Published : 22 Jun 2016 06:11 PM
Last Updated : 22 Jun 2016 06:11 PM

நெட்டிசன் நோட்ஸ்: விஜய் - என்றும் மாறாது தோற்றமும் பணிவும்!

தமிழ்த் திரையுலகின் முக்கிய நடிகர்களில் ஒருவரான விஜய்க்கு முன்னுரை எதுவும் தேவையில்லை. இன்று (ஜூன் 22) தனது பிறந்த நாளைக் கொண்டாடும் விஜய்க்கு அவரின் ரசிகர்கள் தெரிவித்த வாழ்த்துக்களின் தொகுப்பு இன்றைய நெட்டிசன் நோட்ஸில்..

>சுகந்த்சரண் ‏

விஜய் அடுத்த ரஜினியா என்று தெரியாது, ஆனால் எங்களுக்கு விஜய்க்கு அப்புறம்தான் ரஜினியெல்லாம். அது தெரியும்..

>இதயதளபதி

இங்க விஜய் ஹேட்டர்-னு சொல்லிட்டு திரியறவங்க எல்லாம், அவங்க குடும்பத்துலயே ஏதாவது ஒரு விஜய் ரசிகன்கிட்ட அடி வாங்கிட்டுதான் இருப்பாங்க! #HBDVijay

>இரண்டாம்துக்ளக் ‏@

விஜய் பர்த்டேவை ஒரு திருவிழா போல கொண்டாடுகிறார்கள் #என்ன தவம் செய்தனை :)

>тнαłαραтнy➍➋ƒєsτivαℓ

தோல்வியையும், வெற்றியையும் தலைக்குள் ஏற்றிக்கொள்ளாத அற்புதமான நடிகர்.

>HBD VIJAY ANNA

சிவாஜி, ரஜினி, விஜய்காந்த், அஜித், சூர்யா - இவர்கள் அனைவருடனும் இளைய தளபதி விஜய் நடித்துள்ளார்

>Sri ‏

குரல், அழகிய தமிழ் உச்சரிப்பு, வசனங்கள் பேசுகையில் எதார்த்த தொனியுடன் ஒரு குறும்புன்னகை, கண்ணசைவிலும் எனர்ஜி - விஜய் #HBDVijay

>ramachandran ‏

ஒருத்தர பிடிக்காததுக்கு ஆயிரம் காரணம் சொல்லலாம், ஆனா பிடிச்சதுக்கு காரணம் சொல்ல முடியாது. பிறந்தநாள் வாழ்த்துகள். #இளையதளபதி_விஜய்

>சிலுவை ‏

தமிழ்நாட்டில் வாழும் ஒவ்வொரு குடும்பத்தலயும் ஒருவர் விஜய்யை நேசிப்பார்.

>Ethir Katchi ‏

எத்தனையோ பாட்டுக்கு வெறித்தனமா ஆடியிருந்தாலும், வெரசா போகையில விஜய்தான் ரொம்ப பிடிக்குது, சார்மிங் #HBDVijay

>HBD Thalaiva Vijay

நடிப்பு, நடனம், பாட்டு, காமெடி, சென்டிமென்ட், ஆக்‌ஷன் என அனைத்திலும் கலக்குபவர்.

>சிலுவை ‏

என்னதான் பிறர் உதவினாலும் சுய உழைப்பின் மூலமே நிரந்தரமான வெற்றியை பெற முடியும் என்பதை உணர்த்தியவர்! #HBDVijay

>Kathiresan

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் கொண்டாடும் நடிகன் #விஜய்

>ghouse.M

விமர்சனங்களால் துவள்வதும் இல்லை, வெற்றிகளால் அவர் துள்ளுவதும் இல்லை

>Sujiv

நீ தோற்பதை ரசிக்க இங்கு ஒரு கூட்டம் உண்டு ஆனால் அவர்கள்தான் தொடர்ந்து தோற்றுக்கொண்டே இருக்கின்றனர் உன்னிடம்

>Pandian

ஆரம்பத்தில், ஜெமினி. பின்னர் கமல், அப்பறம்… கார்த்திக், அரவிந்த் சாமி, NEXT… பிரசாந்த், அஜித், அப்பாஸ், மாதவன், சூர்யா இப்படி பெண்களின் கனவு நாயகன் மாறிக்கிட்டே தான் இருக்காங்க. பெரும்பாலான பெண்கள், 'அண்ணனாக' ஏற்றுக் கொண்ட ஒரே நடிகன் - ‪#‎விஜய்‬

>Joseph Munees‎

அஞ்சுவதும் அடிபணிவதும் தளபதி ஒருவனுக்கே!!

>Stalin Justin

இன்று போல் என்றும் புன்னகையும், மென் சிரிப்புமாக வையமுள்ளவரை வாழ்வீர்களாக! பிறந்தநாள் வாழ்த்துக்கள் ‪#‎விஜய்‬

>Rùkshåñ Têëjáy Tâmïl Pãìyâñ

அதிக அறிமுக இயக்குனரை அறிமுகம் செய்த நாயகனுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துகள் ‪#‎விஜய்‬அண்ணா!

>Ramkumar Sekar

எனக்கு உண்மையா ஒருத்தன வெறுக்க தெரியும். ஆனா பொய்யா ஒருத்தர நேசிக்க தெரியாது - இளைய தளபதி ‪#‎விஜய்‬

>Lakshman Selva

அனைத்து வருடமும் வசூலை குவிக்கும் வசூல்நாயகன் ‪#விஜய்‬ அவர்களுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!

>Mani Vasagam

கோடி ரசிகர்கள் இருந்தாலும் அந்த பணிவும், எளிமையான தோற்றமும் இன்னும் மாறலை. கூடவே பிறந்தது என்றும் போகாது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x