Published : 11 Apr 2016 04:58 PM
Last Updated : 11 Apr 2016 04:58 PM
நெல்லுக்கு குறைந்தபட்ச ஆதார விலையாக ரூ.2,500 வழங்கப்படும். சிறு, குறு விவசாயக் கடன், மாணவர் கல்விக் கடன்கள் ரத்து செய்யப்படும், விவசாயத்துக்கு தனி பட்ஜெட் போடப்படும், மதுவிலக்கை அமல்படுத்த தனிச் சட்டம் உள்ளிட்ட அம்சங்களும் வெளியாகியிருக்கிறது திமுகவின் 2016 தேர்தல் அறிக்கை.
இவற்றில் பலவும் பாமகவிடம் இருந்து காப்பி அடிக்கப்பட்டவை என்று அறிக்கை வெளியிட்டிருக்கிறார், அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ். இவை இரண்டையும் இணைய சமூகம் எப்படிப் பார்க்கிறது?
எல்லாமே வேறயா இருக்கணும்னா, திமுக மேற்கு வங்கத்துக்குத்தான் தேர்தல் அறிக்கை வெளியிடணும்...
ஏற்கனவே 7 லட்சம் கோடி விவசாய கடனை தள்ளுபடி செய்த கலைஞர் இப்பொழுதும் விவசாய கடனை தள்ளுபடி செய்வார் என்று விவசாயிகள் நம்பிக்கை .
பாமக தேர்தல் அறிக்கைய திமுக காப்பியடிச்சுதுன்னு சொன்ன பிறகுதான், பாமக அறிக்கை விட்டிருக்குன்னே தெரியும்
காப்பி பேஸ்ட் னு சொல்றவங்களே...யாரும் சொல்லாதத சொல்றேன்னு 'நாட்டை சீரழிப்பேன்'னா தேர்தல் அறிக்கை விட முடியும்?
கோடை வெயிலுக்கு மக்கள் தாகம் தீர்க்க, கலைஞர் மாம்பழத்தை பிழிந்து சாறாக தந்ததே இந்த #திமுக தேர்தல் அறிக்கை.
திமுக தேர்தல் அறிக்கை, பாமக போல தமிழில் உள்ளது.
கல்யாண வீடெனில் பட்டுச்சேலை சேலை அணிவது சகஜமே!! தேர்தல் அறிக்கையெனில் வானத்தை வில்லா வளைப்பேன் எனக் கூறுவதில் என்ன போட்டியோ?
தேர்தல் அறிக்கை பட்ஜெட் அளவுக்கு விவாதிக்கப்படுகிறது. முதல் வெற்றி..
தேர்தல் அறிக்கை மக்களுக்கு நல்லது செய்யத்தானே, அது யார் செய்தால் என்ன? இதுல காப்பி பேஸ்ட்க்கு என்ன இருக்கு புதுசா?!
நீங்கள் சொல்லும் ஆயிரம் குறைகளையும் கலைஞரின் ஐடிக்கே மென்சன் செய்து கேட்கின்ற உரிமையை உங்களுக்கு குடுத்திருப்பதும் அதே கலைஞர் தான்
கலைஞர்: உன்னைய பாமக தேர்தல் அறிக்கை வாங்கிட்டு வர சொன்னேன்.
ஸ்டாலின்: அதுதான்ப்பா இது!
கலைஞர் உணவகம் திறக்கப்படும்ன்னு அறிவிக்காம, அண்ணா உணவகம் திறக்கப்படும்ன்னு சொன்ன கருணாநிதி அவர்களின் மேல் மதிப்பு கூடுகிறது. #Respect
ஒரே நம்பிக்கை என்னடான்னா கலைஞர் சொன்னா செய்வார். மத்தவங்க வெறும் வாக்குறுதி மட்டும்தான். #திமுகதேர்தல்அறிக்கை.
மதுவிலக்க சொன்னதே நான் தான் - அன்புமணி.
தம்பி, நீங்க பால் குடிக்கிற காலத்துலயே மதுவிலக்க செஞ்சி காட்டுனவர் கலைஞர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT