Published : 17 Aug 2016 10:31 AM
Last Updated : 17 Aug 2016 10:31 AM

சிலை சிலையாம் காரணமாம் - 30: கடத்தல் மன்னன் கபூரின் வேலைகள்!

சிங்கப்பூர் ஏசியன் சிவிலைசேஷன் மியூ சியம் 2007 நவம்பர் 21-ல் இருந்து மார்ச் 2008 வரை ‘நாளந்தா டிரையல் (Nalandha Trail)’ என்ற பிரம் மாண்ட கலைப் பொருள் கண் காட்சியை நடத்தியது. அப் போதைய இந்திய பிரதமர் மன்மோகன் சிங்தான் இந்தக் கண்காட்சியைத் தொடங்கி வைத் தார். இந்தியாவில் இருந்து கடத்தப் பட்டு, நியூயார்க்கில் தனது ‘ஆர்ட் கேலரி’யில் வைத்திருந்த புத்தர் சிலை ஒன்றை இந்தக் கண்காட் சிக்குக் கொண்டு வந்து பார்வைக்கு வைத்திருந்தார் கபூர்.

இந்தியப் பிரதமர் திறந்து வைத்த கண்காட்சியில் இடம்பெற்றது என்று சொல்லியே புத்தர் சிலையின் விலை மதிப்பைக் கூட்டினார் கபூர். இந்தச் சிலையும் இப்போது அமெரிக்கா வின் ‘ஹோம்லேண்ட் செக்யூரிட்டி’ போலீஸாரால் கபூரின் கோடவு னில் இருந்து பறிமுதல் செய்யப் பட்டுள்ளது. இந்தியாவில் இருந்து திருட்டுத்தனமாக இன்னொரு நாட் டுக்குக் கடத்தப்பட்ட இந்தியாவின் பொக்கிஷத்தை இந்திய பிரதமர் திறந்து வைத்த கண்காட்சியில் காட்சிக்கு வைத்து, அதன் விலை மதிப்பை உயர்த்திக் கொண்டிருக்கிறார் கபூர். இப்போது தெரிகிறதா கபூர் எவ்வளவு கெட்டிக்காரர் என்று!

‘நேஷனல் கேலரி ஆஃப் ஆஸ்திரேலியா’ மியூசியத் தில் கடத்தல் சிலைகள் அதிக அள வில் இருப்பதாக வெளியான தகவல் களை அடுத்து, அதுகுறித்து விரி வான விசாரணை நடத்துவதற்காக அந்நாட்டு உச்சநீதிமன்ற நீதிபதி க்ரீனன் தலைமையில் கடந்த பிப்ரவரியில் குழு ஒன்றை அமைத் தது ஆஸ்திரேலிய அரசு.

க்ரீனன் குழுவானது கபூரிடம் இருந்து வாங்கப்பட்ட கலைப் பொருட்களில் உத்தேசமாக 100 பொருட்களை மட்டும் ஆய்வுக்கு எடுத்தது. அதில் 70 சதவீதம் முறை யான ஆவணங்கள் இல்லாமல் இருந்தன. இதையடுத்து, தங்க ளிடம் உள்ள அனைத்துக் கலைப் பொருட்கள் மற்றும் சிலைகள் குறித்து முழுமையான ஆய்வு நடத்திய அந்த மியூசியம், தங்களிடம் உள்ள கலைப் பொருட்கள் பற்றிய விவரங்களைப் பகிரங்கமாக இணை யத்தில் வெளியிட்டுவிட்டது.

கபூரால் கடத்தப்பட்ட புரந் தான் நடராஜர் சிலையும் அர்த்த நாரீஸ்வரர் சிலையும் ஆஸ்தி ரேலியாவில் உள்ள ‘நேஷனல் கேலரி ஆஃப் ஆஸ்திரேலியா’வில் இருந்து மீட்கப்பட்டது. இவற்றோடு ஆஸ்திரேலியாவின் தனியார் மியூ சியம் ஒன்று, தங்கள் வசம் வைத் திருந்த புரந்தான் கோயில் மாணிக்கவாசகர் சிலையைத் தாமாக முன்வந்து ஒப்படைத்தது. இந்த மூன்று சிலைகளையும்தான் 2014 செப்டம்பர் 5-ல் ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அபாட் தனது இந்திய வருகையின்போது டெல்லியில் பிரதமர் மோடியிடம் ஒப்படைத்தார்.

புரந்தான் கோயிலின் ஐம் பொன் விநாயகர் சிலையை 2006-ல் அமெரிக்காவில் உள்ள டொலைடோ மியூசியத்துக்கு 6 லட்சத்து 75 ஆயிரம் டாலருக்கு விற்றிருக்கிறார் கபூர். அதற்கு முன் 1998-ல், ஒடிசாவில் இருந்து பாலா மன்னர்கள் காலத்திய வராகமூர்த்தி சிலையையும் கபூர் கடத்தி வந்து இந்த மியூசியத்துக்கு விற்றதாகச் சொல்கிறார்கள்.

இந்நிலையில், கபூரை ஜெர்மனி யின் ‘இண்டர்போல்’ போலீஸார் கைதுசெய்த நேரத்தில், நியூயார்க் கில் இருந்த தனது மேனேஜர் ஆரோன் ஃப்ரீட்மேனுக்கு ஒரு ரகசிய தகவல் அனுப்பினார் கபூர். தனது நியூயார்க் ஆர்ட் கேலரியில் உள்ள நான்கு ஐம்பொன் சிலை களை எடுத்து, தனது பெண் தோழி செலினா முகமதுவிடம் கொடுத்துவிடவும் என்பதுதான் கபூர் அனுப்பிய அந்த ரகசிய தகவல்.

இந்திய வம்சா வழியினரான செலினாவும் நியூயார்க்கில் ஆர்ட் கேலரி நடத்துகிறார். இவரது தந்தை அப்துல்லா மேக்கூப் 1969-ல் அமெ ரிக்கக் குடியுரிமை பெற்றவர். கபூருக்கும் செலினாவுக்கும் வணிக எல்லையைக் கடந்த நட்பு உண்டு. கபூர் சொன்னபடியே, சுத்தமல்லி கோயிலில் இருந்து கடத்தப்பட்ட நடராஜர் மற்றும் 2 அம்மன் சிலை கள், பூமிக்கு அடியில் இருந்து எடுக்கப்பட்ட இன்னொரு நடராஜர் சிலை என மொத்தம் நான்கு ஐம் பொன் சிலைகளை எடுத்துக் கொண்டுபோய், 2011 நவம்பரில் செலினாவிடம் கொடுக்கிறார் ஃப்ரீட்மேன்.

அந்தச் சிலைகளின் மொத்த மதிப்பு சுமார் 100 கோடி ரூபாய். இந்தச் சிலைகளை இரண்டு நாட்கள் தன் வசம் வைத்திருந்த செலினா, ‘இவற்றை வைத்திருக்க எனக்கு அச்சமாக இருக்கிறது’ என்று சொல்லி, கபூரின் தங்கை சுஷ்மா சரீனிடம் கொடுக்கிறார். இந்த விவா கரங்களைத் தெரிந்து சுஷ்மா சரீனுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்கிறது அமெரிக்காவின் ஹோம்லேண்ட் செக்யூரிட்டி போலீஸ். அந்தச் சிலை களை மறைத்து வைத்ததை நீதிமன் றத்தில் ஒப்புக்கொண்ட சுஷ்மா சரீன், 10 ஆயிரம் டாலருக்கு பிணைப் பத்திரம் எழுதிக் கொடுத்துவிட்டு, வெளியில் வந்துவிட்டார்.

நான்கு ஆண்டுகளாக தமிழகச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சுபாஷ் கபூரிடம் இருந்து உபயோக மான எந்தத் தகவலையும் பெற முடியவில்லை என்றபோதும், அவர் ஜாமீனில் வெளியில் வரமுடியாத படிக்கு சாமர்த்தியமாக வலை பின்னிவைத்திருக்கிறது தமிழக சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு (சி.ஐ.டி) போலீஸ். இதன் பின்னணி யில் அந்தப் பிரிவின் ஐ.ஜி-யான பொன் மாணிக்கவேலின் மதிநுட் பம் ஒளிந்திருக்கிறது. தமிழக சிலைக் கடத்தல் பின்னணிகள் குறித்து அவரிடமும் பேசினோம்.

- சிலைகள் பேசும்… | ‘The India Pride Project' உதவியுடன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x