Published : 12 Jul 2016 08:39 AM
Last Updated : 12 Jul 2016 08:39 AM

மதுரை ஆலயப் பிரவேச போராட்டமும் பசும்பொன் தேவர் தந்த பாதுகாப்பும்

காந்தியடிகளின் வேண்டுகோளை ஏற்று மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தாழ்த்தப்பட்டோருடன் சென்று ஆலயப் பிரவேசம் செய் தார் அ.வைத்தியநாத அய்யர். இதுகுறித்த கட்டுரை ஜூலை 8-ம் தேதி ‘தி இந்து’வில் வெளி யாகி இருந்தது. இந்த ஆலய பிரவேசத்துக்கு, அப்போது காங்கி ரஸில் இருந்த பசும்பொன் முத்து ராமலிங்கத் தேவர் பக்க பலமாக நின்றது குறித்தும் சுவாரஸ்யமான தகவல்கள் உண்டு.

ஆலயப் பிரவேசம் செய்வதற்கு முன்னதாக மதுரை விக்டோரியா எட்வர்டு ஹாலில் (இப்போது தங்க ரீகல் சினிமா அரங்கம்) 1939-ம் ஆண்டு ஜூலை 2-ம் தேதி ஆயத்தக் கூட்டம் நடத்தினார் வைத்தியநாத அய்யர். அதில் பசும்பொன் தேவர் ஆற்றிய உரை குறித்து மூத்த காங்கிரஸ் தலை வர் நவநீதகிருஷ்ணன், தனது ‘தேசியமும் தெய்வீகமும்’ என்ற நூலில் விவரிக்கிறார்.

‘மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஆலயப் பிரவேசம் செய்ய வரும் மக்களை என்னுடைய சமுதாயத்து மக்கள் தூண்களாக நின்று பாதுகாப்பார்கள். அவர்கள் பத்திரமாக வீடு திரும்பும் வரை எனது சமுதாயம் அவர்களுக்கு பாதுகாப்பு கொடுக்கும்’ என்று தேவர் சொன்னதாக குறிப்பிடுகிறார் நவநீதகிருஷ்ணன். சொன்னது போலவே, தனது ஊரிலிருந்து வேல், கம்புகள் சகிதம் ஆட்களை வரவழைத்து ஆலயப் பிரவேசம் செய்த மக்களுக்கு பாதுகாப்புக் கொடுத்தார் தேவர்.

இதுகுறித்து ஃபார்வர்டு பிளாக் மூத்த தலைவர் வி.எஸ்.நவமணி கூறியதாவது:

அந்தக் காலத்தில் காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை ஒவ் வொரு போராட்டத்துக்கும் ஒரு வரை தலைவராக தேர்ந்தெடுப் பார்கள். அவருக்கு சர்வாதிகாரி என்று பெயர். அவர் போராட்டத்தில் சிறை சென்றுவிட்டால் இன்னொரு வர் சர்வாதிகாரியாக வருவார். ஆலயப் பிரவேச போராட்டத்துக்கு வைத்தியநாத அய்யரை சர்வாதி காரியாக அறிவித்தது காங்கிரஸ். அதனால், தேவர் உள்ளிட்டவர்கள் இரண்டாம் கட்டத்தில் இருந்து போராட்டத்துக்கு வலுசேர்த்தனர்.

மதுரையில் கீழ பட்டமார், மேல பட்டமார் தெருக்களைச் சேர்ந்த பட்டர்களில் பெரும்பாலானவர்கள் அன்றைய தினம் மீனாட்சி அம்மன் கோயிலுக்கு பூஜை வைக்க வர மாட்டோம் என்று சொல்லிவிட் டார்கள். இதற்கு மாற்று ஏற்பாடு செய்த தேவர், திருச்சுழியில் இருந்து 2 அர்ச்சகர்களை மது ரைக்கு அழைத்து வந்தார். அதில் ஒருவர் எதிர்பாராதவிதமாக நோய்வாய்ப்பட்டு இறந்துவிட, மீனாட்சி காவு வாங்கிவிட்டதாக எதிர்ப்பாளர்கள் வதந்தி பரப்பினர். அதையும் மீறி ஆலயப் பிரவேச போராட்டத்தை வெற்றிகரமாக நடத்த துணை நின்ற தேவர், தொடர்ந்து திருப்பரங்குன்றம், திருவிதாங்கூர், கமுதி ஆலய நுழைவுப் போராட்டங்களிலும் முக்கியப் பங்காற்றினார்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x