Published : 16 Jul 2016 11:10 AM
Last Updated : 16 Jul 2016 11:10 AM
புருஷோத்தம் ராம் கபூரின் மகனான சுபாஷ் சந்திர கபூர், டெல்லி டி.ஏ.வி. பள்ளியில் படித்தவர் என்பது மட்டுமே உறுதியாகத் தெரி கிறது. தந்தைக்குத் துணை யாக ஆர்ட் கேலரி வேலை களைக் கவனித்துக்கொண்ட இவர், 1974-ல் அமெரிக்காவுக் குப் பயணமானார். நியூயார்க் கில் ‘டெம்பிள் ஆர்ட்ஸ்’ என்ற கலைப் பொருள் நிறுவனத்தைத் தொடங்கி நிர்வகித்தார். 1976-ல் டெல்லியில் பெரும் படோடோப மாக நடந்தது சுபாஷ் கபூரின் தி ருமணம். அந்த ஆண்டே கபூரின் ஒட்டுமொத்த குடும்பமும் அமெ ரிக்காவுக்கு இடம் பெயர்ந்தது.
1980-ல் கபூர் அவரது தம்பி, தங்கை உள்ளிட்டவர்கள் அமெ ரிக்கக் குடியுரிமை பெற்றார்கள். 1987-ல் தனது ‘டெம்பிள் ஆர்ட்' நிறுவனத்தை ‘ஆர்ட் ஆஃப் தி பாஸ்ட்’ (Art Of The Past) என்று பெயர் மாற்றிய சுபாஷ் கபூர், ‘சோபியா செல்ஃப் ஸ்டோரேஜ்’ என்ற கலைப் பொருள் கிடங்கை யும் தொடங்கினார். தொழிலில் ஓரளவுக்கு பணம் சம்பாதித்த பிறகு தந்தையின் வழியில் பழமையான சிலைகள் மற்றும் கலைப் பொருட் களை இந்தியாவில் இருந்து கடத்தி, காசாக்கும் வேலைகளில் இறங்கினார் சுபாஷ் கபூர்.
தொடக்கத்தில், கவனிப் பாரின்றி விடப்பட்டுள்ள கற் சிலைகள், வேலைப்பாடுகளைக் கொண்ட பழைய கல்தூண்கள் தான் கபூரின் இலக்காக இருந் தது. இதற்காக அடிக்கடி இந்தியாவுக்கு வந்து போன அவர், இங்குள்ள மத்திய மாநிலத் தொல்லியல் துறை யினருடன் தன்னை நெருக் கப்படுத்திக் கொண்டார். அவர்களின் துணையோடு தொல்லியல் துறையின் கட்டுக்குள் உள்ள பழமையான கோயில்களுக்கு பயணித்து, அங் குள்ள பழமையான சிலைகள் மற்றும் கலைப் பொக்கிஷங் களை நோட்டமிட்டார். அவற்றில் இருந்து தனக்குத் தேவையான வற்றை சமயம் பார்த்துக் கடத்தவும் ஆரம்பித்தார். கபூரின் மகுடிக்கு மயங்கிய அரசுத் துறை சார்ந்த சிலரும் இதற்கு உடந்தையானதால் விஷயம் வெளியில் கசியாமல் பார்த்துக் கொண்டார்கள்.
சுத்தமல்லி சுந்தரேஸ்வரர் கோயில்
இந்நிலையில், இந்தியா உள் ளிட்ட நாடுகளில் இருந்து கடத்தி வரும் சிலைகளையும் பழம் கலைப் பொருட்களையும் இறக்குமதி செய்வதற்காகவே ‘நிம்பஸ் இம்போர்ட் எக்ஸ்போர்ட் இன்கார்ப்பரேட் (Nimbus Import Export Inc.)’ என்ற நிறுவனத்தை 2001-ல் நியூயார்க்கில் தொடங் கினார் சுபாஷ் கபூர். இந்நிறு வனத்தை அவரது மகள் மம்தா சாகரும் தங்கை சுஷ்மா சரீனும் கவனித்துக் கொண்டார்கள்.
இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து கடத்தப்பட்டு வரும் கலைப்பொருட்களை அமெரிக்கா வுக்கு இறக்குமதி செய்து, அங்கிருந்து மற்ற நாடுகளுக்கு இனம் பிரித்து அனுப்புவதுதான் இந்த இருவரின் வேலை. வாமன் நாராயண் கியா போலீஸ் கையில் சிக்கும் வரை சுபாஷ் சந்திர கபூர் திரைமறைவு நபராகத்தான் இருந்தார். 2003-ல் வாமன் கைது செய்யப்பட்ட பிறகுதான் கபூர் மெல்ல வெளி யில் தெரிய ஆரம்பித்தார். தன்னைப் பிரபலப்படுத்திக் கொள்வதற்காகவும் சிலைக் கடத்தல் உலகில் தனக்கென ஒரு தனி சாம்ராஜ்யத்தை உருவாக்கு வற்காகவும், வெளி நாடுகளுக் குக் கடத்திவரப்பட்ட ஏராளமான பழமையான கலைப்பொருட் களைத் தாராளமாக மியூசியங் களுக்கு அன்பளிப்பாக அள்ளி வழங்க ஆரம்பித்தார் கபூர்.
2006-ல் அமெரிக்காவில் உள்ள ‘டொலைடோ’ மியூசியத் துக்கு மட்டுமே 244 சிலைகள் மற்றும் கலைப் பொருட்களை அன்பளிப்பாக கொடுத்து அசத்திய சுபாஷ் கபூர், அதே ஆண்டில் அந்த மியூசியத்துக்கு 250 ஆயிரம் டாலரில் இருந்து 500 ஆயிரம் டாலருக்குள் நிதியாக நன்கொடை கொடுத்தவர்கள் பட்டியலிலும் இடம்பிடித்தார்.
தமிழகத்தைப் பொறுத்தவரை சென்னையைச் சேர்ந்த சஞ்சீவி அசோகன்தான் சுபாஷ் சந்திர கபூரின் நம்பிக்கைக்குரிய தளபதி. 2005-ல் சென்னையில் பிரபல ஐந்து நட்சத்திர ஹோட்டலில்தான் இருவரும் முதன்முதலில் சந்தித் தாகச் சொல்கிறது போலீஸ். 2005 மற்றும் 2006-ல் தமிழகத் துக்கு நான்கைந்து முறை வந்து போயிருக்கிறார் கபூர். அப்போ தெல்லாம், தான் அமெரிக்க குடியுரிமை பெற்றவர் என்பதை மறைத்து இந்திய பிரஜை என அடையாளம் கொடுத்தே ஹோட்டலில் அவர் தங்கியதாகத் தெரிகிறது.
விருத்தாச்சலம் விருத்தகிரீஸ்வரர் கோயில்
தமிழகப் பயணங்களின்போது தமிழகத்தின் பல்வேறு பகுதி களுக்கும் குறிப்பாக சோழர் காலத்து கோயில்கள் அதிகம் உள்ள மிகப் பழமையான கோயில் களுக்கு சஞ்சீவி அசோகனின் வழிகாட்டலில் சென்று வந்த கபூர், அங்கெல்லாம் தனக்கு என்ன தேவை என்பதை குறிப் பெடுத்துக் கொடுத்துவிட்டுப் போயிருக்கிறார். கபூர் விரும்பி யதை எல்லாம் தனது லோக்கல் ஏஜெண்ட்கள் மூலமாக கச்சிதமாக செய்துகொடுத்து வளமடைந்தார் சஞ்சீவி அசோகன். இப்படித்தான் சுத்தமல்லி சுந்தரேஸ்வரர் மற்றும் புரந்தான் பிரகதீஸ்வரர் கோயில்களுக்குச் சொந்தமான 26 ஐம்பொன் சிலைகளும், விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோயிலின் அர்த்தநாரீஸ்வரர், பிரத்தியங்கரா கற்சிலைகளும் நாடு கடத்தப்பட்டன. அது எப்படி தெரியுமா?
- சிலைகள் பேசும்... | ‘The India Pride Project’ உதவியுடன்
முந்தைய அத்தியாயம்: >சிலை சிலையாம் காரணமாம் - 8: ’க்ரீன் தாரா’ சிலை
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT