Published : 04 Jun 2016 10:05 AM
Last Updated : 04 Jun 2016 10:05 AM
இசையரசி எம்.எஸ்.சுப்புலஷ்மி
முனைவர் எஸ்.எம்.உமர்
விலை: ரூ.275
வெளியீடு: அல்லயன்ஸ் கம்பெனி
244, ராமகிருஷ்ணா மடம் சாலை, தபால் பெட்டி எண் 617, மயிலாப்பூர், சென்னை- 600 004.
தொலைபேசி: 044 2464 1314
மின்னஞ்சல்: books@alliancebook.com
பாரத ரத்னா எம்.எஸ். சுப்புலக்ஷ்மி பற்றிய தகவல்கள் அவரது இசையைப் போன்றே இனிமையானவை. கலைமாமணி முனைவர் எஸ்.எம் உமர் எழுதியிருக்கும் இந்நூல், எம்.எஸ். சுப்புலக்ஷ்மியின் இசை வாழ்க்கையை அற்புதமாகப் பதிவு செய்திருக்கிறது.
எம்.எஸ். வாழ்வில் நிகழ்ந்த நிகழ்ச்சிகள், புகைப்படங்கள் என்று ஒரு காலப்பயணத்தைத் தரும் பொக்கிஷம் இந்நூல். குழந்தைப் பருவத்திலிருந்தே இசையில் ஆர்வமும் ஞானமும் கொண்டிருந்த அவர், அம்மா சொன்னார் என்பதற்காக தனது எட்டாவது வயதில் முதன்முதலில் மேடையில் பாடினார்.
அன்று தொடங்கிய இசைப் பயணம் பல இசைத் தருணங்கள் நிறைந்தது. திரைத்துறையில் அவரது வரவு, அவரது வாழ்வில் கணவர் சதாசிவத்தின் உறுதுணை, மறைந்த பிரதமர் ஜவஹர்லால் நேரு அவரைப் பாராட்டிப் புகழ்ந்த சம்பவங்கள், காந்தி அவருக்கு எழுதிய கடிதத்தின் நகல் என்று பல தகவல்கள் இந்நூலில் உண்டு. எளிய நடையில் சுவாரஸ்யம் குன்றாமல் எழுதியிருக்கிறார் முனைவர் எஸ்.எம்.உமர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT