Last Updated : 21 Sep, 2016 10:44 AM

 

Published : 21 Sep 2016 10:44 AM
Last Updated : 21 Sep 2016 10:44 AM

கைபேசியளவு தமிழ்: ஸ்மார்ட்ஃபோனை எப்படி அழைக்கலாம்?

தமிழ் மொழி குறித்து நாம் பெருமிதம் கொண்டிருக்கிறோம். எனினும், நடைமுறை வாழ்க்கையில் தமிழின் இடத்தை நாம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்துக்கொண்டே வருவதை மறுக்க முடியாதுதானே?

வளமும் வரலாறும் கொண்ட தமிழ் மொழியால் தற்கால அதிநவீனத் தொழில்நுட்ப மாற்றங்களை எளிதில் எதிர்கொள்ள முடியும் என்பதையும் அறிவோம்.

X-ray ஊடுகதிராகவும், Radiation கதிர்வீச்சாகவும், Computer கணினியாகவும், Big Bang பெருவெடிப்பாகவும் Cellphone கைபேசியாகவும் தமிழில் பிறப்பெடுத்திருப்பது எவ்வித தொழில்நுட்ப முன்னேற்றத்தையும் தமிழால் தன்வசப்படுத்த முடியும் என்பதற்கான சான்று.

நமது பெருமிதத்தின் மொழியாக மட்டுமல்லாமல் அன்றாட வாழ்க்கையின், கல்வியின் மொழியாகவும் தமிழைத் தொடர்ந்து தக்கவைக்க வேண்டியது அவசியம். அதற்கு நாம் செய்ய வேண்டியதெல்லாம் என்ன தெரியுமா? தற்கால வாழ்க்கைக்குத் தேவையான, தற்காலத் தொழில்நுட்பத்துக்குத் தேவையான தமிழ்ச் சொற்களை அடையாளம் காண்பதும், அப்படிச் சொற்கள் ஏதும் இல்லையென்றால், தமிழில் புதிதாக உருவாக்குவதும்தான்.

இந்தச் செயல்பாட்டின் முதல் படியாக, நாம் அன்றாடம் பயன்படுத்தும் கருவியான கைபேசியிலிருந்தே ஆரம்பிக்கலாம். கைபேசி தொடர்பான ஆங்கிலச் சொற்களுக்குத் தமிழில் பொருத்தமாகத் தோன்றும் சில சொற்களை நாங்கள் அவ்வப்போது உங்கள் முன்னால் வைக்கிறோம். அவற்றில் பொருத்தமானதை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம். வேறு சொற்கள் பொருத்தமாகத் தோன்றினாலும் அவற்றை கருத்துப் பகுதி மூலம் நீங்கள் பரிந்துரைக்கலாம்.

கைபேசி முடிந்த பிறகு வேறு ஒரு தொழில்நுட்பம் அல்லது கருவி... இப்படியே தொடர்ச்சியான செயல்பாட்டில் சேகரமாகும் சொற்கள் தமிழின் வளத்தை மேலும் கூட்டுவது உறுதி.

வாருங்கள், தமிழோடு ஒரு பயணம் செல்வோம்!

| கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆங்கிலச் சொற்களுக்கு பொருத்தமான தமிழ்ச் சொல்லை உங்கள் வாக்குகள் மூலம் தேர்ந்தெடுப்பீர். |

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x