Published : 20 Sep 2016 03:18 PM
Last Updated : 20 Sep 2016 03:18 PM

நெட்டிசன் நோட்ஸ்: காஷ்மீர் தாக்குதல்- எழுந்திருங்கள் மோடி!

யூரி தாக்குதலுக்கு இந்தியா பதிலடி கொடுக்காமல் மவுனம் சாதிக்கிறது எனவும், பிரதமர் இந்த விஷயத்தில் தகுந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கருத்துகளை வலியுறுத்தியும் இணையமக்கள் பேசிவருகின்றனர். அவர்களின் கருத்துக்கள் பல்கிப்பெருகி #WakeUpModi என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் முதலிடத்தில் ட்ரெண்டாகி வருகின்றன. அவற்றின் தேர்ந்தெடுக்கப்பட்ட ட்வீட்களின் தொகுப்பு இன்றைய நெட்டிசன் நோட்ஸில்..

Ng

பதான்கோட் தாக்குதலில் நடந்ததைப் போல அல்லாமல், இந்த விஷயத்தில் பாகிஸ்தானுக்கு தகுந்த பதிலடி கொடுப்பார் மோடி என்று நம்புவோம். #WakeUpModi

Prakash

பாகிஸ்தானைக் கையாள்வது, மோடிக்கு ஒரு குவளை தேநீரை அருந்துவது போல எளிமையானது அல்ல. அதைப் புரிந்துகொள்ளுங்கள். #WakeUpModi

Sishovarma

இந்தியப் படைகள் இயங்கும். ஆனால் அதற்கு சரியான நேரம் தேவை. உடனே எதிர்வினையாற்றச் சொல்லி அவர்களைக் கட்டாயப்படுத்தாதீர்கள்.

Nitin Chavan

26/11 சம்பவம் நடந்த இரண்டு நாட்களுக்குப் பிறகு, காங்கிரஸ் ஆட்சியைக் குறைகூறி குஜராத் முதல்வர் மோடி நடத்திய மாநாடு இன்னும் நினைவில் இருக்கிறது. #WakeUpModi

Gujarat Congress

பேசிப்பேசியே மக்களின் நம்பிக்கையை வென்று பிரதமரான மோடி, செயலில் இறங்க வேண்டிய நேரம் இது.

Sangeeta Nambiar

முந்தைய ஆட்சியில் போர் வேண்டும் என்று கூக்குரலிட்ட மோடி இப்போதுதான் போர், அமைதிக்கான வழி இல்லை என்பதை உணர்ந்திருக்கிறார்.

Vinay Kumar Dokania ‏

ஆட்சிக்கு வரும் முன்னர் காங்கிரஸை குற்றம் சாட்டிக்கொண்டிருந்த பாஜக, இப்போது ஐ.நா. செவி சாய்ப்பதில்லை என்று புலம்பிக்கொண்டிருக்கிறது.

Pradeep Mamgain

முக்கியத்துவம் வாய்ந்த தேசியப் பிரச்சினையை, பிரதமருக்கு எதிராக வெறுப்பு ட்ரெண்ட்களாக மாற்றும் மற்ற கட்சிகளை நினைத்தால் கவலையாக இருக்கிறது.

Geetansh ‏

#WakeUpModi மோடி எழுவதற்கான இந்த அழைப்பு வெறும் ட்விட்டர் டிரெண்ட் அல்ல. இது தேசத்தின் குரல். இதை நிச்சயம் நீங்கள் கேட்டுத்தான் ஆகவேண்டும்.

Kajal Sharma

மோடியின் பலுசிஸ்தான் நாடு குறித்த பேச்சைப் பாராட்டியவர்கள் யூரி தாக்குதலைப் பற்றியும் பேசட்டும். பிரதமரே, முதலில் நம் நாட்டையும் நாட்டு மக்களையும் கவனியுங்கள்!.

Haryana

நம்மைக்காத்து நிற்கும் வீரர்களை நம்மால் பாதுகாக்க முடியவில்லை. வேதனையாக இருக்கிறது. #WakeUpModi

Hemant Hooda ‏

அவர்கள் திரும்பவும் எங்கள் மனிதர்களைக் கொன்றுவிட்டார்கள். பேசிக்கொண்டே இருக்கும் தேசமான இந்தியாவுக்கு உங்களை வரவேற்கிறேன். ஆக்‌ஷன் வேண்டுமென்றால் நாங்கள் படங்களைப் பார்ப்போம். #WakeUpModi

Milind ‏

பிரதமரையும், பாதுகாப்புப் படையையும் நம்புவோம். தேவையான நடவடிக்கைகளை அவர்கள் எடுப்பார்கள். பாகிஸ்தான் பிரச்சினையை நிரந்தரமாகத் தீர்த்து வைப்பார்கள். அனிச்சையாய், யோசித்து செய்யாத எந்த நடவடிக்கையும் எடுக்கப்படக்கூடாது.

Rathey

யூரி தாக்குதலுக்கு எதுவும் செய்யாமல் இருந்து, பாகிஸ்தானின் பலத்தை அதிகப்படுத்தி விடாதீர்கள். #WakeUpModi

v.asish kumar

#WakeUpModi என்னும் ஹேஷ்டேகை எளிதாக ட்ரெண்ட் செய்துவிடலாம். ஆனால் ஓர் அரசாங்கம் தகுந்த நடவடிக்கை எடுக்கக் கொஞ்சம் அவகாசம் தேவை.

Humble Joe

இந்தியாவுக்கு #WakeUpModi தேவைதான். ஆனால் அதைவிட முக்கியம் #WakeUpIndia. இந்திய மக்கள்தான் நாட்டை மதம், இனம், மொழி, பணம், கட்சிகள் தாண்டி நல்ல மனிதர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x