன்னு ராகவனுக்கும் தெரியும்ல. அதைப் பற்றி ஒரு வார்த்தை கேட் டாரா? பையன் எத்தனை மதிப்பெண் எடுத்திருக்கான்னு விசாரிச்சாரா? நானே ராஜே ஷோட மதிப்பெண்ணைச் சொன்ன பிறகுகூட ‘சரிசரி வாழ்த்துக் கள்’ன்னு கேட்டுட்டு போறாரு. என்ன மனுஷனோ?” சலிப்பாய் சொன்னார் பாஸ்கர்.
“இல்லைங்க. அவர் சரியாத் தான் பேசிட்டு போறார். படிக்காம லேயே தானும் தன் தம்பிகளும் இவ்வளவு தூரம் முன்னுக்கு வந்திருக்கோம்னு சொன்னார். படிச்சிருந்தா அதைவெச்சு வாழ்க் கையில இன்னும் எவ்வளவோ மதிப்பைப் பெற முடியும்னு நம்ம ராஜேஷுக்கு சொல்லாமச் சொல் லிட்டு போறார். இதுக்கு மேல எதுக்கு மதிப்பெண் பற்றி கேட் கணும்?
ராகவன் பேசுறதை நம்ம பையனும் உள்அறையிலயிருந்து கேட்டுட்டுத்தானே இருந்தான். ஒருவேளை ராஜேஷுக்கு மதிப்பெண் குறைஞ்சு போயிருந்தா நாமளே அதை வெளியே சொல்ல தயங்கியிருப்போம்ல. அதனாலதான் எதுவுமே கேட்கல அவர்!”-கல்யாணி சொல்ல... மனைவியைப் புருவமுயர்த்திப் பார்த்தார் பாஸ்கர்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT