Published : 14 Jun 2016 09:45 AM
Last Updated : 14 Jun 2016 09:45 AM
கார்ல் லேண்ட்ஸ்டெய்னர் - நோபல் பெற்ற ஆஸ்திரிய மருத்துவர்
ரத்தப் பிரிவுகளை வகைப்படுத்தி, நோபல் பரிசு பெற்ற ஆஸ்திரிய உயிரியல் வல்லுநர் கார்ல் லேண்ட்ஸ்டெய்னர் (Karl Landsteiner) பிறந்த தினம் இன்று (ஜூன் 14). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
* ஆஸ்திரியா தலைநகர் வியன்னா வில் (1868) பிறந்தார். சட்ட வல்லு நர், பத்திரிகையாளர், செய்தித்தாள் வெளியீட்டாளரான தந்தை, இவர் 6 வயது குழந்தையாக இருந்த போது இறந்தார். அதன் பிறகு, தாயின் அரவணைப்பில் வளர்ந்தார்.
* பள்ளிப்படிப்பு முடிந்தவுடன் வியன்னா பல்கலைக்கழகத்தில் மருத்துவம் பயின்று, பட்டம் பெற்றார். இறுதியாண்டு பயிலும் போதே உயிரி ரசாயன ஆராய்ச்சியைத் தொடங்கினார். ஆய்வுக் கட்டுரைகளும் எழுதி வெளியிட்டார். வேதியியல் குறித்து மேலும் அறிந்துகொள்ளும் ஆர்வத்தில் பல்வேறு நகரங்களில் உள்ள சோதனைக் கூடங்களில் 5 ஆண்டுகாலம் பணியாற்றினார்.
* மீண்டும் வியன்னா திரும்பி, பொது மருத்துவமனையில் மருத்துவ ஆராய்ச்சியைத் தொடர்ந்தார். வியன்னா ஹைஜீன் நிறுவனத்தில் 1896-ல் உதவியாளராகச் சேர்ந்தார். நோய் எதிர்ப்பாற்றல் செயல்பாடு, இயற்கை எதிர் உயிரிகள் குறித்து ஆராய்ச்சி செய்தார்.
* வியன்னா பல்கலைக்கழகத்தின் நோயியல், உடற்கூறியல் துறையில் 20 ஆண்டுகளுக்கு மேல் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றி னார். அங்கு நோயின் தன்மைகள் குறித்து ஆராய்ந்தார். தனியாக வும், பல அறிவியலாளர்களுடன் இணைந்தும் ஆராய்ச்சிகள் மேற் கொண்டு 75 கட்டுரைகளை வெளியிட்டார். நோய் எதிர்ப்பாற்றல் காரணி களைக் கண்டறிந்து அதற்கு ‘ஹாப்டன்ஸ்’ எனப் பெயரிட்டார்.
* வெவ்வேறு நபர்களின் ரத்தத்தைக் கலக்கும்போது அவற்றில் வேறுபாடுகள் இருப்பதை 1901-ல் கண்டார். இதுகுறித்து மேலும் ஆராய்ந்ததில் ஏ, பி, ஓ ஆகிய ரத்த வகைகள் இருப்பதையும் முதன்முதலாகக் கண்டறிந்தார்.
* இர்வின் பாப்பருடன் இணைந்து 1909-ல் போலியோ வைரஸ்கள் குறித்து ஆராய்ந்தார். அதன் தொற்றுத் தன்மையைக் கண்டறிந்தார். இதுதான் போலியோவுக்கு மருந்து கண்டறிய அடிப்படையாக அமைந்தது. இதற்காக இவருக்கு 1926-ல் ‘அரோன்சன்’ பரிசு கிடைத்தது. லாஸ்கர் விருது உள்ளிட்ட பல விருதுகள், கவுரவங்களையும் பெற்றார்.
* ரத்த சிவப்பணுக்கள் தொடர்பாக விரிவான ஆராய்ச்சிகளை மேற் கொண்டார். ரத்தப் பிரிவுகள் குறித்த ஆராய்ச்சியை மீண்டும் தொடர்ந்தார். முதல் உலகப் போருக்குப் பின்னர் நாட் டின் பொருளாதாரம் சீர்குலைந்ததால், தனது ஆராய்ச்சிகளை தொடர் வதற்காக ஹாலந்து சென்று ஒரு மருத்துவமனையில் பணியாற்றி னார்.
* வருமானத்துக்காக ஒரு தொழிற்சாலையில் வேலை பார்த்தார். அப்போதும் பல ஆய்வுக் கட்டுரைகளை எழுதினார். அவற்றை டச்சு ராயல் அறிவியல் அகாடமி வெளியிட்டது. அங்கு ஆராய்ச்சிகளுக்கு பெரிதாக வசதி வாய்ப்புகளோ, பொருளாதார வளமோ இல்லாததால் ராக்ஃபெல்லர் இன்ஸ்டிடியூட்டில் பணிபுரிய நியூயார்க் சென்றார்.
* நோய் எதிர்ப்பாற்றல், ஒவ்வாமை பிரச்சினைகள் குறித்து ஆராய்ந் தார். 1927-ல் மேலும் பல புதிய வகை ரத்தப் பிரிவுகளைக் கண்டறிந்தார். இந்த ஆராய்ச்சிக்காக 1930-ல் இவருக்கு அலெக்சாண்டர் எஸ்.வெய்னருடன் இணைந்து மருத்துவத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. தொடர்ந்து பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டார்.
* நோயியல், உடற்கூறியல், தசை திசுக்கள், நோய் எதிர்ப்பாற்றல் துறைகளில் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை வழங்கிய கார்ல் லேண்ட்ஸ்டெய்னர் 75-வது வயதில் (1943) மறைந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT