Published : 07 Jul 2016 10:52 AM
Last Updated : 07 Jul 2016 10:52 AM
தேவனின் மாஸ்டர் பீஸ் படைப்புகளில் ஆனந்த விகடனில் வந்த ‘துப்பறியும் சாம்பு’வுக்கு முக்கியமான இடம் உண்டு. ‘துப்பறியும் சாம்பு’வின் நாடக வடிவத்தை முதலில் மேடை யில் அறிமுகம் செய்தவர், ‘சாம்பு’ என்.எஸ்.நடராஜன். ‘தொடர் கதையை நாடகமாக்க முடியுமா?’ என்ற சந்தேகம் தேவனுக்கு ஏற் பட்டிருக்கிறது. நடராஜனிடம் யோசனை கேட்டிருக்கிறார். இரு வரும் நாடகமாக்க இயலும் என்கிற முடிவுக்கு வந்த போது, ‘சாம்பு’ பாத்திரத்தை நீங்கள்தான் ஏற்று நடிக்க வேண்டும் என்ற கோரிக் கையை வைத்திருக்கிறார் தேவன். அவரும் ஒப்புக்கொள்ள என்.எஸ். நடராஜனுக்கு ‘சாம்பு’ என்ற பட்டப் பெயரும் சேர்ந்து கொண்டது.
‘காக்காய் உட்காரப் பனம்பழம் விழு’வதை நகைச்சுவையுடன் விவரிக்கும் தேவனின் இந்தப் படைப்பில், கூர்மையான மூக்கும், வழுக்கைத் தலையும் கொண்ட அறிவு குறைவான ஒரு வங்கி குமாஸ்தா சாம்பு, மக்களால் வியக் கப்படும் ஓர் அற்புதமான துப்பறியும் நிபுணனாக ஆகிறார். சாம்புவை காவல்துறை கவுரவிக்கிறது. லண்டன் ஸ்காட்லாந்து ‘யார்டு’ இவருக்கு அழைப்பு விடுக்கிறது.
என்.எஸ்.நடராஜனின் திருவல் லிக்கேணி ஃபைன் ஆர்ட்ஸ் கிளப், ‘துப்பறியும் சாம்பு’ நாடகத்தை வெற்றிகரமாக நடத்தியது. காத்தாடி ராமமூர்த்தி சாம்புவாக அவதாரம் எடுத்திருந்தார். இவரது ஸ்டேஜ் கிரியேஷன்ஸ் நாடகக் குழு துப் பறியும் சாம்புவுடன் வலம் வந்தது. ராமமூர்த்திக்கு ஏற்கெனவே ‘காத் தாடி’ என்ற பட்டப் பெயர் இருந்ததால், அவர் பெயருக்கு முன்னால் ‘சாம்பு’ ஒட்டிக்கொள்ளவில்லை.
ஸ்டேஜ் கிரியேஷன்ஸ் குழு வுக்கு இது பொன்விழா ஆண்டு. இன்னொருப் பக்கம், காத்தாடி ராமமூர்த்தி மேடையேறி 60 ஆண்டு கள் நிறைவுபெறுகின்றன. இந்த இரண்டையும் கொண்டாடும் நோக் கத்துடன் ‘துப்பறியும் சாம்பு’ நாடகத்தை இரண்டு நாட்கள் மேடை யேற்றியது ‘ஷ்ரத்தா’ தியேட்டர் அமைப்பு. காத்தாடி சாம்புவாக நடிக்க, இவரின் மைத்துனன் வெங்குட்டுவாக முன்பு நடித்த பம்மல் பாச்சாவுக்கு இந்த முறையும் அதே ரோல். மற்ற பாத்திரங்கள் அனைத்தும் புதியவர்களுக்கு.
வழக்கமாக ‘ஷ்ரத்தா’வின் நாடகங்களில் காணப்படும் பகட்டான காட்சி அமைப்பு சாம்புவில் காணக் கிடைக்கவில்லை. முக்கியமாக அந்தப் பூங்கா காட்சி ரொம்ப ஸோஸோ! அதே மாதிரி, கதை நடந்த அந்த நாட்களை கண்முன் கொண்டுவந்து நிறுத்தவும் மெனக் கெடவில்லை.
நாடகத்தையே சுவாசமாகக் கொண்டிருக்கும் காத்தாடி ராம மூர்த்தி, துப்பறியும் சாம்புவை ஒண்டி ஆளாக தன் தோளில் சுமந்து சிலம் பம் ஆடியிருக்கிறார்! கணுக்கால் தெரிய வேஷ்டி. கருப்பு கோட்டு, வழுக்கைத் தலையில் அப்பாவியாக முகத்தை வைத்துக்கொண்டு ஒவ் வொரு முறையும் இவர் துப்பறியும் போதும்… கற்பனையில் தேவன் உருவாக்கிய சாம்புவுக்கு உயிரும் உருவமும் கொடுத்து அழகான அஞ்சலி செலுத்திருக்கிறார் காத்தாடி.
இவருக்கு அடுத்தபடியாக பம்மல் பாச்சா. நல்ல குரல்வளம். நெத்தி யடி பாடி லாங்குவேஜ். ஆனாலும் கூட, வேம்புவின் தம்பியாக இவரை துளியும் ஏற்க முடியவில்லை. கார ணம், பாச்சாவின் வாட்டசாட்டமான உடல்வாகு. பாத்திரம் அறிந்து பிச்சை இடப்படவில்லை. மற்ற பாத்திரங்கள் எல்லாமே சாம்புவைச் சுற்றியே வட்டமிட்டுக் கொண்டிருப்பதால் சொல்லிக்கொள்ளும் அளவு எதிலும் பளபளப்பு இல்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT