Published : 03 Jun 2016 02:02 PM
Last Updated : 03 Jun 2016 02:02 PM
இன்று (ஜூன் 3) தனது 93-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார் திமுக தலைவர் கருணாநிதி. எழுத்தாளர், பேச்சாளர், திரைப்பட கதாசிரியர், வசனகர்த்தா, பாடலாசிரியர், அரசியல் தலைவர் என பல தளங்களில் இயங்குபவரின் பிறந்தநாள் >#HBDKalaignar என்ற ஹேஷ்டேகில் இந்திய அளவில் ட்ரெண்டாகியது. ட்விட்டரில் கொட்டப்பட்ட பல பதிவுகளில் இருந்து ஒரு சிறு தொகுப்பு இன்றைய நெட்டிசன் நோட்ஸில்...
என் தாத்தா கலைஞரை சிலாகித்துப் பேசிக் கேட்டேன், என்அப்பாவும் பேசினார், நான் பேசிக் கொண்டிருக்கிறேன். அவரைப் பற்றி, என் மகனும் பேசுவான் #HBDKalaignar
வசைபாடிப் பிழைப்போர் வாழ்ந்துவிட்டு போகட்டுமே!
இன்னுமொரு நூற்றாண்டு இரு! #HBDKalaignar
தனது 93-ம் வயதிலும் அரசியல், கலை என கலந்தடிக்கும் கலைஞர் அவர்களை வணங்குகிறேன் #HBDKalaignar
உங்கள் எழுதுகோல் தலை குனிந்தால், எழுச்சி பெறுவான் தமிழன்
நூறாண்டு காலம் வாழ்க
75 திரைப்படங்கள், 93 ஆண்டு வாழ்க்கை அனுபவம், 75 ஆண்டு பொதுவாழ்க்கை, 72 ஆண்டு பத்திரிகையாளர், 68 ஆண்டு கலைத்துறை பங்களிப்பு.
சொல்லில் கவி படைத்தாய்!
திரையில் கதை படித்தாய்!
#செம்மொழி மாநாடு என்று ஒரு விழா நடத்தி தமிழைப் பெருமைப்படுத்திய கலைஞருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். #HBDKalaignar
ஊனமுற்றவர் என்ற வார்த்தையை அகற்றி மாற்றுத்திறனாளி என்றாக்கினீர்கள்! #HBDKalaignar
இளமை முதல் இன்றுவரை அந்த சுறுசுறுப்பு சிறிதும் குறையாத வற்றாத ஜீவநதி கலைஞர்! #HBDKalaignar
குறளையும் சிலம்பையும் தமிழனின் கலங்கரை விளக்கமாக்கிய திராவிட இயக்கம் வளர்க! மு.க. வாழ்க! #HBDKalaignar
கலைஞர் திருநாள் வாழ்த்துகள்! #HBDKalaignar
32 வயதில் முதல் முறையாக சட்டமன்ற உறுப்பினரான ஒருவர், 93 வயதிலும் அதனைத் தக்கவைத்திருப்பது இந்திய ஜனநாயகத்தின் அதிசயம். #HBDKalaignar
>பரம்பொருள்:தமிழக அரசியலின் அச்சு நீங்கள். பிறர் சுழல்வது இரண்டேதளம். உங்களுக்கு ஆதரவானவர்கள் அல்லது எதிரானவர்கள். #HBDKalaignar
தண்டவாளத்தில் தலை வைத்துப் படு என்றாலும் அமைச்சர் பதவி ஏற்றுக்கொள் என்றாலும் இரண்டையும் ஒன்றாகக் கருதுபவன்தான் என் தம்பி கருணாநிதி- அண்ணா. #HBDKalaignar
கை ரிக்ஷாவை ஒழித்தாய்.. பேருந்து முதல் மெட்ரோ ரயில் வரை கொடுத்தாய்..
வணங்குகிறோம்!
அவர் இல்லன்னா தமிழ் டிவிட்டர்ஸ் இத்தன பேர் இருந்திருப்போமான்னு தெரியல #HBDKalaignar
தமிழ் தளர்ந்து தடுமாறியபோது தாங்கிப்பிடித்த உனக்கு, தமிழ் உள்ளவரை தளர்ச்சியுமில்லை முதிர்ச்சியுமில்லை #HBDkalaignar
தமிழகத்தில் கணினி புரட்சியை ஏற்படுத்தியவர் #கலைஞர் #TidelPark
"தி"ராவிடம் "மு.க." இல்லாமல் முற்றுப்பெறாது.. வாழ்க என் தலைவனே.. எங்கள் குடும்பத்தின் மூத்த தமையனே.. #DMK #HBDKalaignar
அன்னம் எப்படி தண்ணீரைப் பிரித்து பாலை மட்டும் குடிக்கிறதோ அது போல அரசியலை விடுத்து கலைஞரின் மறுபக்கத்தை ரசிக்கிறேன்.
சிலேடை சிதறல்களின் சிற்பி. #HBDKalaignar
*
பாமரன் மொழியில் உலகப்பொதுமறைக்கு உரை தந்தவருக்கு இன்று பிறந்த நாள்.
24 x 7 x 365 = 93 #HBDKalaignar
ஒழிக கருணாநிதி என்றால், வாழ்க வசவாளர்கள் என்பார். அவர்தான் கலைஞர். #HBDKalaignar
*
கலைஞர் எனும் அடைமொழியிலேயே வல்லின, மெல்லின, இடையினம் கொண்டவர். கூடவே தொண்டர்கள் எனும் பெரும் படையினம் கொண்டவர்.
மு.கருணாநிதி எனும் நான்..
இந்த காட்சியை வருங்காலத்தில் நிச்சயமாக காணப் பெறுவோம் என்றே அவதானிக்கிறேன் #HBDKalaignar
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT