Published : 30 Jul 2016 11:36 AM
Last Updated : 30 Jul 2016 11:36 AM
முன்பு, மத்திய மாநில அரசுகளுக்கு பொது வான அம்சமாக தொல் லியல் மற்றும் கலைப் பொருட் கள் சட்டம் இருந்தது. அப் போது அதற்கான சட்டங் களை மத்திய அரசுதான் இயற்றி அரசிதழில் வெளி யிட்டு தொல்லியல் சின்னங் களைப் பாதுகாத்தது. 1966-ல் தான் தமிழ்நாடு தொல்லியல் மற்றும் வரலாற்றுச் சின்னங்கள் பாதுகாப்புச் சட்டம் இயற்றப்பட் டது. இதையடுத்து 1972-ல் கலைப் பொருட்கள் வைத்திருப்பதை பதிவுசெய்யும் பொறுப்பு மாநில அரசுக்கும் அதை விற்பனை செய்ய அனுமதிக்கும் பொறுப்பு மத்திய அரசுக்கும் பிரித்துக் கொள்ளப்பட்டது.
இதன்படி தமிழகத்தில் அற நிலையத் துறை கோயில்களுக்குச் சொந்தமான 25 ஆயிரம் செப்புத் திருமேனி (ஐம்பொன்) சிலைகள் 1976-82 காலகட்டத்தில் தமிழக தொல்லியல் துறையால் முறைப் படி பத்திரங்கள் மூலமாக பதிவு செய்யப்பட்டன. இந்தப் பத்திரங்களின் ஒரு நகல் சம்பந் தப்பட்ட கோயிலிலும் இன்னொரு நகல் அறநிலையத் துறையிலும், இன்னொரு நகல் மாநிலத் தொல் லியல் துறையிலும், இன்னொரு நகல் மத்திய தொல்லியல் மற்றும் பரப்பாய்வுத் துறையிலும் ஒப்படைக்கப்பட்டன. பத்திர நகல் ஓரிடத்தில் காணாமல் போனாலும் மற்ற இடங்களில் இருப்பதை வைத்து உறுதிப்படுத்திக் கொள்ள லாம் என்பதற்காக இந்த ஏற் பாட்டை செய்தது தமிழக தொல்லியல் துறை.
தமிழகத்தில் 35 ஆண்டுகளுக்கு முன்பு பதிவுசெய்யப்பட்ட 25 ஆயி ரம் சிலைகளுக்கான ஆவணங்கள் இப்போது எங்கு உள்ளன? அவை முறையாக பராமரிக்கப்பட்டதா என்பதெல்லாம் கேள்விக் குறியாகி இருக்கும் நிலையில், ஆவணப்படுத்தப்படாத கற்சிலை களைப் பற்றி யார் கவலைப்படப் போகிறார்கள்?
தமிழகத்திலாவது 25 ஆயிரம் கோயில் சிலைகள் ஆவணப்படுத்தப்பட்டன. மற்ற மாநிலங்கள் சிலைகளை ஆவணப்படுத்திப் பாதுகாப் பதில் அவ்வளவாக அக் கறை காட்டவில்லை. இத னால் மீண்டும் மத்திய தொல் லியல் துறையே அனைத்து அதிகாரங்களையும் எடுத்துக் கொண்டு மாநிலத் தொல்லியல் துறைகளை டம்மியாக்கியது. அனைத்து மாநிலங்கள் சம்பந்தப் பட்ட சிலைகள் உள்ளிட்ட கலைப் பொருட்களை மத்திய தொல்லி யல் துறை கண்காணித்து, பதிவு செய்து, பாதுகாப்பதில் நடை முறைச் சிக்கல்கள் நிறையவே உள்ளன.
கற்சிலைகள் மாத்திரமல்ல, பழமையான கோயில்களுக்குச் சொந்தமான பண்டைக் காலத்து விளக்குகள், மடப்பள்ளி பாத்திரங் கள், கலைநயம் கொண்ட மரச் சாமான்கள், சாமி எழுந்தருளும் வாகனங்கள் இவையெல்லாம்கூட பல கோயில்களில் காணாமல் போயிருக்கின்றன. தொன்மை யைப் பாராமல் இவை எல்லாம் வெறும் பொருட்களாக மட்டுமே பார்க்கப்படுவதால் இதெல்லாமே வெளியில் தெரியாமலேயே மறைக்கப்பட்டுவிட்டன.
தீனதயாள் வீட்டில் மீட்கப்பட்ட சிலைகளை பார்வையிட்டுத் திரும்பும் கர்நாடக அதிகாரிகள்
சில கோயில்களில் பழைய தேர்கள் சிதிலமடைந்துவிட்டதாகச் சொல்லி அவைகளை அடிமாட்டு விலைக்கு சில லட்சங்களுக்கு ஏலம் விடுகிறார்கள். ஏலம் எடுப்பவர்கள் அதிலுள்ள வேலைப்பாடுகளுடன் கூடிய மர சிற்பங்களைத் தனியாக பிரித்து எடுத்து அவற்றை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து லட்சக் கணக்கில் லாபம் சம்பாதிக்கிறார்கள். கோயில் நிர்வாக அதிகாரிகள் மற்றும் உள்ளூர் முக்கியஸ்தர்களின் அனுசரணையுடன் இந்தப் பகல் கொள்ளை இப்போதும் தொடர்கிறது.
தற்போது, சிலைக் கடத்தல் புள்ளிகளிடம் இருந்து ஏராளமான சிலைகள் மீட்கப்பட்டு வருகின்றன. இந்தச் சிலைகளின் தொன்மையைச் சோதிப்பதற்காக இந்திய தொல்லியல் மற்றும் பரப்பாய்வுத் துறை அதிகாரிகள் பெங்களூருவில் இருந்து வருகிறார்கள். இதுகுறித்தும் சர்ச்சை கிளப்பும் தமிழகத்தின் தொல்லியல் மற்றும் வரலாற்று ஆர்வலர்கள், ‘‘தமிழகத்தில் உள்ள சிலைகளைப் பற்றியும் அதன் முக்கியத்துவம் பற்றி யும் அண்டை மாநிலத்து அதிகாரிகளுக்கு முழுமையாகத் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. அதனால்தான் தீனதயாள் வீட்டில் இருந்து மீட்கப்பட்ட சிலைகளில் பெரும்பகுதியானவை எந்தக் கோயிலுக்குச் சொந்தமானது என்பதை இன்னமும் இனம் காணமுடியவில்லை.
தமிழக பழமையான கோயில் கள் மற்றும் சிலைகள் பற்றித் தெரிந்த அறிஞர்கள் தமிழகத்தி லேயே நிறையப் பேர் இருக்கிறார் கள். பார்த்த மாத்திரத்திலேயே இது எந்த அரசர் காலத்து சிலை என்பதை துல்லியமாகச் சொல்லி விடுவார்கள். இவர்களைத் தவிர, தொல்லியல் ஆர்வமுள்ள தன்னார்வலர்கள் மாவட்ட வாரியாக இருக்கிறார்கள். இவர்களைக் கொண்டு நிபுணர் குழு ஒன்றை அமைத்து, திருட்டு சிலைகளை அடையாளம் காணவேண்டும்.
அத்துடன், மாவட்ட வாரியாக குழுக்களை அமைத்து அந்தக் குழுக்கள் வழியாகக் கோயில் சிலைகளை அவ்வப்போது கண்காணிப்பதன் மூலம் சிலைத் திருட்டுக்களை தடுக்க முடியும். அதேபோல், சிலைகளை பதிவு செய்து பாதுகாக்கும் பொறுப்பை மாநில தொல்லியல் துறைக்கே மீண்டும் வழங்க வேண்டும்’’ என்கிறார்கள்.
- சிலைகள் பேசும்...
படங்கள்: எல்.சீனிவாசன்
முந்தைய அத்தியாயம்: >சிலை சிலையாம் காரணமாம் -17: சிங்கமுக பிரத்தியங்கரா தேவி!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT