Published : 27 Feb 2017 01:46 PM
Last Updated : 27 Feb 2017 01:46 PM
நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்ததை அடுத்து, நிலத்தைப் பாழாக்க அனுமதிக்க மாட்டோம் என்று கூறி தமிழர்கள் போராட்டக் களத்தில் குதித்திருக்கின்றனர். இணைய வெளியிலும் போராட்டம் பற்றிய கருத்துகள் #நெடுவாசல் #Neduvasal #SaveNeduvasal என்ற ஹேஷ்டேகுகளில் பகிரப்பட்டு வருகின்றன. அவற்றின் தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுப்பு இன்றைய நெட்டிசன் நோட்ஸில்...
Shan Karuppusamy
காரில் செல்பவர்கள் வாரத்தில் இரண்டு நாட்கள் பைக்கில் செல்கிறோம். பைக்கில் செல்பவர்கள் அவ்வப்போது பஸ்ஸில் போகிறோம். சைக்கிளில் அலுவலகம் செல்லத் தொடங்குகிறோம். எப்படியாவது நெடுவாசலைத் தோண்டி அதன் மூலம் கிடைக்கப்போகும் ஹைட்ரோகார்பனை உங்களுக்கு தமிழ்நாட்டிலேயே மிச்சப்படுத்தித் தருகிறோம். அந்த கிராமத்தை விட்டுவிடுங்கள் சாமி.
D S Gauthaman
நெடுவாசல் பகுதி மக்களிடம் மண்ணெண்ணைய் எடுப்பதாகச் சொல்லியும், ஒரு குழாய் பதிப்பதால் எந்த பாதிப்பும் இருக்காது என்று சொல்லியும்தான் முதலில் ஒப்புதல் பெற்றுள்ளார்கள். மக்களின் கல்வியறிவுக் குறைபாட்டை சாதகமாக்கி, மிகச் சாதுர்யமாகவும், பணத்தாசை காட்டியும் அதிகாரிகள் காரியம் சாதித்திருப்பது தெரிகிறது. உண்மையில் நேர்மையாக அனைத்தையும் விளக்கி அதன்பின்பு அவர்களுக்கு ஏற்பிருக்கிறதா, எதிர்ப்பிருக்கிறதா என்பதையெல்லாம் அறிந்து செயல்பட வேண்டியதே அதிகாரிகளின் கடமை. இது வெறும் பாலங்கட்ட நிலத்தைக் கையகப்படுத்துவது போன்ற நிகழ்வல்ல.
சுற்றுச்சூழலைப் பாதித்து, மண்வளத்தையும், நீர்வளத்தையும் சீர்குலைக்கும் அபாயகர திட்டமாகும். மக்களை ஏமாற்றிச் சம்மதிக்க வைத்துவிட்டு, தற்போது விழிப்புணர்வு வந்ததும், மீத்தேன் என்ற பெயரை மாற்றுவதும், முன்பு மட்டும் ஏன் ஒப்புக்கொண்டீர்களெனக் கேள்வியெழுப்புவதும், அதிகார வர்க்கத்தின் அயோக்கியத்தனமே.
Rajan Nellai
நெடுவாசல்... தமிழனுக்கு போராட்டமே வாழ்க்கையாகி விட்டது இவ்வுலகில்...
கதிரவன் கரன்
சல்லிக்கட்டு போராட்டத்துல கலந்துக்க முடியலயேன்னு வருத்தப்பட்டவங்களுக்காகவே, மத்திய அரசு கொடுத்த வாய்ப்புதான் நெடுவாசல்.
தாரா
நலத்திட்டங்களை ஆகாயத்திலா மேற்கொள்ள முடியும்?- இல. கணேசன்
கண்ணை விற்று சித்திரம் வாங்க எத்தனிக்கும் கூட்டம். இந்தியா நல்லா இருக்க தமிழ்நாட்டை நாம் தியாகம் செய்ய வேண்டுமாம். ஏனெனில் இவர்கள் செய்வது நலத்திட்டமாம். ஏனய்யா எது நலத்திட்டம்? விவசாய நிலங்களை மலடாக்கிடும் இம்முயற்சியா நலத்திட்டம்?
Gowri Sanker
வாடிவாசல்... நெடுவாசல் மட்டுமல்ல.. விட்டால், தமிழனின் வீடு வாசல் கூட பறிக்கப்படும். விழித்தெழு தமிழா.
Siva Prakash
நெடுவாசல் போராட்டத்திற்கு செல்பவர்கள் எல்லாம் ஹைட்ரோ கார்பனால் ஆன பெட்ரோல், டீசல், கியாஸ் பயன்படுத்தாமல், வண்டியைத் தலையில் தூக்கி வைத்துக்கொண்டு செல்லுமாறு கேட்டுக்கொள்கிறேன். முதலில் நாம் யோக்கியனாக இருக்க வேண்டும் அல்லவா.
போராட்டத்திற்கு தமிழகத்திலிருந்து வருகை தருகின்றவர்களுக்கு இலவசமாக தங்க திருமண மண்டபம், தனியார் விடுதிகள் மற்றும் எனது இல்லத்திலும் ஏற்பாடு செய்துள்ளேன்.
நெடுவாசல் கிராமத்திற்கு வருவதற்கான வழித்தட குறிப்புகள்
தஞ்சையிலிருந்து பட்டுகோட்டை:
பட்டுகோட்டையிலிருந்து ஆவணம் கைகாட்டி வழியாக புதுக்கோட்டை செல்லும் பேருந்தில்
பேருந்து நிறுத்தம் ஆவணத்தில் அல்லது கைகாட்டியில் இறங்கி ஆட்டோ மூலமாக நெடுவாசல் சென்றடையலாம்
புதுக்கோட்டையிலிருந்து ஆவணம் கைகாட்டி வழியாக பட்டுகோட்டை செல்லும் பேருந்தில் வரலாம்
ஆவணத்தில் அல்லது கைகாட்டியில் இறங்கி ஆட்டோமூலமாக நெடுவாசல் சென்றடையலாம்.
காரைக்குடியிலிருந்து அறந்தாங்கி கீரமங்கலம் வழியாக பட்டுகோட்டை பேருந்தில் ஏறவும்.
ஆவணத்தில் அல்லது கைகாட்டியில் இறங்கி ஆட்டோமூலமாக நெடுவாசல் சென்றடையலாம்.
எவ்விதக் கட்சியையும் சாராதவர்களாக இருந்து வந்து தங்கிசென்றால் இன்னும் சிறப்பு. தொடர்புக்கு: 9047357920.
Gowri Kiruba
இத்தனை எதிர்ப்புகளை மீறி இந்தத் திட்டத்தை நிறைவேற்றி, பூமிக்கு அடியில் இருந்து அவர்கள் எடுக்கப்போவது எரிவாயு அல்ல. அது விவசாயிகளின் மூச்சுக்காற்று.
Radha Ramanan
டிசம்பர் அப்பல்லோ வாசல்...
ஜனவரி வாடிவாசல்...
பிப்ரவரி நெடுவாசல்...
Arockia Edwin Nellai
ஜல்லிக்கட்டு to நெடுவாசல் போராட்டம்!!
இரண்டும் என்றும் ஒன்றாகப்போதில்லை. நெடுவாசல் ஜல்லிக்கட்டை விட முக்கியம் என்றாலும் ஆட்சியாளர்கள் அதை முளையிலேயே நசுக்குவர். ஜல்லிக்கட்டைப் போல் அல்லாமல் இந்த பிரச்சினைக்கு அரசியல் கட்சிகளின் குறிப்பாக எதிர்கட்சியான திமுகவின் உதவி தேவை. இது நீண்ட போராட்டம் இதற்கு அரசியல் ஆதரவு இல்லாமல் வேரோடு அழிக்க முடியாது. குறிப்பாக மத்திய அரசுத் திட்டத்தில் பின்வாங்கலென்பது கடினம். ஆதலால் இதை ஜல்லிக்கட்டு போல் எளிதாக எடுக்க வேண்டாம். கவனமாக கையாளுங்கள்.
K Jayamurugan
ஆயிரம் கைகள் சேர்ந்துவிட்டால் ஆயுதம் ஏதும் தேவையில்லை. வாடிவாசல் முதல் நெடுவாசல் வரை..
Madhu Kar
ஓபிஎஸ் பதவியேத்தாரு, சின்னம்மாதான் அடுத்து முதல்வரா வரனும்னு சொன்னாங்க.. மெரினா போராட்டம் வந்துச்சு... டெல்லி போய் பிரச்சனைய தீர்த்துட்டு வந்தாரு... பதவி போச்சு....
எடப்பாடி பதவியேத்தாரு, தினகரன்தான் அடுத்து முதல்வரா வரனும்னு சொன்னாங்க.. நெடுவாசல் போராட்டம் வந்திருக்கு.... இப்ப டெல்லி போயிருக்காரு...
எல்லாத்தையும் யாரோ உக்காந்து எழுதி வெச்சு நடத்துற மாதிரியே இருக்குல.... யாரா இருக்கும்...?
Jenin Suresh
வாடிவாசல் திறக்க வரிந்துகட்டிய தமிழகமே,
நெடுவாசல் மூட விரைந்தோடி வா!
Paal Nilavan
ஒட்டுமொத்த இந்தியாவின் கனிம வள தேவைகளை ஏமாளி தமிழகம் பூர்த்தி செய்யும். தமிழக நீராதார தேவைகளின் பிரச்சினைகள் இன்னதென்று சொல்லியும், நதி நீர் இணைப்பு உள்ளிட்ட யோசனைகளைக் காது கொடுத்து கேட்பார் யாருமில்லை.
Abu Muhammed
நெடுவாசல் போராட்டக்காரர்களே, மெரினாவில் கலந்தது போன்று விஷக்கிருமிகள் கலக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
இரா.சரவணன்@erasaravanan
மீத்தேனை எதிர்த்து 'கத்துக்குட்டி' படத்தை தயாரித்த ராம்குமார் ஊர் நெடுவாசல். படத்தின் போராட்டங்கள் இன்று நிஜத்தில்.
tara_views
மோடி நம்மைத் தியானம் செய்யச் சொல்கிறார். இல. கணேசன் தியாகம் செய்யச் சொல்கிறார். #நெடுவாசல்
சிந்தனைவாதி@PARITHITAMIL
தண்ணீரும், மின்சாரமும் மட்டும் தாருங்கள். உலகுக்கே சோறு போடுகிறோம். சோழ வள நாடு சோறுடைத்து! #நெடுவாசல்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT