Published : 07 Apr 2017 03:50 PM
Last Updated : 07 Apr 2017 03:50 PM
64-வது தேசிய திரைப்பட விருதுகள் டெல்லியில் இன்று அறிவிக்கப்பட்டன. இதில் ராஜூமுருகன் இயக்கத்தில் வெளியான 'ஜோக்கர்' சிறந்த தமிழ் படத்திற்கான விருதை வென்றுள்ளது. சீனுராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான 'தர்மதுரை' படத்தில் இடம்பெற்ற 'எந்தப்பக்கம்' பாடலுக்காக, வைரமுத்து சிறந்த பாடலாசிரியர் விருது வென்றுள்ளார். இவை குறித்த நெட்டிசன்களின் கருத்து இன்றைய நெட்டிசன் நோட்ஸில்...
Gokula Krishnan Bhojan
இதுவரை 64 தேசிய விருதுகளில் 10, தமிழ் பாடலாசிரியர்களுக்கு கிடைத்திருக்கிறது. 10ல் 7 வைரமுத்துவுக்கு.
ஆகப்பெரும் சாதனைதான். வாழ்த்துகள் கவிஞரே!!!
Umanath Selvan
டெல்லியில் விவசாயிகள் போராடும்போது, 'ஜோக்கர்' படத்திற்கு தேசிய விருது கிடைத்திருப்பதற்கு பெயர் தான் நகைமுரண்.
Kishore Kumar
தேசிய விருது வாங்கும் மேடையில் கண்டிப்பாக விவசாயிகளின் குரலை ராஜூ எழுப்புவார்.
நிலா கண்மணி
எந்தப் பக்கம் போகும் போதும் பாடல்- தர்மதுரை
''நீ இன்னோர் ஊரில்.. இன்னோர் பெயரில் வாழ்ந்து விடு...''
இது ரொம்பவே பிடிச்ச வரி.. வரியின் ஆழத்த அடிக்கடி யோசிச்சிருக்கேன் .. வாழ்த்துகள்.
Krishna Kumar
'ஜோக்கர்' படத்துக்கு தேசிய விருது. சிறப்பு.
ஆனால் அந்த படத்தில் உள்ள கருத்துகள் செயல்பாட்டுக்கு வந்தால் நாடு நலம்பெறும்.
Gowri Gurunathan
இந்த மாதிரி யதார்த்த படம் எடுத்தா, பல ஜோக்கர்கள் பார்க்காதுங்கனு தெரிந்தும், தில்லா எடுத்த யதார்த்த இயக்குனர் ராஜு முருகனுக்கு முதல் வாழ்த்துகள்.
Mari Selvam
தர்மதுரை - 'எந்த பக்கம் காணும் போதும்' பாடலுக்காக கவிஞர் வைரமுத்துவிற்கு தேசிய விருது. சீனு ராமசாமி - வைரமுத்து - விஜய் சேதுபதி கூட்டணிக்கு இரண்டாவது தேசிய விருது.
பா.மீனாட்சி சுந்தரம்
பொதுவாக மனச்சோர்வு ஏற்பட்டால் நான் எடுத்துக் கொள்ளும் அதிகபட்ச மருந்து பாட்டு கேட்பது தான். அதிலும் சமீப நாட்களில் மனச்சோர்விலிருந்து என்னை மீட்டது #தர்மதுரை படத்தில் இடம்பெற்ற "எந்தப் பக்கம் காணும்போதும் வானம் ஒன்று" என்ற பாடல். இன்றைய தேசிய விருது பட்டியலில் இந்த பாடலும் அடக்கம்.
மனசை சலவை செய்ய சிறு கண்ணீர்த்துளி தான் உண்டு
உயிரை சலவை செய்ய பெரும் காதல் நதி உண்டு
உன் சுவாசப் பையை மாற்று அதில் சுத்தக் காற்றை ஏற்று
நீ இன்னொரு உயிரில் இன்னொரு பெயரில் வாழ்ந்து விடு.
கவிப்பேரரசு வைரமுத்து அவர்களை வாழ்த்த வயதில்லை. வணங்குகிறேன்.
