Published : 10 Jan 2017 12:50 PM
Last Updated : 10 Jan 2017 12:50 PM
மத்திய அரசு ஊழியர்களின் கட்டாய விடுமுறைப் பட்டியலில் இருந்து பொங்கல் பண்டிகை நீக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியான நிலையில், அதுகுறித்து நெட்டிசன்கள் பல்வேறு விதமான கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். அவற்றின் தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுப்பு இன்றைய நெட்டிசன் நோட்ஸில்...
கட்டாய விடுமுறையாக எப்பவும் பொங்கல் இருந்ததில்லை. விருப்ப விடுமுறை பட்டியலில் இருந்தும் இப்போது தூக்கியிருக்கிறார்கள். அதான் பிரச்சினை.
அல்ட்ரா விக்னேஷ்
இவ்வளவு நாள் மத்திய அரசு ஊழியர்களுக்கு தமிழ் நாட்டில், பொங்கல் வாரத்தில் எந்த நாளில் வந்தாலும் விடுமுறை இருந்தது. இனிமே சனி ஞாயிறுகளில் வந்தால் விடுமுறை இருக்காது. அதற்கு பதிலாக வார நாட்களில் அடுத்தவர் பண்டிகையை கொண்டாடிக்கொள்ள வேண்டும் போல!
பொங்கல் எப்போதுமே தேசிய விடுமுறையாக இருந்ததில்லை என சிலர் புதிய கண்டுபிடிப்பு போல சொல்கின்றனர்.... தேசிய விடுமுறை இல்லைதான். ஆனால் மாநிலங்கள் முடிவு செய்து கொள்ளலாம் என மூன்று நாட்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதில் வழக்கமாக பொங்கல் இடம் பெறும். இவ்வாண்டு பொங்கல் அதில் இல்லை... கேட்டால் சனிக்கிழமை அவ்வளவா வேலை இருக்காது. சும்மா வந்துட்டு போங்க.. அப்படி லீவு வேணும்னா லெட்டர் கொடுங்க என்கிறார்கள்.... இதுதான் பஞ்சாயத்து..
*
மாட்டுப் பொங்கலுக்கு
போராடினோம்.
வீட்டுப் பொங்கலுக்கும்
ஏங்க வைத்திருக்கிறார்கள்.
Suriya SP
பொங்கலுக்கு லீவுவிட்டாதான் ஜல்லிக்கட்டு கேப்பாங்கனு நினைச்சுடாங்களோ?
Mani Kandan
போற போக்க பாத்தா ஜல்லிக்கட்டுக்கு அப்புறம் பொங்கலுக்காகவும் போராடனும் போலவே..
DrSurya CR
பொங்கல் மட்டுமா லீவு நாள்ல வருது?
மகாவீர் ஜெயந்தி. ஏப் 9 ஞாயிறு,
பக்ரீத் செப்டம்பர் 2 சனி,
தசரா செப்டம்பர் 30 சனி,
மொகரம் அக்டோபர் 1 ஞாயிறு,
குருநானக் ஜெயந்தி நவம்பர் 4 சனி,
மிலாடி நபி டிசம்பர் 2 சனி.
Nelson Xavier
70 ஆண்டுகளுக்கு முன் வந்த சுதந்திர, குடியரசு தினத்தை நாட்டின் இறையாண்மைக்காக மதிக்கிறோம். தீபாவளி, கிறிஸ்துமஸ்,ரம்ஜான் இவையெல்லாம் அவரவர்களின் மதநம்பிக்கைக்காக மதிக்கிறோம்.
ஆனால் இந்தியா பிறப்பதற்கு முன்பாகவும், பல மதங்களே உருவாவதற்கு முன்பாகவும், கொண்டாடப்பட்டு வரும் உழவர் திருநாளை முதன்மையான விழாவாக, சுதந்திர, குடியரசு தினங்களை உள்ளடக்கிய கட்டாய விடுமறை பட்டியலில் அல்லவா சேர்த்திருக்க வேண்டும்.
இன்னும் சொல்லப்போனால் இந்தியாவில் 60% மக்கள் உழன்று கொண்டிருக்கும் வேளாண்தொழிலின் அடையாளமான உழவர் திருநாளை தேசிய தினமாக அல்லவா அறிவித்திருக்க வேண்டும். (எந்த மாநிலமாக இருந்தாலும் அவர்களின் அறுவடைத் திருநாளையும்) அதுதானே இந்திய உழைக்கும் வர்க்கத்தை அடையாளப்படுத்தும் நாள்.
30 லட்சம் சீக்கியர்கள் கொண்டாடும் குருநானக் ஜெயந்திக்கும், 50 லட்சம் சமணர்கள் கொண்டாடும் மகாவீர் ஜெயந்திக்கும் 85 லட்சம் புத்த மதத்தினர் கொண்டாடும் புத்த பூர்ணிமாவுக்கும் கட்டாய அரசு விடுமுறை. ஆனால் ஆறு கோடி தமிழர்கள் கொண்டாடும் பொங்கலுக்கு விடுமுறை இல்லை.
ஜல்லிக்கட்டு பக்கம் கொஞ்சம் வாங்ப்பா இந்த லீவ் மேட்டர விட்டுட்டு....
விநாயகர் சதுர்த்தி, தைப்பூசம் இவையெல்லாம் இந்துக்களுக்கு மட்டுமான பண்டிகை. மிலாது நபி போன்றவை முஸ்லிம்களுக்கு மட்டுமான பண்டிகை. அதேபோல கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், மற்றும் எல்லா மதத்தினருக்குமென்று தனித்தனியாக பண்டிகைகள் உள்ளன. இவை அவரவர் வசதிக்கு விடுமுறை எடுத்துக்கொள்ள விருப்ப விடுமுறை பட்டியலில் இருந்தால் தவறேதுமில்லை.
ஆனால் பொங்கல் உழவனுக்கான திருநாள். எல்லா ஜாதி எல்லா மதமும் இணைந்து கொண்டாடக்கூடிய பண்டிகை. எனவே இது கண்டிப்பாக கட்டாய விடுமுறை பட்டியலில் இருப்பதே சரியாக இருக்கும்.
Vaa Manikandan
நாடே நாசமாகும் போது பீப் சாங் போதுமானதாக இருந்தது. ஜல்லிக்கட்டு தேவை என தமிழகமே கேட்கத் தொடங்கிய போது பொங்கல் தின விடுமுறை குளறுபடி போதுமானதாக இருக்கிறது. வெண்ணை திரண்டு வருதுய்யா.. யாரோ கிளப்பிவிடுறாங்கன்னு இருக்கிறதை விட்டுட்டு பறக்கிறதை பிடிக்காதீங்கய்யா.
தமிழர் திருநாளான பொங்கல் திருநாள் மத்திய அரசின் கட்டாய விடுமுறைப் பட்டியலில் இருந்தது போலவும், நடப்பாண்டில் அது கட்டாய விடுமுறைப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு, விருப்ப விடுமுறை பட்டியலில் சேர்க்கப்பட்டது போலவும் செய்திகள் வெளியாயின. எனக்கு விபரம் தெரிந்தவரை கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாகவே மத்திய அரசின் கட்டாய விடுமுறை பட்டியலில் பொங்கல் திருநாள் இல்லை. விருப்ப விடுமுறைப் பட்டியலில் தான் இடம்பெற்றுள்ளது.
இந்தியாவின் சில பகுதிகளில் மட்டும் கொண்டாடப்படும் புத்த பவுர்ணமி, குருநானக் பிறந்த நாள், மகாவீரர் ஜெயந்தி ஆகியவை கட்டாய தேசிய விடுமுறை நாட்களில் இடம் பெற்றுள்ள நிலையில், பொங்கல் திருநாளையும் அந்த பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். விரைவில் பிரதமர் நரேந்திர மோடி அவர்களை டெல்லியில் சந்தித்து இந்த கோரிக்கையை வலியுறுத்த உள்ளேன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT