Published : 11 Aug 2016 09:53 AM
Last Updated : 11 Aug 2016 09:53 AM

சிலை சிலையாம் காரணமாம் - 26: சிலைக்கடத்தலும் ஐஎஸ் அச்சமும்!

இந்தியாவில் 1972-ல் ‘பாரம்பரிய கலை மற்றும் புராதனச் சின்னங்கள் பாதுகாப்புச் சட்டம்’ இயற்றப்பட்ட பிறகு 1975-ம் ஆண்டுக்குப் பிறகு தான் ஏராளமான சிலைகள் இந்தியாவில் இருந்து பிற நாடுகளுக்குப் பெருமளவில் கடத்தப்பட்டுள்ளன. ஆனால், அப்படிக் கடத்தப்பட்ட சிலை கள் எல்லாம் சட்டம் இயற்றப் படுவதற்கு சில ஆண்டுகள் முன்னதாகவே விற்கப்பட்ட தாகவும், வாங்கப்பட்டதாகவும் போலியான ஆவணங்களைத் தயாரித்து வைத்திருக் கிறார்கள். குறிப்பாக, கபூர் சம்பந்தப்பட்ட சிலை விவ காரங்களில் பெரும்பாலான வற்றில் 1968-ல் இருந்து 1971 வரையிலான காலகட்டத் தில் வாங்கப்பட்டதாகவே போலி ஆவணங்கள் தயாரிக்கப் பட்டுள்ளன.

சிங்கப்பூர் மியூசியம்

கபூரால் கடத்தப்பட்ட புரந் தான் நடராஜரை 5.6 மில்லியன் டாலருக்கு ‘நேஷனல் கேலரி ஆஃப் ஆஸ்திரேலியா’ வாங்கி இருக்கிறது. புரந்தான் கோயி லின் உமா பரமேஸ்வரி சிலையை சிங்கப்பூர் ஏசியன் சிவிலைசேஷன் மியூசியம் 6 லட்சத்து 50 ஆயிரம் டாலருக்கு வாங்கி இருக்கிறது. உமா பரமேஸ்வரி சிலை சிங்கப்பூர் மியூசியத்தில் இருப்பதை 2013-ம் ஆண்டிலேயே ‘தி இந்தியா ப்ரைடு புராஜெக்ட்’ தன்னார்வலர்கள் கண்டுபிடித்தார்கள். கபூரின் நவடிக்கைகளைக் கவனித்து வந்த இந்த அமைப்பைச் சேர்ந்த அமெரிக்க பெண்மணி ஒருவர், கபூர் தனது ‘ஆர்ட் கேலரி’க்காக 10 ஆண்டுகளில் கொடுத்திருந்த விளம்பரங்களை சேகரித்து, தங்களது அமைப்பின் அமைப்பாளர் விஜய்குமாருக்கு அனுப்பினார்.

அந்த விளம்பரம் ஒன்றில் புரந்தான் உமா பரமேஸ்வரி சிலையும் கபூரின் விற்பனைப் பட்டியலில் இருந்தது. அந்தச் சிலை ‘சிங்கப்பூர் ஏசியன் சிவிலைசேஷன் மியூசியத்தில் இருப்பதை உறுதிப்படுத்திய விஜய்குமார், அது திருட்டு சிலை என்பதை அப்போதே ஆதா ரத்துடன் சிங்கப்பூர் மியூசியத் துக்குத் தெரியப்படுத்தினார். அதற்கு எந்தச் சலனமும் காட்டவில்லை அந்த மியூசியம். இந்நிலையில், டிசம்பர் 2015-ல் அந்தச் சிலை சிங்கப்பூரில் இருந்து இந்தியாவுக்கு மீட்டு வரப்பட்டது. இப்போது, அந்தச் சிலை அங்கிருந்ததை தாங்களே கண்டுபிடித்து மீட்டு வந்ததாக பெருமைப் பட்டுக் கொள்கிறார்கள் இந்திய தொல்லியல் மற்றும் பரப்பாய்வுத் துறை அதிகாரிகள்.

சீர்காழி சாயாவ னேஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான, ‘நிற்கும் சம்பந்தர்’ சிலை 1968-ம் ஆண்டிலேயே அங்கிருந்து கடத்தப்பட்டும், அந்த விஷயம் வெளியில் தெரியவில்லை. இந்தச் சிலையை 1968-ல் நியூயார்க் ஆர்ட் டீலர் உல்ஃப் என்பவரிடம் இருந்து வாங்கியதாக நியூ யார்க் மியூசியம் ஆவணம் வைத்திருக்கிறது. சம்பந்தர் சிலை காணாமல் போனதாக சீர்காழியில் இதுவரை எஃப்.ஐ.ஆர். கூட பதிவு செய்யப்படவில்லை.

இந்தச் சிலையும் விருத் தாச்சலம் கோயிலின் சிங்கமுக பிரத்தியங்கரா தேவி சிலையும் ‘நேஷனல் கேலரி ஆஃப் ஆஸ்திரேலியா’வில் இருந்ததும், சிவன்கூடல் சோமாஸ்கந்தர் சிலை ‘சிங்கப்பூர் ஏசியன் சிவிலைசேஷன் மியூசியத்தில்’ இருந்ததும் உறுதிப்படுத்தப் பட்டது. அதேசமயம், இந்தத் தகவல்கள் வெளியானதுமே சோமாஸ்கந்தர் சிலையை தனது ஆர்ட் கேலரியில் இருந்து எடுத்துவிட்டது சிங்கப் பூர் மியூசியம். இதுபோல், இன்னும் பத்துக்கும் மேற்பட்ட சிலைகள் வெளிநாட்டு மியூசி யங்களில் இருப்பது பிரெஞ்சு ஆய்வு நிறுவன ஆவணங் களின் அடிப்படையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

உண்மையை மறைக்கிறதா ஏ.எல்.ஆர்.?

‘ஆர்ட் கேலரி’ மற்றும் மியூசியங்களுக்கு விற்கப்படும் கலைப் பொருட்கள் திருட்டுப் பொருட்கள் அல்ல என்பதை உறுதிசெய்து சான்று அளிப் பதற்காக நியூயார்க்கில் ‘The Art Loss Register’ (ஏ.எல்.ஆர்) என்ற தனியார் நிறுவனம் ஒன்று உள்ளது. இது ‘இண்டர்நேஷனல் ஃபவுண்டேஷன் ஃபார் ஆர்ட் ரிசர்ச்’ (ஐ.எஃப்.ஏ.ஆர்) என்ற கார்ப்பரேட் நிறுவனத்தால் 1969-ல் ஆரம்பிக்கப்பட்டது. சர்வதேச அளவில் திருடு போயுள்ள பழமையான கலைப் பொருட்கள் பற்றிய விவரங்களை ஆவணப் பதிவாக வைத்துள்ள ஏ.எல்.ஆர்., ஆண்டுக்கு 10 முறை தனது அடிப்படை தரவுகளை (Database) நிகழ்நிலை படுத்திவருகிறது. 2002 நிலவரப்படி சுமார் 2 லட்சம் திருட்டுக் கலைப் பொருட்கள் பற்றிய விவரங்களைத் தன் னகத்தே வைத்திருந்தது ஏ.எல்.ஆர்.

கடத்தலுக்கு சான்றா?

ஏ.எல்.ஆர். தன்னிடம் உள்ள ஆவணங்களை வைத்து, ஒரு கலைப் பொருள் திருட்டுப் பொருளா, இல்லையா என் பதை ஒப்பிட்டுப் பார்க்கும். அது திருட்டுப் பொருள் இல்லாத பட்சத்தில் உரிய சான்றிதழை வழங்கிவிடும். எனவே, சர்வ தேசக் கலைப் பொருள் சந்தை யில் ஏ.எல்.ஆர். சான்றிதழ் முக்கிய ஆவணமாகக் கருதப் படுகிறது.

கடத்தல் பொருளாக இருந் தால் இந்நிறுவனம் சான்று அளிக் காது என்று சொல்கிறார்கள். ஆனால், கபூரால் கடத்தி விற்கப் பட்ட சிலைகள் அனைத்துக்குமே இந்த நிறுவனம் சான்று அளித் திருக்கிறது. கபூரின் வண்டவாளங் கள் வெளியான பிறகும் இன்னும் ஏ.எல்.ஆர். சான்றுக்கு மதிப்பளிக்கப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளில் இந்நிறுவனத் திடம் சான்றிதழ் கேட்டு விண் ணப்பிக்கப்பட்ட சிலைகளின் விவரங்களைக் கணக்கெடுத் தாலே கடத்தல் சிலைகள் மற்றும் கடத்தல் புள்ளிகளின் விவரங்கள் வெளிச்சத்துக்கு வந்துவிடும்.

சிலைக் கடத்தலை தடுக்கவும், சர்வதேச சிலைக் கடத்தல் வழிகளை அடைக்கவும், சிலைக் கடத்தல் ‘நெட் வொர்க்’கை அடியோடு உடைக் கவும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இப்போது மெனக் கெடுகிறது. இதன் பின்னணியில் ஒளிந்திருப்பது ஐ.எஸ். அச்சம்.

- சிலைகள் பேசும்… | ‘The India Pride Project’ உதவியுடன்

முந்தைய அத்தியாயம்: >சிலை சிலையாம் காரணமாம் - 25: சிவன்கூடல் சோமாஸ்கந்தர் சிலை!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x