Published : 06 Jul 2016 03:28 PM
Last Updated : 06 Jul 2016 03:28 PM
ஈகைத் திருநாளாம் ரம்ஜான் பண்டிகை உலகெங்கும் உள்ள இஸ்லாமியர்களால் கொண்டாடப்படுகிறது. ரம்ஜான் நாளுக்கே உரித்தான 'பிரியாணி' குறித்து நெட்டிசன்கள் தங்கள் கருத்துக்களை பதிவு செய்துவருகின்றனர்.
>#பிரியாணிகிடைக்கல என்ற ஹேஷ்டேக், இந்திய அளவில் ட்விட்டரில் ட்ரெண்டிங் ஆனது. அதைத்தொடர்ந்து பிரியாணி குறித்த நெட்டிசன்களின் பதிவு இன்றைய நெட்டிசன் நோட்ஸில்...
இப்பொழுது வரை பிரியாணி கிடைக்குமா கிடைக்காதா என்ற குழப்பத்தோடே கழிகிறது என் தினம்!!!
முகம் நக நட்பது நட்பன்று ரம்ஜானுக்கு பிரியாணி போடும் அஹமதுவின் நட்பே நட்பு!
மட்டன் பிரியானி, சிக்கன் பிரியாணி, அட குஸ்கா கூட வேணாம்பா, தக்காளி, புளி சோறாவது குடுங்கடா , நா பிரியாணின்னு நெனச்சிக்கிறேன். #பிரியாணிகிடைக்கல
நீங்க ரம்ஜானுக்கு பிரியாணி தந்தா, நாங்க பொங்கலுக்கு சர்க்கரை பொங்கல் தருவோம்... #சமத்துவம் #சமாதானம்
தீபாவளின்னா வெடி வெடிக்கனும், ரம்ஜான்ன்னா பிரியாணி திங்கனும். #பிரியாணிகிடைக்கல
நாளைக்கு யார் கிட்ட "பிரியாணி வாங்கி சாப்பிடலாம்" என்பதே காலையில் இருந்து மனதில் ஓடிக்கிட்டு இருக்கு...
இங்க யாரும் பிரியாணிக்காக இஸ்லாமியர்கள் கூட பழகல. நாம ப்ரியமா இருக்குறதுனால தான் பிரியாணி தர்றாங்க.
பிரியாணி கொடுப்பவன் நண்பன். லெக் பீசோடு பிரியாணி கொடுப்பவன் உயிர் நண்பன்.
நாம் பிறையை தேடி... தோழர்கள் பிரியாணி தேடி... வாழ்த்துக்கள்.
தனி ஒரு மனிதனுக்கு பிரியாணி இல்லையேல் ஜகத்தினை அழித்திடுவோம்!
பிறை தேடும் இரவிலே உயிரே.., பிரியாணி தேடி அலைகிறாய்! குஸ்கா கொடுக்க அழைக்கிறேன் அன்பே நீ வா!!
அந்தர்ஜனம் @godwinrajjb
சாப்பாடே கிடைக்காத ஏழைகளுக்கு பிரியாணி போடுங்கள். இனிய ரமலான்.
இன்னிக்கு ரம்ஜான் இருக்குமா இருக்காதானு டவுட்டு அவங்களுக்கு. பிரியாணி கெடைக்குமா கெடைக்காதாங்கிற டவுட்டு நம்மளுக்கு.
பிரியமானவங்க "பிசியா" இருக்குறதகூட தாங்கிக்க முடியும்; பிரியாணி "ருசியா" இல்லேன்னா தாங்கிக்கவே முடியாது...
இதுக்கு முன்னாடி வாழ்க்கைல பிரியாணியை சாப்பிட்டதே இல்லைங்கற மாதிரி பிரியாணி பிரியாணின்னுட்டு.. சைய். #யாரும் பிரியாணி தரமாட்டிங்கறாங்களே
பிரியாணி செய்தாரை ஒறுத்தல் அவர்நாண பிரியாணி தின்று விடல்
எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை பிரியாணி தரமறந்த பாய்க்கு.
இன்று போராளிகள் ஸ்டேடஸ் : #Eating பாய் வீட்டு பிரியாணி. ஆனா நிஜத்தில சாப்டதோ பழையயசோறும் பச்சமிளகாயுமா இருக்கும்.
இன்னைக்கு ஒரு மேரேஜ், மதியம் இங்கயும் சாப்டுட்டு ப்ரண்டு வீடல் போய் எப்டி பிரியாணி சாப்டமுடியும்னு யோசிச்சேன். நல்லவேளை நாளைக்குதான் ரம்ஜான்
பெர்யான் (தாளிக்கப்பட்ட அரிசி அல்லது வறுக்கப்பட்ட அரிசி) என்ற பாரசீக வார்த்தையே 'பிரியாணி' என்றானது!
ரம்ஜானு'க்கு பிரண்டு கிட்ட பிரியாணி கேக்க வெக்கப்படுறவன், வாழவே வெக்கப்படனும்ங்க…
வாழ்க்கைல கேர்ள்பிரண்டு இல்லாம கூட இருந்துடலாம். ஆனா ரம்ஜான், பக்ரீத் அன்னைக்கி பிரியாணி குடுக்க ஒரு பாய் பிரண்டு இல்லாம இருக்கறதுதான் கொடுமை.
பிரியாணி எங்கம்மா தராங்க..ரம்ஜான் வாழ்த்துக்கள் சொன்னா "தேங்க்ஸ்"னு சொல்லி முடிச்சுப்புட்றாங்க.
தாங்கள் அனுப்பிய பிரியாணி கிடைக்கப்பெற்றது..... வாழ்த்த வயதில்லை.... வணங்குகிறேன்....
பேஸ் புக்குல உட்கார்ந்துக்கிட்டு பிரியாணி கேட்கறதுக்கு..... ஊர்ல நாலு பாய்ங்க கூட தாயா புள்ளையா பழகுங்கபா வீடு தேடி பிரியாணி வரும்....
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT