Published : 04 Feb 2017 04:10 PM
Last Updated : 04 Feb 2017 04:10 PM

நெட்டிசன் நோட்ஸ்: நந்தினி பாலியல் வன்கொடுமை- ஏனிந்த பாகுபாடு?

தலித் சிறுமி நந்தினி கொலை வழக்குக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்று சமூக ஊடகங்களில் நெட்டிசன்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர். நந்தினிக்கு நீதி கோரி #Justice4Nandhini என்ற ஹேஷ்டேகில் ஃபேஸ்புக்கிலும் ட்விட்டரிலும் நெட்டிசன்களால் ஆயிரக்கணக்கான பதிவுகள் இடப்பட்டு வருகிறது.

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே சிறுகடம்பூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் மகள் நந்தினி (17), கடந்த ஜனவரி 14-ம் தேதி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டு, கிணற்றில் சடலமாகக் கிடந்தார். இதுகுறித்து இரும்புலிக்குறிச்சி போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு கீழமாளிகையைச் சேர்ந்த ராமசாமி மகன் மணிகண்டன்(26), அவரது நண்பர் மணிவண்ணன் உள்ளிட்ட 4 பேரை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

இதன் தொடர்ச்சியாக, இந்து முன்னணி மாவட்டத் தலைவர் ராஜசேகரை கைது செய்யக் கோரி, நந்தினியின் உறவினர்கள் கடந்த ஜன.15-ம் தேதி அரியலூரில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இவ்வழக்கை சிபிஐ விசாரிக்கக் கோரி மாதர் சங்கத்தினர் அரியலூரில் ஜன.28-ம் தேதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், தேசிய ஆதி திராவிடர் நல ஆணைய அதிகாரிகள் இனியன், லிஸ்டர் ஆகியோர் தீவிர விசாரணை நடத்திவிட்டுச் சென்றனர்.

நந்தினி பாலியல் வன்கொடுமை தொடர்பாக சமூக ஊடகங்களின் முறையான விசாரணை கோரிய தொடர்ச்சியான வலியுறுத்தல்களாலேயே, விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளதாகவும் கூறப்படும் நிலையில், நெட்டிசன்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட கருத்துகளின் தொகுப்பு இன்றைய நெட்டிசன் நோட்ஸில்...

Lekha ‏@yalisaisl

தந்தையை இழந்து, படிப்பைக் கைவிட்டு, கூலி வேலை பார்த்த சிறுமிக்கு, மேல்தட்டு ஆட்கள் வாழ்வு நெறி பாடம் எடுப்பதென்பது எவ்வளவு பெரிய கொடுமை? #JusticeforNandhini

நிலாக்காதலன்®(velu) ‏@Nilakathalan_ve

அதென்னமோ தெரியலை.. ஏழைகளுக்கு பிரச்சினைனா பெரிதாக கண்டுக்காத அரசாங்கம், ஓட்டு கேட்க இதைப் பார்ப்பதில்லை! #JusticeforNandhini

மாஸ்டர் பீஸ் ‏@Kannan_Twitz

ஐந்தறிவு கொண்ட மிருகம் கூட தன் இனத்தைத் துன்புறுத்திக் கொலைசெய்வதில்லை என்பதுதான் டிசைனின் உச்சம்.#JusticeforNandhini

ElavarasanThangasamy ‏@elasan89

இறந்த போனது ஒரு பெண். அதுக்கு காரணமானவனுக்கு தண்டனை வழங்கவேண்டும். அவ்வளவுதான். இதுல ஏன் சாதி & மதம் எல்லாம் வருது? #JusticeforNandhini

Jothimani ‏@jothims

ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் பெண்களைப் பாதுகாப்பாக உணர வைத்தவர்களே தமிழ்நாட்டு ஆண்கள்.. வன்கொடுமை செய்தவரை எண்ணி அவமானப்படுவோம். #JusticeforNandhini

Sushima Shekar ‏@amas32

நந்தினி கொலையுண்ட விதத்தைப் படிக்கும்போதே குலை நடுங்குகிறது. கொலையாளிக்கும் அவனுடைய கூட்டாளிகளுக்கும் தகுந்த தண்டனை கிடைக்க வேண்டும்.

madhavan ‏@madhavan666

ஆணாக இருப்பதை எண்ணி அவமானப்படுகிறேன். கொலையாளிகளை சிரச்சேதம் செய்ய வேண்டும். #JusticeforNandhini

திவாகரன் $ ‏@sThivagaran

நீதி கேட்டுக் கிளர்ந்தெழுந்து

அடங்கிவிட்டதொரு பெருநாடு.

இன்னும் அழுதுகொண்டுதான்

இருக்கிறது அங்கொரு சிறுவீடு!

பூ பாலன்.. ‏@I_M_Bhoobalan

ஜல்லிக்கட்டுல கலந்துகிட்டு செல்பி எடுத்து ட்வீட் போட்டவங்க நந்தினிக்காக ஒரு குரல்கூட கொடுக்காததுதான் வியப்பா இருக்கு.

Shiva ‏@shankishiva

நிர்பயா - இந்தியாவின் மகள்

நந்தினி - தலித் மாணவி

Balamurugan ‏@ibalamurugan72

மாட்டுக்காக கவலைப்பட்டவர்கள் மகளிருக்காக ஒரு துரும்பைக் கூட கிள்ளவில்லையே. #JusticeforNandhini

Komahan KC ‏@kckomahan

குற்ற தண்டனைகளை சவூதி அரேபியாவிற்கு அயலாக்கம் செய்ய வேண்டும். #JusticeforNandhini

Divya Ashika ‏@shreya1616

காதலிக்கலைனா கண்டவன் கொன்னுடுறான்

காதலித்தால் அப்பாவே கொன்னுடுறார்

இல்லைனா காதலனே கற்பழிச்சு கொன்னுடுறான்.

பொண்ணுங்க பாவம்.

chellam pandiyan ‏@PandiyanChellam

இவளின்றி நாமில்லை

இது ஏன் இவர்களுக்கு தோணவில்லை,

இவள் வதைக்கப்பட வேண்டியவள் அல்ல,

வணங்கப்பட வேண்டியவள். #பெண்ணியம்

kiruthiga sampath ‏@Kiruthiga1207

சோசியல் மீடியால டிரெண்ட் ஆனா தான் இனி தமிழ்நாட்டுல நீதி கிடைக்கும் போல.#JusticeforNandhini

இசை ‏@isai_ Feb 2

நீதியின் மீது நம்பிக்கை கொண்ட அனைவரும் இதற்காக குரல்கொடுக்க வேண்டும். #justicefornandhini

sathya kesav ‏@sathya_0555

அந்த உயிர் உடலையும் உலகையும் விட்டு பிரியும் போது எவ்வளவு வேதனையை அடைந்து இருக்கும். ஓர் ஆணாகத் தலை குனிகிறேன். #JusticeforNandhini

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x