Published : 23 Jun 2015 06:08 PM
Last Updated : 23 Jun 2015 06:08 PM
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு பல்வேறு நாடுகளில் சிறப்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடந்தன. சென்னையில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்திலும் அக்கட்சியின் சார்பில் சர்தேச யோகா தினம் கடைபிடிக்கப்பட்டது. அதில், அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் கலந்து கொண்டு யோகா பயிற்சி செய்தார்.
அந்த நிகழ்ச்சியில், விஜயகாந்த் யோகாசனங்கள் செய்த படங்கள் மற்றும் வீடியோ பதிவுகள் வெளியானதுமே அதனை கலாய்க்கும் விதத்திலான பதிவுகள் சமூக வலைதளங்களில் குவியத் தொடங்கின.
ட்விட்டரிலும் ஃபேஸ்புக்கிலும் விஜயகாந்தை கலாய்க்கும் விதவிதமான பல மீம்கள் புதுப்புது டிசைனில் கொட்டப்பட்டு வருகின்றன. இதனால், கடந்த இரு நாட்களாக விஜயகாந்த ட்ரெண்டிங்கில் இடம்பெற்று வருகிறார்.
இதில், விஜயகாந்துக்கு ஆதரவான கருத்துகளும் தொடர்ந்து இடம்பெறுவது சமூக வலைதள ஆர்வலர்களுக்கு சற்று ஆறுதலான போக்காக உள்ளது. ஒரு தேசியக் கட்சியின் தலைவர், சட்டமன்ற உறுப்பினர் என்ற நிலையைத் தாண்டி சமூக பொறுப்பு உள்ள ஒரு மனிதரை கலாய்ப்பதை எதிர்க்கும் கருத்துகளும் குறைவில்லாமல் இருந்து வருகிறது.
விஜயகாந்த் குறித்து வெளியாகும் பலதரப்பட்ட கருத்துகளில் வெகு சில இன்றைய ட்வீட்டாம்லேட்டில்...
கார்த்திகை @karthigaikumar - 'எலி'க்குப் போட்டியாகவே விஜயகாந்த் 'யோகா' செய்ததாக ஒரு தகவல். விஜயகாந்த்துக்கு தான் கலெக்ஷன் ஜாஸ்தியாமே....?
Dr பட்டர் கட்டர் @Butter_cutter - புள்ள காமெடி சேனல் கட் ஆகி தெரீலையேன்னு அழுதுச்சு , கேப்டன் யோகா செய்யறதை போட்டு விட்டேன்.. சிரிச்சுட்டே பார்த்துட்டிருக்கு .
உளறுவாயர்!! @Ularuvaayan - விஜயகாந்த் தன்னுடைய பெரும்பாலான சண்டைக் காட்சிகளில் டூப் போட்டு நடித்து இல்லை. வயதான காலத்தில், அவரின் யோகா முயற்சியை கிண்டலடிப்பது அநாகரிகம்.
நிலா ரசிகன்! @RaittuVidu - இந்த விஜயகாந்த் யோகாவ ஓட்டுனா கோபம் வர்ரவங்கள பாத்து கேக்குறேன்! உண்மையிலே அவர் பண்ற கூத்தெல்லாம் உங்க கண்ணுக்கு தெரியிறதில்லையா?
Er.பிரபு வெங்கடேஷ் @prabuvenkkatesh - என் உடல்நிலை சீராக இருக்க யோகாவே காரணம்- விஜயகாந்த் #அப்புறம் ஏன் தலைவரே மாசத்துக்கு நாலு தடவை மலேசியா, சிங்கபூர் போறீங்க?"
காப்பி @aab_01 - விஜயகாந்த் & குரூப் யோகா செய்ததை பார்த்தவுடன் குபீர்னு சிரிச்சவங்க மட்டும் இத Rt பண்ணுங்க..
K V Sriram Narayanan - என் உடம்பு இப்படி இருக்குன்னா அதுக்கு காரணமே யோகா தான்- விஜயகாந்த். இவர் பண்ணனும்கிறாரா, கூடாதுன்றாரா? #InternationalDayofYoga
சுந்தரேசன்.அ @sundaresan1945 - நடிகர் சங்கத்தின் மீது இருந்த கடனை, பல கலை நிகழ்ச்சிகள் நடத்தி அடைத்தவர் அப்போதைய அதன் தலைவர் விஜயகாந்த்! ஆனால் அவருக்குப்பின் வந்தவர்கள்?
வெ.தனஞ்செயன் @thananjayanv - விஜயகாந்த் இனி வருடா வருடம் யோகா செய்ய போறாராம். அடுத்த வருடம் மெரினா இல்லைனா நேரு ஸ்டேடியம்ல பண்ணச் சொல்லி நேரடி ஒளிபரப்பு செய்ய சொல்லனும்.
SouthIndian© 2.1 @D4Dilipan - விஜயகாந்த் யோகா பண்ணத பாத்து inspire ஆகி நானும் யோகா க்ளாஸ் சேரலாம்னு இருக்கன்!! #YogaDay
vignesh @vignesh_madurai - 'விஜயகாந்த் யோகா செய்தார்' - அட சும்மா இருங்கப்பா. ஒண்ணு, சோம்பல் முறிச்சிருப்பார் இல்லை யாரையாவது அடிக்க கை ஓங்கி இருப்பார்.
நர்சிம் @narsimp - உண்மையில் விஜயகாந்த் யோகா வீடியோவில் அவர் நடவடிக்கைகளைப் பார்த்து, சிரிப்போடு, அவரின் இந்நிலை குறித்த வருத்தமும் எழுந்தது.
Amudhan Ramalingam Pushpam - விஜய்காந்தை அவரது அரசியல் காரணமாக விமர்சனம் செய்யலாம். ஆனால் அவரது கருப்பு நிறம், ஆங்கிலம், பழக்கவழக்கங்கள், உடை ஆகியவற்றைக் கேலி செய்வதன் மூலம் நாம் நம்மை கேலி செய்கிறோம். நாம் எத்தகைய தாழ்வு மனப்பான்மை கொண்டவர்கள், அடிமைகள் என்பதை நமக்கு மட்டுமல்ல பிறருக்கும் நிரூபிக்கிறோம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT