Last Updated : 29 Aug, 2016 06:01 PM

 

Published : 29 Aug 2016 06:01 PM
Last Updated : 29 Aug 2016 06:01 PM

யூடியூப் பகிர்வு: மரியாதைக்குரிய மருதநாயகம் இவர்தான்!

ஸ்மைல் சேட்டைக்காரர்களின் கலாய்ப்பில் சிக்காத சினிமாக்காரர்களோ, பிரபலங்களோ தமிழ்நாட்டில் இல்லை. அதிலும் தேர்தல் நேரத்தில் அவர்களது அலப்பறை அர்த்தம் பொதிந்தது. எச்சரிக்கை உணர்வோடுதான் மருதநாயகம் வீடியோவுக்குள் நுழைகிறோம்.

எதிர்பார்த்ததற்கு மாறாக முற்றிலும் கண்ணியமான அனுபவத்தை தருகிறது ஸ்மைல் சேட்டைக்காரர்களின் 'மருதநாயகம்'.

இளம் வயதிலேயே போர்த்திறமைகள் மிக்க மருதநாயகத்துக்கு பல பெயர்கள் உண்டு. பல வாழ்க்கைகள் உண்டு என்பதை போகிறபோக்கில் தட்டிவிடுகிறது இந்த வீடியோ பதிவு. மருதநாயகம் எனும் யூசுப்கான் பிரெஞ்சுப்படையில் சிப்பாயாக பணிபுரிந்ததையும். அங்கு திருட்டுப்பட்டம் கட்டப்பட்டு காதுஅறுபட்ட நிலையில் ஆர்க்காடு நவாப் படையில் சேர்ந்ததையும் போர்ச்சுகல் காதலியே வாழ்க்கைத் துணையானது குறித்தும் சரித்திரக் குறிப்புகளை சரளமாய் தெறிக்கவிடுகிறார் இயக்குநர் நீலேஷ் சிம்ஹா,

ஒரு சாதாரண சிப்பாயாக இருந்து கடும் உழைப்பினால் நவாப் படையின் தளபதியானதையும் மதுரைக்கு மன்னனான யூசுப்கான் யாரோடு எல்லாம் இணைந்து வளர்ந்தானோ அனைவரையும் எதிர்த்த மருதநாயகத்தின் போர்த்திறத்தையும் வலிமையையும் பேசியுள்ள விதம் அருமை.

கமல் ஒரு விஷயத்தை கையில் எடுத்தால் அது எவ்வளவு அதிமுக்கியத்துவம் வாய்ந்தது என்பதையும் புரிந்துகொள்ள வைத்துள்ளது ஸ்மைல் சேட்டையின் இந்த டீம் முயற்சி, கமல் முயற்சியில் களம் காணஉள்ள முழுநீளப் படத்திற்காக காத்திருப்போம். அதுவரை ஸ்மைல் சேட்டை குழுவின் வீடியோ வழியே சரித்திரத்திற்குள் செல்வோம்... நீங்களும் வாங்க....

வீடியோ பதிவைக் காண....