Last Updated : 04 Jul, 2016 03:14 PM

 

Published : 04 Jul 2016 03:14 PM
Last Updated : 04 Jul 2016 03:14 PM

யூடியூப் பகிர்வு: சர்க்கரைத் தமிழில் பிறந்தநாள் வாழ்த்து பாட்டு!

கேண்டிலை ஊதி அணைத்து, கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடுவது மேற்கத்திய கலாச்சாரம்தான். ஆனால் இன்று தமிழ் மண்ணோடும் பிறந்தநாள் கொண்டாட்ட கலாச்சாரம் கலந்துவிட்டது. நம்முள் ஆழ்ந்துவிட்டது இந்த பண்பாட்டை தமிழ் மனத்தோடு கொண்டாட தற்போது ஒரு வாய்ப்பு கிட்டியுள்ளது.

ஆம், பிறந்தநாள் வாழ்த்துப் பாடலையாவது இனி தமிழில் பாடுவோம்.

தமிழில்தான் பிறந்தநாள் பாடல் இருக்கிறதே என்று உங்கள் மனம் நினைவுகளை அசை போட்டால் அது சிலோன் ரேடியோவில் ஒலிபரப்பப்பட்ட "பிறந்தநாள் இன்று பிறந்தநாள், பிள்ளைகள் போலே நாம் தொல்லைகள் எல்லாம் மறந்த நாள்.. " என்ற பாடலுக்கு இட்டுச் செல்லும். உண்மைதான் அதுவும் அழகான பாடலே. ஆனால், தற்போதையை தலைமுறைக்கு ஏற்ற இசையமைப்புடன் தமிழில் ஒரு பிறந்தநாள் வாழ்த்துப் பாடல் வெளியாகியுள்ளது.

இந்த பற்றாக்குறையைப் போக்குகிறது அறிவுமதியின் தமிழ் தித்திக்கும் வரிகளாலும், அரோல் கரோலியில் இனிய இசையாலும், உத்ரா உன்னிக்கிருஷ்ணனின் உயிர் தொடும் குரலாலும் உருவாக்கப்பட்டுள்ள இந்த பிறந்தநாள் வாழ்த்துப் பாடல்.