Published : 02 Jun 2016 05:58 PM
Last Updated : 02 Jun 2016 05:58 PM

யூடியூப் பகிர்வு: கலெக்டர் கனவுடன் கால் விரல்களால் தேர்வு எழுதும் மாணவர்!

பல்லாரியைச் சேர்ந்த 18 வயது மாணவர் முஸ்தஃபா. பிறப்பிலேயே தனது கைகளை இழந்தவர். அது நடைமுறை வாழ்க்கையில் மிகந்த சிரமத்தைக் கொடுத்தது. ஆனால் கடின முயற்சிக்குப் பின்னர் தனது கால் விரல்களையே மூலதனமாக்கினார் முஸ்தஃபா.

மாற்றுத் திறனாளிகளுக்கான அனைத்து சலுகைகளையும், வசதிகளையும் மறுத்தார் முஸ்தஃபா. தன் கால் விரல்களாலேயே தேர்வு எழுதியவர், பத்தாம் வகுப்பில் 75 % மதிப்பெண் பெற்றார். மொழித்தாள்களைத் தவிர மற்ற அனைத்துத் தேர்வுகளையும் எழுதுபவரின் உதவி இல்லாமல் கால் விரல்களாலேயே எழுதியிருக்கிறார்.

நன்றாகப் படித்தவர், கால் விரல்களின் உதவியால் ப்ரி யூனிவர்சிட்டி தேர்வில் (கர்நாடகாவில் +2 விற்கு சமமான தேர்வு) 80% மதிப்பெண் பெற்றிருக்கிறார்.