Published : 08 Sep 2016 03:50 PM
Last Updated : 08 Sep 2016 03:50 PM
ஏகப்பட்ட எதிர்பார்ப்புக்களோடு அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது ஆப்பிள் நிறுவனத்தின் முக்கிய தயாரிப்பான ஐஃபோன் 7 மற்றும் ஐஃபோன் 7 ப்ளஸ். 32 ஜிபி ஸ்பேஸ், தண்ணீர் புகாத வடிவமைப்பு, 2 லென்ஸ் கேமரா என பல சிறப்பம்சங்கள் இதில் இருக்கின்றன. | கூடுதல் தகவலுக்கு > > 'ஐஃபோன் 7', 'ஐஃபோன் 7 ப்ளஸ்' அறிமுகம்: அறிக 7 அம்சங்கள்
அதன் சிறப்புகள், சுமார் 50 ஆயிரம் ரூபாய் விலைகொண்ட ஐபோனை வாங்க வேண்டுமா உள்ளிட்ட விஷயங்கள் நெட்டிசன்களின் இன்றைய விவாதப் பொருளாகி இருக்கின்றன. அவற்றின் தொகுப்பு இன்றைய நெட்டிசன் நோட்ஸில்..
பத்தாயிரம் ரூவா போன் வாங்கறதுக்குள்ளயே ஏழரையாகி நாக்கு தள்ளுது, நமக்கு எதுக்கு சென்ராயன் ஆப்பிள்-7 எல்லாம்?
ஆப்பிள் புது ஐபோன் 7 ரிலீஸ் ஆயிடுச்சு. நம்ம ஆன்ட்ராய்டு தான் பெஸ்ட். ஆமாம் சொல்லிட்டேன். (மனசுக்குள்ள) காசு இல்லமா... நீங்க வேற ஐபோன் 7-னு காண்டு ஆக்கிட்டு...
ஆப்பிள் 7 வந்தா என்ன 8 வந்தா என்ன? நீ சோத்தப் போடு.
ஆப்பிள் ஐ போன் 7 பயன்படுத்தினால் நோய் எதிர்ப்பு சக்தி கம்மியாகும் ஆய்வில் தகவல். கொழுத்தி போடுவோம்; நல்லா இருக்குல!
ஆப்பிள் விலை
.
.
.
.
.
.
கிலோ 100/- மட்டுமே
#எங்க லெவல் அவ்வளவுதான்...!
ஆப்பிள் போன் வந்ததுல இருந்தே ஒரே ஆப்பரேடிங் சிஸ்டம்ல எக்ஸ்டரா நாலு ஆப்சன் சேர்த்து விட்டுட்டு இருக்காங்க. Basic OS Performance -ல் எந்த மாற்றமும் இல்லை. மற்ற மொபைல் OS எல்லாம் kernelல் இருந்து எல்லாமே மாறிட்டு வருது இவங்க..?
ஐ போன் 7 மாடலை அறிமுகப்படுத்தியது ஆப்பிள் நிறுவனம். #செய்தி. ஜியோ சிம் சப்போர்ட் ஆகுமா ஆபிசர்ஸ்
இந்திய ரூபாயின் குறியீடான ₹ இப்பொழுது டாலருக்கு மிக அருகில் - ஆப்பிள் IOS7 அப்டேட்டில் இருக்கிறது. முதன்முதலில் கீபோர்டில் நம் இந்திய ரூபாய்க்குறியீட்டிற்கு தனி இடம் கொடுத்துள்ளது ஆப்பிள் நிறுவனம்.
****
Wireless EarPods, dual back camera with 56mm lens இப்படி எல்லாமே கும்முன்னு வந்திருக்கு. மார்க்கெட் ரேட் என்னன்னு சொல்லிட்டாங்கன்னா, இன்னும் 6,7 ஒட்டகத்தை சேர்த்து மேய்ச்சு காசைச்சேர்த்தி வாங்கிப்புடலாம்.
எல்லோருக்கும் ஆப்பிள் போனை விலையில்லா கைபேசியா என்னிக்கு தராங்களோ அன்னிக்குத்தான் தமிழ்நாடு வல்லரசாகும் என்று சொல்லிக்கொண்டு...
ஆப்பிள் வேண்டும் என்ற மகனுக்கு, இது சீசனில்லை; அன்னாசிப்பழம் வேணும்னா வாங்கித்தரேன் சாப்ட்டுக்கோ என்று கூறி நகர்ந்தார் பழ வியாபாரி.
பொருள் வாங்கும்போது நம்தேவைக்கா அல்லது நம்ஆசைக்கா என ஒருநிமிடம் யோசித்தால் சிக்கனம் தானாக வருமாம்- ஆப்பிள் ஐபோன் வைத்திருப்பவரின் பதிவு.
ஆண்ட்ராய்ட் ங்குறாங்க, ஆப்பிள்ங்குறாங்க... நாம ஆயிரத்து இருநூறு ரூவா சாம்சங்கையே யூஸ் பண்ணுவோம். #ச்சீசீ இந்த ஆப்பிள் புளிக்கும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT