Published : 07 Apr 2017 04:54 PM
Last Updated : 07 Apr 2017 04:54 PM
சிரிக்க வைப்பது என்பது மாபெரும் கலை. அதிலும் துன்பத்தில் இருந்துகொண்டு மற்றவர்களை மகிழ்விப்பது என்பது ஆகப்பெரும் சாதனை. அதை அத்தனை அழகாய் நிகழ்த்தி இருக்கின்றனர் வாழ்க்கையின் கடைசி நாட்களில் இருக்கும் சிலர்.
முதுமையையும், நோயையும் ஒரு சேரக்கொண்டிருப்பவர்களின் மனநிலை எப்படி இருக்கும்? ஆனால் இவர்கள் அப்படி இல்லை.
தனது காமெடிகளுக்குச் சிரிக்காமல் சோகத்துடன் உற்றுப் பார்க்கும் பார்வையாளரைப் பார்த்துக் கேட்கிறார் அவர். ''ஏன் சிரிக்க மறுக்கிறீர்கள்? உங்களுக்கு இருமல் கூட இல்லையே, என்னைப் பாருங்கள், நுரையீரல் புற்றுநோயுடன் சிரித்துக் கொண்டிருக்கிறேன்''.
வாழ்க்கைப் பயணத்தின் இறுதி நாட்களில் இருப்பவர்களுக்காகவும், அவர்களை கவனித்துக் கொள்ள வேண்டியவர்களுக்காகவும் வார்க்கப்பட்ட ஒரு குறும்படம் இதோ உங்களுக்காக.
சமூகத்தில் அதிகம் பேசப்படாதவைகளில் மரணமும் ஒன்றாக இருக்கிறது. இளமையில் அதைப் பற்றி யோசிப்பதில்லை என்பதால் பேசுவதில்லை. வயோதிகத்தில், இறப்பின் மீதுள்ள பயத்தால் அதைப்பற்றிப் பேசுவதில்லை.
தங்களது இறுதி நாட்களில் இருக்கும் மனிதர்களுக்கு, நாட்டின் தலைசிறந்த காமெடி பயிற்சியாளர்களைக் கொண்டு பயிற்சி அளிக்கப்பட்டிருக்கிறது. இந்திய வலிநிவாரண பராமரிப்பு சங்கம் (Indian Association of Palliative Care) இந்த நிகழ்ச்சியைத் திட்டமிட்டு, முன்னெடுத்து நடத்தியுள்ளது.
என்னைப் போன்ற பலருக்கு சிரிப்பு நிகழ்ச்சியைப் பார்த்து முதல் முறையாக அழுதது இதைப் பார்த்த பிறகாய் இருக்கும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT