Published : 16 Aug 2016 09:50 AM
Last Updated : 16 Aug 2016 09:50 AM
திருவாரூர் மாவட்டம், திருக்காரவாசல் சிவன் கோயிலிலும் ஒரு மரகத லிங்கம் இருந்தது. 201 கிராம் எடை கொண்ட இந்த லிங்கம் 1992 ஆகஸ்ட் மாதம் திருடு போனது. வழக்குப் பதிவு செய்து விசாரித்த போலீஸார், மரகதலிங்கத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்று சொல்லி 25.11.1999-ல் வழக்கை இழுத்து மூடிவிட்டார்கள்.
இந்நிலையில், திருத்துறைப் பூண்டி மரகதலிங்கம் தொடர்பான விசாரணையில் இந்த லிங்கம் தொடர்பாகவும் துப்புக் கிடைத் தது. அதை வைத்து மீண்டும் விசாரணையைத் தொடங்கிய போலீஸார், திருவெண்ணெய் நல்லூர் தேவசேனாதிபதி, விழுப் புரத்தைச் சேர்ந்த கார்த்திகேயன், வேல்முருகன் ஆகியோரை டிசம்பர் 2009-ல் கைதுசெய்தனர். இவர்கள் தந்த தகவல்களை வைத்து, திருடுபோன திருக்கார வாசல் மகரகத லிங்கம் 17 வருடங் களுக்குப் பிறகு மீட்கப்பட்டது.
சிங்கப்பூரின் ஏசியன் சிவிலை சேஷன் மியூசியம் கபூரிடம் இருந்து 10-ம் நூற்றாண்டைச் சேர்ந்த கல் நந்தி ஒன்றை 55 ஆயிரம் டாலருக்கும் 1997 அக்டோபரில் 22,500 டாலருக்கு அமராவதி சிற்பம் ஒன்றையும் வாங்கி இருக்கிறது. அதே மாதத் தில், 11-ம் நூற்றாண்டைச் சேர்ந்த நாகப்பட்டினம் ‘நிற்கும் புத்தா’ ஐம்பொன் சிலையை 15 ஆயிரம் டாலருக்கும் 1998 பிப்ரவரி யில், 11-ம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்தியாவின் கனோஜ் என்ற பகுதியைச் சேர்ந்த சிங்கம் சிலையையும் (35 ஆயிரம் டாலர்), பங்களாதேஷைச் சேர்ந்த காமுண்டா அம்மன் கற்சிலை யையும் (25 ஆயிரம் டாலர்) 5 ஆயிரம் டாலர் தள்ளுபடியுடன் 55 ஆயிரம் டாலருக்கு கபூர் அந்த மியூசியத்துக்கு விற்றிருக்கிறார்.
இதே மாதத்தில் 14 ஓவியங் களை 9,500 டாலருக்கும் 2002 ஏப்ரலில் 3 டெரகோட்டா ரேட்டில் களை (பொம்மைகள்) 10 ஆயிரம் டாலருக்கும் இவர்களுக்கு விற்ற வர், ஜூலை 2006-ல் 18-ம் நூற் றாண்டைச் சேர்ந்த கோவாவுக்குச் சொந்தமான, குழந்தை ஏசுவுடன் நிற்கும் மாதா சிலையை 1,35,000 டாலருக்கு விற்றிருக்கிறார். இந்தச் சிலையானது செலினா முகமதுவுக்கு அவரது தந்தை 1992-ல் அன்பளிப்பாக தந்ததாக வும் அதை கபூர் விலை கொடுத்து வாங்கியதாகவும் ஆவணங்கள் பேசுகின்றன.
இதுவரை கபூரிடம் இருந்து மட்டும் 13 லட்சத்து 28 ஆயிரத்து 250 டாலருக்கு சிலைகள் உள்ளிட்ட கலைப் பொருட்களை வாங்கிய தாகக் கணக்குக் காட்டும் சிங்கப் பூர் ஏசியன் சிவிலைசேஷன் மியூ சியம், தங்களிடம் இருந்து திரும்பப் பெறப்பட்ட பொருட் களுக்காக 1.4 மில்லியன் டாலர் நஷ்டஈடு கேட்டு கபூர் மீது நியூயார்க் நீதிமன்றத்தில் 20.03.2015-ல் வழக்கும் பதிவு செய்துவிட்டது.
புரந்தான் நடராஜர் மற்றும் விருத்தாச்சலம் அர்த்தநாரீஸ்வரர் சிலைகளை ‘நேஷனல் கேலரி ஆஃப் ஆஸ்திரேலியா’வுக்கு கபூர் விற்றபோது, அவைகளுக்கான உத்தரவாதப் பத்திரம் ஒன்றையும் அளித்திருக்கிறார். இப்போது அந்தச் சிலைகள் அங்கிருந்து கைப்பற்றப்பட்டுவிட்டதால், அந்தச் சிலைகளுக்காக 5.7 மில்லியன் டாலர் இழப்பீடு கேட்டு ‘நேஷனல் கேலரி ஆஃப் ஆஸ்திரேலியா’வும் நியூயார்க் நீதிமன்றத்தில் கபூர் மீது வழக்குப் போட்டிருக்கிறது.
இந்தியாவில் இருந்து கபூர் வழியாக 50 ஆயிரம் கலைப் பொருட்கள் வெளிநாடுகளுக்குக் கடத்தப்பட்டதாக ஓர் உத்தேசக் கணக்குச் சொல்கிறார்கள். 1,25,000 டாலர் மதிப்புடைய ராஜஸ்தானைச் சேர்ந்த மார்பிள் ஜெயின் சிலை, கோவாவில் இருந்து கடத்தப்பட்ட 3,37,500 டாலர் மதிப்புடைய தங்கம் மற்றும் தந்தத்தால் ஆன சிலுவையில் அறையப்பட்ட ஏசு, ஹைதரா பாத்துக்குச் சொந்தமான 1,75,000 மதிப்புடைய பழைய அலாரம், மதுராவில் இருந்து கடத்தப்பட்ட 1.08 மில்லியன் டாலர் மதிப் புடைய குஷன் புத்தா சிலை, இவை அனைத்தும் கபூரால் விற்கப்பட்டு தற்போது ‘நேஷனல் கேலரி ஆஃப் ஆஸ்திரேலியா’ மியூசியத்தில் உள்ளன.
ஜெய்பூர் மார்பிள் ஜெயின் சிலை, குஜராத் மகிஷாசுர மர்த்தினி சிலை, ஆந்திர மாநிலம் அமராவதியைச் சேர்ந்த புத்தர் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் பளிங்குச் சிலை, தமிழகத்தின் நடன சம்பந்தர் (புதையலாக எடுத்தது), விருத் தாச்சலம் பிரத்தியங்கரா சிலை, தமிழகத்தின் துவார பாலகர் சிலைகள், உத்தரப்பிரதேசத்தின் லட்சுமி நாராயணர் சிலை, மேல் ஆந்திரப்பிரதேசத்தின் பலராமர் சிலைகள் மற்றும் இந்தியாவில் இருந்து கபூரால் கடத்தப்பட்ட சிலைகள் அனைத்தும் அமெ ரிக்கா, ஆஸ்திரேலியா, சிங்கப் பூர் உள்ளிட்ட நாடு களின் மியூசிங்களிலும் ’ஆர்ட் கேலரி’களிலும் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
பிஹாருக்குச் சொந்தமான சாமுண்டீஸ்வரி ஐம்பொன் சிலை, மேற்குவங்கத்தின் டெர கோட்டா பொம்மைகள், ஆந்திர மாநிலத்தின் 5 மார்பிள் ஸ்டோன்கள் - கபூரால் கடத்தி விற்கப்பட்ட இவை தற்போது சிங்கப்பூர் ஏசியன் சிவிலைசேஷன் மியூசியத்தில் உள்ளன.
- சிலைகள் பேசும்… | ‘The India Pride Project’ உதவியுடன்
முந்தைய அத்தியாயம்: >சிலை சிலையாம் காரணமாம் - 28: சோழன் காலத்து அரிய மரகத லிங்கம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT