Published : 15 Jun 2017 04:21 PM
Last Updated : 15 Jun 2017 04:21 PM

யூடியூப் பகிர்வு: முதியோர் வன்கொடுமை எதிர்ப்பு- தெய்வங்கள் வாழும் வீடு செய்வோம்!

ஜூன் 15 - உலக முதியோர் வன்கொடுமை எதிர்ப்பு தினம்

முதியோர்கள்- வயதில் மட்டுமா பெரியவர்கள்? அனுபவத்தில், சொல்லில், செயலில், சிந்தனையில், நற்பண்பில், வாழ்க்கையில் என அனைத்திலுமே பெரியோர்கள்.

குழந்தைப் பருவத்தில் அவர்களைப் பார்த்தே வளர்ந்து, அவர்களால் கவரப்பட்டு, அவர்களையே பின்பற்றிய நாம், நமது இளமைப் பருவத்தில் அவர்களை ஒதுக்கலாமா? சரியான உணவு, உடை அளிக்காதது மட்டும்தான் கொடுமையா? 'உனக்கு இதெல்லாம் தெரியாதும்மா', 'இதுல எதுக்குப்பா தலையிடறீங்க?', 'உங்க அப்பா, அம்மாவுக்கு என்ன தெரியும்?' என்னும் சொற்களும் அவர்களைத் துன்புறுத்தும்.

ஆறில்லா ஊருக்கும், ஆளில்லா வீட்டுக்கும் அழகு பாழ்தானே..

அம்மாவும், அப்பாவும் எந்நாளும் வீட்டுக்கு சாமி போல்தானே...

*

பெற்றவர் இல்லா வெற்றிடம் எல்லாம்

காற்று இல்லா விளைநிலம்தான்..

*

உருவம் வரைந்த உறவுகள் இங்கே உதிர்ந்திடலாமோ..

உயிரை ஊதிய கருவறை சொந்தம் கலங்கிடலாமோ...

வரிகளே போதும், வலியை உணர்த்திச் செல்ல..!

காணொலியைக் காண: