Published : 13 Jul 2016 11:02 AM
Last Updated : 13 Jul 2016 11:02 AM
பத்தூர் நட ராஜர் சிலை தொடர்பான மண் ஆய்வுகள் வெவ்வேறான முடிவுகளைச் சொன்னதால், ‘இது பத்தூர் நடராஜர் இல்லை’ என வாதிட்டது கனடா ஆர்ட் கேலரி. அப்போது குறுக்கிட்ட தொல்லியல்துறை ஆய்வாளர் நாகஸ்வாமி, ‘பேரிடர் அல் லது தீ விபத்து சம்பவங்கள் நிகழும்போது, குழி வெட்டி அதில் மணல் பரப்பி அதன் மீது சுவாமி சிலைகளை வைத்து மீண்டும் அவற்றின் மீது மண லைப் போட்டு மூடி, அதன் மீது மண்ணைத் தள்ளி மூடி சிலை களைப் பாதுகாக்க வேண்டும் என்பதுதான் ஆகம விதி.
அந்நியர் படையெடுப்பின் போது தமிழக கோயில்களில் இருந்த ஐம்பொன் சிலைகளும் விலை மதிப்பற்ற பொருட்களும் கொள்ளையடிக்கப்பட்டன. பேரிடர் நிகழ்வுக்கு நிகரான அந்தத் தருணத்தில் சிவபுரம் சிலைகள் ஆகம விதிப்படி மண் ணுக்குள் வைத்து மூடப்பட்டி ருக்கின்றன. அதனால்தான் சிலையில் இருக்கும் மணலும் சிலை இருந்த இடத்தில் எடுக்கப்பட்ட மண் மாதிரியும் வெவ்வேறாக இருக்கின்றன’ என்று வாதிட்டார்.
இப்படி மொத்தம் 29 கேள்வி களுக்கு தகுந்த ஆதாரங்களுடன் அவர் எடுத்துவைத்த வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதி, ‘தொல் லியல் துறையின் இணையற்ற நிபுணர் (Unparalleled Expert in this Field) என நாகஸ்வாமியைப் பாராட்டியதுடன் நடராஜர் சிலையையும் இந்தியா வசம் ஒப்படைக்க ஆணையிட்டார். ஆனால், இந்தத் தீர்ப்பை ப்ரிவி கவுன்சிலுக்குக் கொண்டுபோனது கனடா ஆர்ட் கேலரி. அங் கேயும் நீதிமன் றத் தீர்ப்பு உறுதி செய்யப் பட்டதால் 1991-ல் பத்திரமாக தாயகம் திரும்பினார் பத்தூர் நடராஜர்.
லண்டனைச் சேர்ந்தவர் பி.பி.சி. செய்தியாளர் பீட்டர் வாட்சன். தனது ஸ்டிங் ஆப ரேஷன் மூலம் சிலைக் கடத்தல் புள்ளிகள் ஒன்பது பேரைச் சிறைக் கம்பிகளுக்குள் சிக்க வைத்த துணிச்சலான பத்திரிகையாளர் இவர். சிலைகள் மற்றும் பழமையான கலைப் பொருட்கள் கடத்தல் உலகின் மர்மங்களை அம்பலப்படுத்துவதற்காக 1991-ல் ஸ்டிங் ஆபரேஷன் ஒன்றில் இறங்கினார் வாட்சன்.
நியூயார்க்கில் பிரபல கலைப் பொருள் நிறு வனம் சத்தபிஸ் ஆக்ஷன் ஹவுஸ். இதன் லண் டன் கிளை யில் பணியில் இருந்த ஜேம்ஸ் ஹாட்ஜஸ் என்ப வரை திருட்டு பட்டம் கட்டி பணி நீக்கம் செய்தது சத்தபிஸ். அந்த ஜேம்ஸ் ஹாட்ஜ ஸைத் தான் தனது ஸ்டிங் ஆபரேஷனுக்குத் தூண்டிலாக்கி னார் வாட்சன். சத்தபிஸ் நிறுவனம் எந்தெந்த வழிகளில் எல்லாம் கலைப் பொருட்களைக் கடத்திக் காசாக்குகிறது என்பதை வாட்ச னுக்கு கச்சிதமாகச் சொல்லிக் கொடுத்தார் ஜேம்ஸ்.
ஜேம்ஸின் தகவல்களை உள்வாங்கிக் கொண்டு ஆக்ஷ னில் இறங்கிய வாட்சன், இத்தாலியில் பழமையான ஓவியம் ஒன்றை விலைக்கு வாங்கினார். அந்த ஓவியத்தைக் சத்தபிஸிடம் கொடுத்து, அதை விற்றுத் தரும்படி கேட்டார். ‘இத்தாலி கலைப் பொருட்களை வெளி நாடுகளுக்குக் கொண்டு செல்ல தடை இருப்பதால் இந்தப் பொருட்களை இங்கே அதிக விலைக்கு விற்க முடியாது’ என்று சொன்ன சத்தபிஸ் நிர்வாகம், இந்த ஓவியத்தை கள்ள வழியில் சுவிச்சர்லாந்துக்கு அனுப்பி அங் கிருந்து லண்ட னுக்கு தரு வித்து நல்ல விலைக்கு விற்றுத் தரு கிறோம்’ என்று சொன் னது. அதன் படியே அந்த ஓவியத்தை சுவிட்ஸர்லாந்து வழியாக லண்டனுக் குக் கடத்திக் காசாக்கியும் கொடுத்தார்கள்.
இது தொடர்பான நடவடிக்கை கள் அனைத்தையும் தனது கேமரா வில் ஆவணப்படுத்திக் கொண்ட வாட்சன், அடுத்த கட்டமாக இந்தியாவின் பழமையான கலைப் பொருட்கள் மீதான தனது ஆர் வத்தை சத்தபிஸிடம் வெளிப் படுத்துகிறார். இந்தியா சம்பந்தப் பட்ட கலைப் பொருட்கள் கடத்தல்களைக் கவனிப்பதற்காக லண்டன் அலுவலகத்தில் ஆலிவர் ஃபோர்ஜ், பிரிண்டன் லிஞ்ச் என்ற இருவரை பிரதிநிதி களாக வைத்திருந்தது சத்தபிஸ் நிறுவனம்.
இவர்கள் இருவரும் இந்தியா வில் மும்பையைச் சேர்ந்த ஷாம் பிரதர்ஸ், ராஜஸ்தானைச் சேர்ந்த வாமன் நாராயண் கியா (Vaman Narayan Ghiya) ஆகியோருடன் தொடர்பில் இருந்தனர். இவர் களின் வழிகாட்டலுடன் இந்தியா வருகிறார் பீட்டர் வாட்சன்.
இந்தியாவில் தொன்மையான இடங்களுக்கு அவரை அழைத் துச் சென்று நோட்டம் காட்டு கிறார்கள் சத்தபிஸ் ஏஜெண்டுகள். ‘இங்கிருந்து எதை வேண்டுமானா லும் எளிதில் எடுத்துச் சென்று விட முடியுமா?’ என்று கொக்கி யைப் போடுகிறார் வாட்சன். ‘தாஜ்மஹாலில் இருந்து வேண்டுமானால்கூட ஒரு சிறு பகுதியை எங்களால் எடுத்துக் கொண்டுவர முடியும்’ என்று தங்களது திறமையின் உச்சத்தைச் சொல்லி அவரை அசர வைத்த சத்தபிஸ் தூதுவர்கள், தங்களது கேட்லாக்கை எடுத்துக் காட்டினார்கள்.
உ.பி. யோகினி சிலை
அவர்கள் காட்டிய 1988-ம் ஆண்டு விற்பனைக்கான சத்தபிஸ் யின் கேட்லாக்கில் 92-வது பொருளாக உத்தரப்பிரதேசத் தைச் சேர்ந்த விருஷ்னான யோகினி அம்மன் சிலைகளும் இருந்தன. 10-ம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்தக் கற்சிலைகள் சுமார் ஐந்தடி உயரம் கொண்டவை. உடல் பெண் வடிவிலும் தலை மட்டும் மிருக வடிவிலும் வடிக்கப்பட்ட இந்த சிலைகள் உ.பி-யின் பாந்தா மாவட்டத்தின் சொத்து. 65 சிலைகள் இருந்த இடத்தில் இப்போது 13 சிலைகள் மட்டுமே உள்ளன. கேட்லாக்கில் இருந்த யோகினி சிலைகளின் படங்களை எடுத்துக் கொண்டு பாந்தா நோக்கிப் புறப்பட்டார் பீட்டர் வாட்சன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT