Last Updated : 02 Feb, 2017 10:48 AM

 

Published : 02 Feb 2017 10:48 AM
Last Updated : 02 Feb 2017 10:48 AM

இதுதான் நான் 61: காதலும், வீரமும் கலந்த நமது கலாச்சாரம்!

‘அன்றில்’ காதலில் இருக்கும்போது நம்மை அறியாமலே ஒரு தைரியம் வரும். எந்த ஒரு விஷயத்தை அணுகுவதாக இருந்தாலும் நாம ஓபன்அப் ஆயிடுவோம். நம் கூட இருக் கிறவங்க, எதிர்ல இருக்கிறவங்கக் கிட்ட பேசுறதுலேர்ந்து எல்லாத் தையுமே அதுவரைக்கும் இல் லாத ஒரு தைரியத்தோட எதிர் கொள்வோம்.‘இதுக்கு முன்னாடி இவரை இப்படிப் பார்த்ததே இல்லையே’னு பக்கத்தில் இருக் கிறவங்க மத்தவங்கள்ட்ட சொல் வாங்க. தெரியாதவங்க இப்படி ஒரு பக்கம் பேசினாலும், நம் கூடவே இருக்கிற ஃபிரெண்ட் ஸும், அவங்களைச் சேர்ந்தவங் களும்கூட அதை பெருசா பார்ப்பாங்க.

ஷூட்டிங்ல இருக்கிறப்ப, லொக் கேஷனுக்கு சாப்பாடு லேட்டா வந்தா மத்த வேலைங்க தாமத மாகுதேன்னு, ‘‘ஏன் இவ்வளவு லேட்?’’னு கேட்போம். உடனே அதுக்கு, ‘‘லவ்வர் மேல இருக்கிற கோபத்தை நம்ம மேல காட்டு றார். எதுக்கு எடுத்தாலும் கோபப் படுறார்!’’னு சொல்வாங்க. அதைக் கேட்கிறவங்களும், ‘‘ஆமாமாம். உண்மைதான்!’’னு சொல்வாங்க. ஏன் நமக்கு தெரிஞ்சவங்கக்கூட அதையேதான் நினைப்பாங்க. ‘‘ஏன் சாப்பாடு இவ்வளவு லேட் டாகுது’’ங்கிற இதே கேள்வியை காதல்ல இல்லாத காலகட்டத் துலயும் கேட்டிருப்போம். ஆனா, அப்போ இப்படி நினைக்கிற தில்லை. இப்படி நம்ம கோபம், தோல்வி, வேகம் இதெல்லாத்தை யுமே காதலோட தொடர்பு படுத்திடுவாங்க. காதல்ல இருக் கிற அந்தக் காலகட்டத்தில் எல்லாத்தையும் மீறி நாம ஒரு மனநிலையோட டிராவல் ஆகறதுக்கு ஒரு துணிச்சல் இருக்கணும்.

அதே மாதிரி, நாம் தப்பு பண்ணிடக்கூடாதேன்னு இன்னும் அதிகமா கவனத்தை செலுத்தி ஷார்ப்பா வேலைகளைப் பார்ப் போம். ஆனா, அது மத்தவங்க இடத்துலேர்ந்து பார்க்கிறப்ப, ‘‘எவ்வளவு ராங்கா நடந்துக்கிறார், பாருங்க!’’ன்னு சொல்றப்ப கோபத்தை வரவழைக்கத்தான் செய்யுது. அந்த நேரத்தில் நாம எது சரின்னு நினைத்துப் பண் றோமோ, அதெல்லாம் மத்தவங் களுக்கு தவறா தெரியுது. சினிமாவில் ஹீரோ, கரெக்ட்னு நினைச்சு ஒவ்வொரு விஷயத்தை யும் தொடுறப்ப, அதில் பல சிக்க லான ட்விஸ்ட்டுக்குப் போய் எப் படி கடைசியில் ஜெயிக்கிறாரோ… அந்த மாதிரி இந்த காதல்ல இருக் கிறப்பவும் நடக்குது.

முன்னெல்லாம் எனக்கு காதல் சப்ஜெக்ட் உள்ள இங்கிலீஷ் படங் கள் அவ்வளவா பிடிக்காது. நானும் லவ் படங்களை பெருசா பார்க்க வும் மாட்டேன். சூப்பர் மேன், மாயாபஜார் மாதிரியான படங் களைத்தான் அதிகம் விரும்பு வேன். அப்படி முன்னால பிடிக் காத அந்த காதல் படங்களெல் லாம் இப்போ திரும்பப் பார்க் குறப்ப ரொம்பப் புடிக்குது. அனு பவம்தான் இதுக்கு காரணம்னு நினைக்கிறேன். முன்னாலெல் லாம் எனக்கு நல்ல ஃபாஸ்ட் டைப் பாடல்கள்தான் பிடிக்கும். இப்போவெல்லாம் ஸ்லோ சாங்ஸும் பிடிக்குது. இதுக்கு வயசு காரணமில்ல, காதல் கொடுத்த அனுபவம்தான்.காதல்ல இருக்குறப்ப நேரம் போறதே தெரியாது.

இப்போவெல்லாம் 75% பேர் காதல்ல இருக்காங்க. முன் னால 25% பேர்தான் இருப்பாங்க. ஆனா, 25% பேர் காதல்ல இருக்குறப்ப எப்படி சுத்தியிருக்கிற வங்க எதிர்த்தாங்களோ, அதே மாதிரிதான் இப்போ 75 சதவீதம் பேர் காதல்ல இருக்கிறப்பவும் உள்ளுக்குள்ள எதிர்க்கத்தான் செய்றாங்க. காதலும், வீரமும் கலந்ததுதான் நமது கலாச்சாரம்னு படிக்கிறோம். ஆனா, இங்கே வீரத்தை ஏத்துக்குற அளவுக்கு காதலை வெளிப்படையா யாருமே ஏத்துக்குறதில்லை.

இப்பவும் என் சின்னப் பையன்கிட்ட, ‘‘கிளாஸ் ரூம்ல உன் பக்கத்தில் யார் யாரெல்லாம் உட்கார்ந்திருக்காங்க? உன் னோட திக் ஃபிரெண்ட்ஸ் யாரு? கேர்ள் ஃபிரெண்ட் இருக்காங் களா?’’ன்னு ஜாலியா கேட்பேன். அதுக்கு அவன் ரெண்டு, மூணு ஃபிரெண்ட்ஸ் பேரை மட்டும் சொல்லிட்டு, அதைப் பற்றிப் பேச பெருசா ஆர்வமே இல்லாம விளையாட ஓடிடுவான். அவன் கிட்ட அடுத்த கேள்வி கேட்கவே முடியாது. அவன் வேறொரு உலகத்தில் இருப்பான்.

நான் என்னோட சின்ன வயசு லயே சினிமாவுக்கு வந்துட்டேன். ஸ்கூல்லேர்ந்து வெளியே வந்த ரெண்டு, மூணு வருஷத்துல திடீர்னு என்னோட ஃபிரெண்ட்ஸ்ல ஒருத்தன் லவ் பண்றான்னு, இன் னொரு ஃபிரெண்ட் வந்து சொன் னான். ‘அப்ப்ப்ப்படியாயா யாயா!’ன்னு பயங்கர ஆச்சர்யமா இருந்துச்சு. ‘எப்படிடா இது நடந் துச்சு? யார்டா அந்தப் பொண்ணு?’னு அதிர்ச்சி குறை யவே இல்லை. இந்தியாவுலேர்ந்து அமெரிக்கா போய் அங்கே நடந்த பிரெசிடென்ட் தேர்தல்னு நின்னு ஜெயிச்ச மாதிரி, ஒரு வேலையை செஞ்சிருக்கானேன்னு தோணுச்சு. இப்போ சமீபத்துல அவன்கிட்ட பேசிட்டிருக்கிறப்ப திடீர்னு அவ னோட அந்த காதல் விஷயம் நினை வுக்கு வந்துச்சு. அவன்கிட்ட, ‘‘டேய் ஸ்கூல் டேஸ்ல காதல்ல இருந் தியே. அந்தப் பொண் ணையா கல்யாணம் பண்ணிக் கிட்டே?’ன்னு கேட்டேன். ‘‘டேய் அதெல்லாம் இப்போ பேசாதடா. என் ஒய்ஃப் காதில் விழுந் துடப்போவுது. நான் கல்யாணம் செஞ்சது அந்தப் பொண்ணு இல்லைடா மச்சி!’’ன்னு கிசு கிசுன்னு குரலைக் குறைச்சி, சைகையாலயே சொன்னான். ‘‘அவங்களோட பேரு என்ன?’’ன்னு திரும்ப அவன்கிட்ட கலாட்டாவா கேட்டேன். அவங்களோட பேரை கரெக்டா சொன்னான். ‘‘இது மட்டும் நியாபகம் வச்சிருக் கியே?’’ன்னு கேட்டேன். ‘‘அதை எப்படிடா மறக்க முடி யும்?’’னு சொன்னான். அந்த நேரத்துல அவனோட ஒய்ஃஃப் வந்து, ‘‘என்ன?’’ன்னு கேட்டாங்க. அதுக்கு நான், ‘‘அப்போ ஒரு ஹோட்டலுக்கு போனோம். அதைப் பற்றி சொல்லிட்டிருந் தேன்’’ன்னு விஷயத்தை மாத்தி சொன்னேன். ‘‘அப்பாடா தப்பிச் சோம்டா!’’ன்னு அவனோட ரியாக்‌ ஷன் இருந்துச்சு. சின்ன வயசில் இருந்த காதல் இப்போ மனை விக்குத் தெரிஞ்சா பிரச்சினை யாயிடும்னு பயந்துடுறாங்க.

‘அன்றில்’னு ஒரு பறவையைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கோமே. எப்பவும் சேர்ந்தேதான் இருக்கு மாம். ஏதோ ஒரு சூழல்ல தன்னோட துணையைப் பிரிஞ்சிட்டா உடனே இன்னொரு பறவை இறந்துடு மாம். இதெல்லாம் என்ன மாதிரி ஒரு லவ்? சொல்ல வார்த்தையே இல்லைங்க. அதே மாதிரி என் னோட பசங்கக்கிட்ட பேசிக்கிட் டிருக்குறப்ப, ‘‘தண்ணீல வாழுற மீனோ, இல்லேன்னா பறவை யோன்னு நினைக்கிறேன். எப்பவும் சேர்ந்தேதான் இருக்குமாம். தண்ணிக்குள்ள இருக்கிற ஒரு சின்னச் செடியைக் கடந்து… பிரிஞ்சித் திரும்ப சேர்றதுக்குள்ள இறந்து போய்டுமாம்’’னு ஒரு பேச்சு வந்தது. அவங்கக்கிட்ட இதை யார் சொன்னாங்கன்னு தெரியலை. இது உண்மையா? பொய்யான்னு கூட புரியலை. ஆனா பிரம்மிப்பாவும், ஆச்சர்ய மாவும் இருந்தது.

நானும், என் நண்பர்களும் ஸ்கூல்ல படிக்கிறப்ப, பொண் ணுங்களைப் பத்தி பேசியதோ, ஜாலியா கலாட்டா பண்ணியதோ இல்லை. ஆனா, நண்பர்கள்ல பல பேருக்கு காதல் திருமணம்தான். இதெல்லாம் அதிசயமாத்தான் இருக்கு. வயசு கூட கூட மூளை மாறிடுது.

என் குடும்பத்தில் நான் மட்டும் தான் லவ் மேரேஜ். ‘கூட்டத்துல யார்டா அந்தக் கருப்பு ஆடு!’ன்னு சொல்வோமே… அந்த மாதிரி. இது எனக்கே ஆச்சர்யமாத்தான் இருக்கு. இந்த மாதிரி நிறைய ஆச்சர்யங்களை அனுபவிச்சிருக் கேன். அது என்னன்னு அடுத்து சொல்றேன்.

- இன்னும் சொல்வேன்…

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x