Last Updated : 13 Apr, 2017 10:58 AM

 

Published : 13 Apr 2017 10:58 AM
Last Updated : 13 Apr 2017 10:58 AM

இதுதான் நான் 71: அப்பா, அம்மா மாதிரிதான் விவசாயிகளும்!

பொதுவா நகரத்துல பசங்க படிப்புலயோ, வேலையி லயோ சரியில்லேன்னா அவங்களைத் திட்டுறப்ப, ‘‘போ.., கிராமத்துக்கு போய் ஆடு, மாடுங்களை மேய்க்கத்தான் நீ லாயக்கு?’’ன்னு சொல் வாங்க. நிஜமாவே ஆடு, மாடுங்களைப் பார்த்துக்கிறது சாதாரண விஷயம் கிடை யாதுங்க. நம்மைச் சுற்றி வயல்வெளி, ஆடு மாடுங்க, மரம் செடி, கொடி, இயற்கைன்னு இருக்குறது எவ்வளவு பெரிய விஷயம்!

மனசையும், உடம்பையும் ஆரோக் கியமாவும், ஃபீஸ்புல்லாவும் வைக்கிற இடம் கிராமம்தாங்க. ஆனா, இதை நாம பசங்களிடம் சொல்ற விதம் ராங்கா இருக்குறதுனால, அவங்களுக்குத் தெரி யாமலேயே கிராமத்துக்குப் போறதே சரியில்லைன்னு மனசுக்குள்ள பதிஞ் சுடுது. தெரிந்தோ, தெரியாமலோ அப்படி ஒரு எண்ணத்தை அவங்க மனசுல விதைக்க பெரியவங்க நாம காரணமா இருந்துடுறோம். நாம அப்படி இருக்க வேணாம்னு தோணுது.

நகரத்தில் இருக்குற பசங்க ஒரு பல்லியையோ, சின்னச் சின்னப் பூச்சி யையோ பார்த்தாக் கூட பயப்படுறாங்க. ஆனா, அதுவே கிராமத்துல இருக்குற பசங்க அதைத் தன்னோட லைஃப்ல ஒரு பார்ட்டா எடுத்துக்கிறாங்க. தைரியமா இருக்காங்க. பொதுவா, ஒரு துறை யில வேலை பார்க்குறப்ப அதில் ஒரு விஷ யத்தை பண்ணிட்டு, அதை இப்படி செஞ் சோம், அப்படி செஞ்சோம்னு சொல் வோம். நானே, எவ்வளவோ தடவை அப்படி சொல்லியிருக்கேன். இப்பவும் சொல்லிட்டிருக்கேன். இவ்வளவு வாரம் எழுதிட்டிருக்கேனே(!?) ஆனா, விவசாயிங்க அப்படி எதுவுமே பேசிக்காம, அவங்க வேலையைப் பார்த்துட்டே இருப்பாங்க.

தினமும் ஏக்கர் கணக்குல உழுது, அதுக்கு தண்ணிவிட்டு, ஒரு கட்டத்துல அறுவடை செய்ற விவசாயிதான் மிகப் பெரிய கிரியேட்டர்! ஒரே தோட்டத்துல கம்பு, சோளம், காய்கறிங்கன்னு சீசனுக்கு சீசன் என்னென்ன விளையும்? அதை எப்படி விளைவிக்கணும்னு கடுமையா உழைக்கிற விவசாயியைவிட பெரிய புரொடியூசர், ஆர்ட் டைரக்டர், ரைட்டர், டைரக்டர் யாரா இருக்க முடியும்?

விவசாயி ஒரு உணவுப் பொருளை உற்பத்தி செஞ்சு அந்தப் பொருளை மிக வும் கம்மியான விலைக்குதான் விற் கிறார். அதுக்கு அப்புறம் அது மார்க் கெட்ல, தான் விற்ற விலையைவிட 10 மடங்கு, 20 மடங்கு அதிகமா விற்கிறது தெரிஞ்சாக்கூட, விவசாயி அடுத்த முறை அவரோட விலையை ஏத்துறது இல்லை. முன்னாடி வித்த அதே கம்மியான விலைக்குத்தான் விற்பார். விவசாயிங்க எப்பவுமே பெரிய லாபம் வைக்கிற தில்லை. மத்த எந்தத் துறையில இருக் கும்போதும் ஒரு வேலையை நல்லா செஞ்சா, அந்த வேலை செஞ்சவங் களுக்கு புரொமோஷன் இருக்கும். சம் பளம் உயர்த்திடுவாங்க. அந்தப் பொரு ளோட விலையையும் ஏத்திடுவாங்க. அந்த மாதிரியெல்லாம் விவசாயி எப்ப வுமே செய்றதில்லை. அவங்க பெருசா ஆசையும் படுறதில்லை.

ஏ.சி-யில வெச்சு விற்கிற காய்கறி, பழங்களைத்தான் நாம எப்பவுமே வாங்கு றோம். நேரடியா கிராமங்களுக்குப் போய் உழவர்களை சந்திச்சு, ‘‘இது எவ்வளவு? இன்னைக்கு என்ன காய்கறி, உணவுப் பொருட்களைக் கொடுக்க முடியும்?’’னு அவங்களோட ஒரு டை - அப் போட்டு உணவுப் பொருட்களை வாங் கினா, அவங்களுக்கும் கடன் உள்ளிட்ட கஷ்டங்க குறையும். நமக்கும் ப்ரெஷ்ஷா நல்ல தரமான உணவுப் பொருட்கள் கிடைக்கும். இதை நிறையப் பேர் செஞ்சா நல்லாயிருக்கும்.

இப்போ இருக்குற எல்லா தாத்தாக் கள்ல 80 சதவீதம் பேர் விவசாயிங்கதான். பெரும்பாலான விவசாயிங்களோட வாகனம் சைக்கிள்தான். இல்லைன்னா, நடந்தே போவாங்க. கிட்டத்தட்ட நம்ம அப்பா, அம்மா மாதிரிதான் விவசாயிங் களும். என்ன செஞ்சாலும் அதை சொல்லிக்காட்ட மாட்டாங்க. அவங்க பாட்டுக்கு வேலை பார்த்துட்டே இருப்பாங்க.

ஸ்கூல்ல இப்போ எல்லாம் பசங் களை சுற்றுலான்னு எங்கெங்கோ கூட்டிட் டுப் போறாங்க. போகட்டும். ஆனா, கிராமங்களுக்கு கூட்டிட்டுப் போய், அங்கே இருக்குற வாழ்க்கையைப் பற்றி யும் சொன்னா, இன்னும் நல்லா இருக்கும். நான் என் பசங்களை அழைச்சுட்டுப் போறேன். கிராமங்களுக்கு போக ஆரம்பிச்சதுக்கு அப்புறம் இப்போ பெரியவன், ‘‘வொயில்டு லைஃப் போட்டோகிராஃபர் ஆகணும்’’னு சொல் றான். சின்னவன், ‘‘வொயில்டு லைஃபை சேவ் பண்ணணும்’’னு சொல்றான். இன் ஜினீயர், டாக்டர் ஆகணும்னு சொல்லாம, இப்படி ஆகணும்னு சொல்றாங் களேன்னு சந்தோஷமா இருக்கு!

நம்ம எல்லாருக்குமே தேசப் பற்று நிச்சயம் இருக்கும். நான் ஒவ்வொரு முறையும் விமானத்துல வெளிநாட்டுக் குப் போறப்ப, நம்ம எல்லையைக் கடக்குறப்ப, ‘இந்தியாவை விட்டு போறோமே!’ன்னு என்னை அறியாமலே ஒரு ஃபீலிங் வந்துடும். கொஞ்ச நேரத்துக்கு மனசு ஒரு மாதிரி இருக்கும். இப்படி நம்மை அறியாமலேயே ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரி தேசப் பற்று இருக்கும். அந்த மாதிரி நம்ம விவசாயிங்க மேலயும் அவசியம் பற்று வைக்கணும்.

பாடப் புத்தகத்துல தமிழ், இங்கி லீஷ், கணக்குன்னு வெச்சிருக்கிற மாதிரி, மாணவர்களுக்கு ஒரு பாடமா விவசாயத்தையும் கொண்டு வரணும். அதுக்குத்தான் விவசாயக் கல்லூரிகள், பல்கலைக்கழகங்க இருக்கேன்னு சிலர் சொல்லலாம். கரெக்ட்தான். இருந்தா லும், பிளஸ் 2 படிக்கிறதுக்குள்ள வாரத்துக்கு ஒரு பீரியடாவது விவ சாயத்தைப் பற்றி பாடம் படிச்சா நல்லா இருக்கும்.

‘’இந்த வேலைக்குப் போனான் கெட் டுப் போய்ட்டான். அந்த வேலைக்குப் போனான் கெட்டுப் போய்ட்டான்’’னு சொல்லி நாம் கேள்விப்பட்டிருப்போம். யாராவது ஒருத்தங்க விவசாயம் செஞ்சு கெட்டுப் போய்ட்டாங்கன்னு சொல்லிக் கேள்விப்பட்டதே இல்லை. அப்படிப்பட்ட விவசாயிகளை நாம் கண்டுக்கிறது இல்லைங்கிறதுதான் கவலையா இருக்கு.

எனக்கு ரொம்பப் பிடிச்ச வேலை டிராஃபிக் கான்ஸ்டபிள், பியூன் வேலைன்னு முன்னாடியே சொல்லி யிருக்கேன். காரணம், அவங்களோட சுறுசுறுப்பும், டெடிகேஷனும்தான். அந்த மாதிரி விவசாயமும் எனக்கு ரொம்பப் பிடிக்கும். ஆனா, விவசாயிங்க இன்னைக்கு எல்லாத்தையும் போரா டித்தான் பெற வேண்டியிருக்கு. இதெல்லாம் போராடிப் பெறணும்னு அவசியமே இல்லை. நம்ம பெற் றோருக்கு மதிப்பு கொடுக்க யோசிக் கிறோமா? இல்லையே? அப்புறம் ஏன், விவசாயத்துக்கு மட்டும் போராடணும்? ஆனா, இங்கே அதை போராடி வாங்க வேண்டிய சூழல் உருவாகிடுச்சு.

விவசாயம், மாட்டு வண்டியில சுத்துறது, வயல்வெளியில உட்கார்ந்து சாப்பிடுறதுன்னு எனக்கு நிறைய அனுபவம் இருக்கு. யதார்த்தம், அன்பு, உறவுங்க, டென்ஷன் இல்லாத வாழ்க் கைன்னு இப்படி நிறைய கத்துக் கொடுக்குற கிராமம் வைராக்கியத்தை யும் கற்றுக் கொடுக்கும். இதுக்கு மைசூர் பக்கத்துல எங்களோட தூரா கிராமத்துல வாழ்ந்துட்டிருக்குற என் பாட்டியே உதாரணம். அப்படி என்ன ஒரு வைராக்கியம்? அதை அடுத்து சொல்றேனே.

- இன்னும் சொல்வேன்.







FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x