Published : 22 Feb 2017 03:33 PM
Last Updated : 22 Feb 2017 03:33 PM
'வேற்றுமையில் ஒற்றுமை' என்ற வாசகம் இந்தியாவை உலகுக்கு புரியவைக்கும் தாரக மந்திரம். அது நம் இதயங்களாலும் அங்கீகரிக்கப்படவேண்டும் என்பதுதான் பிரச்சினை.
'களவு' குறும்படம் அதை ஒரு கோரிக்கையாகக் கூட வைக்கவில்லை. புரிதலுக்குத் தேவையான ஆழத்தை எளிதான காட்சிகளில் முன்வைத்துவிடுகிறது.
கணேசலிங்கம் ஷெண்பகம், சிவா, ரித்திஷ், நித்திஷ், சீனு, அபி ஆகியோரின் நடிப்பில் சுஜித் நா சுப்பிரமணியத்தின் ஒளிப்பதிவில், சுந்தர் சிவராமகிருஷ்ணனின் இசையில், ஆனந்த், ப்ரேம், ஆன்டனி அல்கந்தர், திங்க் ப்யூச்சர் ஸ்டூடியோஸ் உள்ளிட்டோர் பங்களிப்பில் இச் சின்னஞ்சிறு குறும்படத்தை உயரத்திற்கு கொண்டுசென்றுவிட்டார்கள்.
இதில் கூர்ந்து நோக்கும்போது பிடிபடும் விஷயங்கள் பெரிய விவாதத்துக்கு நம்மை அழைக்கின்றன. பல மதங்களின் கலவை, நான்கு பேர் கூடியுள்ள சமூகம்!
எல்லாம் சரி, ''இவன்தான் திருடியிருப்பான்'' என்று கண்ணைமூடிக்கொண்டு ஒருவர் மீது பழிபோடும் எண்ணம் எப்படி வருகிறது. நம் சமுகத்திலிருந்துதானே அது வளர்த்தெடுக்கப்பட்டுள்ளது.
தனித்த அடையாளங்களால் உருவாகும் சிக்கல்களுக்கு என்ன தீர்வு? அதன் வலிகள் வார்த்தைகளுக்குள் அடங்காது.
இயக்குநர் ஜெயச்சந்திர ஹஸ்மி ஒன்றேமுக்கால் நிமிடங்களில் நம் நெஞ்சை தைத்த கதையை நீங்களும் பாருங்களேன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT