Published : 13 Aug 2016 04:58 PM
Last Updated : 13 Aug 2016 04:58 PM

நெட்டிசன் நோட்ஸ்: ஜோக்கர் - இந்நாட்டு மக்களின் கதை

இயக்குநர் ராஜுமுருகனின் முதல் படமான 'குக்கூ' பாராட்டுகளைப் பெற்ற நிலையில், இரண்டாவது படமான 'ஜோக்கர்' எப்படி இருக்கிறது? இணைய ரசிகர்களின் கருத்து இன்றைய நெட்டிசன் நோட்ஸில்...

>ச ப் பா ணி ‏

"எந்த ஸ்டேஷனாலயாவது ஆடிகாரையோ, பீ.எம்.டபிள்யு. காரையோ பிடிச்சி வச்சிருக்காங்களா?" - ஜோக்கர்

>Je Suis Thyagu

இயக்குநர் ராஜுமுருகன், மக்களைப் பற்றிப் பேசவில்லை. மக்களை நோக்கி பேசி இருக்கிறார். எல்லோரும் ‪‎ஜோக்கர்‬ ஆகாமல் இருக்க ஜோக்கர் திரைப்படம் பாருங்கள்.

>Amirtha Raghuraj

இந்த வெஷத்தையெல்லாம் தடை பண்ணச்சொல்லி ஆர்டர் போட்டேனே அரசாணை இன்னும் வரலையோ? ‪#கோக்கோகோலா, பெப்சி ‪#‎ஜோக்கர்‬

>Vcthira Dheeran

இந்த படம் ரொம்ப சிம்பிள். இனிமேலாவது வாய தொறந்து அரசியல் பேசு; அரசை கேள்வி கேள் என்று சொல்கிறது படம்.

>Richard Elumalai

கருவில் இருந்து கல்லறை வரை ஊழல் என்பது போய் கழிவறையிலும் ஊழல் என்று பார்வையை விரிவுபடுத்தியுள்ளார் இயக்குநர் ராஜு.

>Kannan K Mani

சீரழிக்கும் தமிழ் படங்களில் சிந்திக்க வைக்கும் ஒரு படம் ‪ஜோக்கர்.‬

>Hari Billa

நிஜத்தில் போராடு; உதவிக்கு இணையத்தை வைத்துக்கொள். நான் கத்துகிட்டது ‪- ‎ஜோக்கர்‬ படம் மூலமாக...

>Shan

இந்த சமூகத்திற்காக போராடும் ஒவ்வொரு தனிமனிதருக்கும் இந்தப் படம் சமர்ப்பணம். ஐயாம் த ஜோக்கர்.

>Ck Mohammed

எப்போதும்போல் வெள்ளியன்று வெளியாகும் படம் போல இல்லாமல் வேறு ஒரு சிந்தனையோடு இருக்கிறது! ‪#‎ஜோக்கர்‬

>Ri Yaz

இந்நாட்டு மக்களின் கதை ‪#‎ஜோக்கர்‬

>Mansoor Dhoni

நாடும், அரசியலும் இவ்வளவு அலங்கோலமாகப் போனதற்கு நானும் ஓர் காரணம் என்ற உண்மையை, படம் பார்க்கும் ஒவ்வொருவருக்கும் உணர்த்தும்.

>Mohan R

ஜோக்கர் - போராளிகளுக்கு ஒரு பூஸ்டர்.

>Chandru

உலக சினிமா என்பது ‘டெக்னாலஜி’யை அப்டேட் செய்துகொள்ளும் படங்கள் அல்ல... உள்ளூர் சாமான்யனின் பிரச்சனையை உலகறியச் செய்ய யதார்த்தமாக முயற்சிப்பவையே என்பது எனது புரிதல். அதுபோன்றதொரு சிறு முயற்சியே ஜோக்கர்!

>அப்படியா..! ‏

நாம ஓட்டுப்போட்டுதான அவன் ஆட்சிக்கு வர்றான்… அவன டிஸ்மிஸ் பண்ண உரிமை இல்லையா...? #ஜோக்கர்

>ஐ.யோக்கியன்

படம் பாக்குறப்ப யாரோ பளார் பளார்னு அறையற மாதிரி இருக்கும். யாருன்னு பாத்தா வசனங்கள்தான். #ஜோக்கர்

Satheesh Kumar

ஜோக்கர் படத்துல ஜோக்கர் என்பது யாரை குறிக்குதுன்னு கண்டுபிடிச்சிட்டாங்களா?

>பொரி உருண்டை

உங்களுக்காகப் போராடுற எங்களைப் பார்த்தா பைத்தியக்காரன்னு தோணினா... அது எங்க தப்பில்ல- ஜோக்கர்

>Natarajan Samaran

ராஜு முருகனின் வட்டியும் முதலும் பாணியில் சொல்வதென்றால்... "இந்த கீர்த்தனாவை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு''.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x