பரிமேலழகன் பரி
இயக்கியது இரண்டே படங்கள். இரண்டாவது படத்திற்குத் தமிழில் சிறந்த படத்திற்கான தேசிய விருது. வட்டியும் முதலுமா எடுத்துட்டாரு. வாழ்த்துகள் ராஜூ முருகன்.
Udhai Kumar
63 வருஷமா இல்லாத ஒரு விஷயத்தை தேசிய திரைப்படக்குழு செஞ்சிருக்கறத பாராட்டத் தோணுது.
திரைப்படங்கள்ல நடிக்கின்ற பல ஹீரோக்களுக்காக உயிரை பணயம் வச்சு டூப் போட்டு மலை உச்சியிலிருந்து குதிச்சு, குட்டிக்கரணம் போடறது, பல பேர்களோட பாய்ஞ்சு பாய்ஞ்சு சண்டை போடறது, எரிகின்ற காரில் இருந்து தப்பிச்சு வெளியே வர்றது இப்படி திரைப்படங்களில் பல சாகசங்கள் புரியற ஸ்டன்ட் கலைஞர்களை தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கறப்போ கண்டுக்கறதே இல்லே. இந்த வருஷம் தான் சிறந்த ஸ்டன்ட் மாஸ்டருக்கும் ஒரு தேசிய விருதினை அறிவிச்சு இருக்காங்க..
அந்த வகையில் 'புலிமுருகன்' படத்துக்கு ஸ்டன்ட் மாஸ்டராக பணிபுரிந்த பீட்டர் ஹெய்னுக்கு சிறந்த ஸ்டன்ட் மாஸ்டருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது..
ஆல்தோட்டபூபதி @thoatta
'ஜோக்கர்' படத்துக்கு விருது ஓகே, மிச்சதுல பல விருதுகளே ஜோக்கா தெரிவது எனக்கு மட்டும் தானா?
Vijay Ramani @Vijay_Ramani
எங்கள் தகடூர் (தர்மபுரி) மண்ணின் வாழ்வியலையும், அரசியலின் லட்சணத்தையும் சேர்ந்து படைத்த 'ஜோக்கர்' திரைப்படத்திற்கு தேசிய விருது.
VarunBalaKumar @iam_VBK
ஏழாவது தேசிய விருது- மற்றவர்களுக்கு விருதுகளால் பெருமை; உங்களால் விருதுக்கு பெருமை. #vairamuthu.
RAMANARAYANAN @TRICHYRAM
நம்மள திட்றவனுக்கு நாமே விருது வழங்குவதுகூட ஒரு வகை ஜென் நிலை.
ஜோக்கர் - தேசிய விருது.
நிலவின் காதலன் @NatesanArul
'ஜோக்கர்' படத்துக்கு தேசிய விருது.
கொடுத்த இந்தியா இப்போ 'ஜோக்கர்'.
விருதை வாங்கிட்டா ராஜு முருகன் 'ஜோக்கர்'.
Sushima Shekar @amas32
ஏதாவதொரு நா.முத்துகுமார் பாடலுக்கு தேசிய விருது கிடைத்திருக்கலாம்! ப்ச்..
சந்தனார்
உத்தரப்பிரதேசத்துக்கு ஒரு விருதாமே.. சினிமா உலகுக்கு இணக்கமான மாநிலம் என்று..
இப்படி ஒரு விருதை இதுவரை கேட்டதுண்டா?
VeLmUrUgAn PaNnEeR
'ஜோக்கர்' திரைப்படத்துக்கு தேசிய விருது கொடுக்கத் தெரிஞ்ச அரசுக்கு, அதுல சொல்லப்பட்ட நல்ல கருத்துகளுக்கு செவி சாய்க்க எண்ணமில்லையே?
Karthick Guru
'ஜோக்கர்' திரைப்படத்திற்கு தேசிய விருது.. அவர்களுக்கு 2-வது பாராட்டு..
படம் முழுக்க நம் அரசை கேள்வி கேட்டதை அப்படியே ஏற்றுக்கொண்டு பரிசு வழங்கிய நம் இந்திய அரசுக்குத்தான் முதல் பாராட்டு..
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT