Published : 15 Jun 2016 02:38 PM
Last Updated : 15 Jun 2016 02:38 PM
அதிக வெயில், வறட்சி போன்ற காரணங்களால் தக்காளி விளைச்சல் வெகுவாக குறைந்துள்ளது. வரத்து சரிந்ததால், சென்னையில் ஒரு கிலோ தக்காளி ரூ.100-க்கு விற்கப்படுகிறது. புறநகர் பகுதிகளில் பல இடங்களில் ரூ.120 வரை கூட விற்கப்படுகிறது.
இதனால் தக்காளி வாங்குவதை தவிர்க்கும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து நெட்டிசன்கள் தக்காளி விலை உயர்வு குறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர். அவற்றின் தொகுப்பு இன்றைய நெட்டிசன் நோட்ஸில்...
#தக்காளி விலை உயர்வ பத்தி பேசறவங்க, வெங்காயம் கிலோ பத்து ரூபாய் விற்கறத பற்றி பேசறது இல்லையே..
#தக்காளி - 100/100 மதிப்பெண்கள்.
அரண்டவன் கண்ணுக்கு தக்காளி கூட இப்ப தங்கமாக தெரியுமாம்..
தக்காளி ரூ100 - ஊருக்கு வந்தா ஒரு கிலோ தக்காளி வாங்கிட்டு வாப்பானு சொல்ற காலம் வந்துடும் போல.
தக்காளியின் தாக்கம் அதிகமா இருக்கே
#தக்காளி விலை சாஸ்தியானா புளிய கரைச்சி ஊத்துங்கய்யா.. இதுகூடவா தெரியாது? ச்சே ஒருத்தருக்கும் விவரம் பத்தல!
#தக்காளி கிலோ 100 ரூபாயாம். என்னடா இது தக்காளி சட்னி சாப்டுறவனுக்கு வந்த சோதனை?..
#தக்காளி...
இயற்கையை நாம் அழிக்க முற்படும்போது அந்த இயற்கையும் நம்மை அழிக்க முற்படும் காலங்கள் வித்தியாசமானவை... தக்காளியின் விலை ரூபத்தில்.
என் வீட்டம்மா சமையலுக்கு #தக்காளி வாங்கி வரச் சொன்னாங்க.....
ஒரு மாசத்துக்கு தக்காளி இல்லாமல் சமையல் செய்யுன்னு புடவை வாங்கி கொடுத்து சமாளிச்சிட்டேன்...
"அட யாரும்மா அது.. சொன்னா கேக்கமாட்டீங்களா... ரேஷன்லயெல்லாம் தக்காளி போடலை போங்கம்மா..."
#தக்காளி
#தக்காளி பொன் போன்றது. #புதுமொழி
உங்களுக்குன்னா ரத்தம் எங்களுக்கு வந்தா தக்காளி சட்னியான்னு இளக்காரமா கேக்காதீங்க.ரத்தத்தை விட தக்காளிசட்னி மவுசு ஜாஸ்தி. Trending #தக்காளி ;)
கடைசில இருக்குற தோசைய நல்ல கெட்டி தக்காளி சட்னிய நனைச்சு நல்லா கொளகொளன்னு சாப்பிடும்போது ஒரு பீல் வருமே...
ஒரு படத்துக்கு போற காசுல ஒரு கிலோ தக்காளி வாங்கிடலாம் போலயே மொமண்ட்..!! 120 ரூவாயாம்..!!
ஒரு பொண்ணு எங்க வீட்ல தக்காளி சட்னின்னு ஸ்டேட்டஸ் போட்ருக்கு.!! #பணக்கார_திமிரு.!!
ஹலோ SBI பேங்கா??
ஆமா சார் சொல்லுங்க...
சார் உங்க பேங்க்ல தக்காளி வாங்க லோன் தருவீங்களா சார்...
இந்த ஏழை இனி ரசம் வச்சு கூட சாப்பிட முடியாது போல இந்த தமிழ்நாட்டுல! #தக்காளி விலையேற்றம் :(
ஒரே நாளில் அசைவம் சாப்பிட எவ்வளவு வேணா செலவளிக்கிற நாம தான் வாரம் முழுதும் யூஸ் பண்ற தக்காளி விலை ஏறினா மட்டும் அவ்வளவானு யோசிக்கிறோம்!!
என்னது #தக்காளி கிலோ 100 ருவாயா
தக்காளி இல்லாம சமைப்பது எப்படின்னு ஒரு புக் போடணும் !
தக்காளி கிலோ நூறு ரூபாயை தாண்டியது - செய்தி
இனி ஒரேயொரு தக்காளி மட்டும் வாங்கி குழம்பு செய்யும் போது பக்கத்தில வைச்சிக்க வேண்டியதுதான்....
100 ரூபா இருந்தா தக்காளி வாங்கணும்னு நினைச்சா ஃபேமிலி மேன்.. இன்னும் 20 ரூபா இருந்தா படத்துக்கு போலாம்னு நினைச்சா பேச்சுலர் மேன்! #தக்காளி
எங்கள் வீட்டுக்கு விருந்தாளியாக வரும்போது பிஸ்கட், பழம், ஸ்வீட், காரம் எதுவும் வாங்கி வர வேண்டாம்!
ஒரு கிலோ தக்காளி மட்டும் வாங்கி வரவும் !
தக்காளி விக்கிற விலைக்கு ஏழைங்கதான் #சட்னி ஆகுறாங்க
இனி சாப்பாட்டுல உப்பு இருக்கோ இல்லையோ, தக்காளி இருக்காது போல.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT