Last Updated : 29 Sep, 2018 06:53 PM

 

Published : 29 Sep 2018 06:53 PM
Last Updated : 29 Sep 2018 06:53 PM

உலக இருதய தினம்: நம் இருதயம் எனும் பொக்கிஷத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது எப்படி?- 6 குறிப்புகள்

பிரதமர் நரேந்திர மோடியின் முயற்சியால் செப்டம்பர் மாதம் தேசிய ஊட்டச்சத்து மாதமானதால் ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியப் பயன்கள் குறித்த கவனக்குவிப்பு ஏற்பட்டது. இந்த ஊட்டச்சத்துக் கவனம் ஆரோக்கியமான வாழ்க்கைக்கான முயற்சிகளை முன்னெடுக்க இன்று உலக இருதய தினம் அதனுடன் கூடிய ஒரு வாழ்முறைத் தேவைகளைக் கடைபிடிக்க நம்மை வலியுறுத்துகிறது.

ஒவ்வொரு ஆண்டும் செப்.29ம் தேதி உலக இருதய தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.

இருதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள இதோ சில வாழ்க்கை நெறிக் குறிப்புகள்:

உங்கள் உடல் செயல்பாடுகளில் எண்ணிக்கையின் பங்கை சரிபாருங்கள்:

ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு, ஹிமோகுளோபின் அளவு, ரத்த அணுக்கள் அளவு இன்னபிற எண்ணிக்கைகள் நம் உடலின் ஆரோக்கியத்தை தீர்மானிக்கின்றன. 60% மக்கள் சர்க்கரை நோய் அறிகுறிகளை உணருவதில்லை இதனால் சிகிச்சை எடுத்துக் கொள்ள முடிவதில்லை. இதனால் இருதய நோய் இடர்பாடு அதிகரிக்கிறது. ஆகவே முதலில் அவ்வப்போது ரத்தத்தில் சர்க்கரை அளவை மருத்துவ சோதனை மூலம் சரிபார்க்கவும். டைப் 2 நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு புரோட்டீன் மற்றும் நார்ச்சத்து ஆதாரமான பாதாம் உதவும் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் பாதாம், உயர் கார்போஹைட்ரேட் உள்ள உணவுகளினால் ஏற்படும் சர்க்கரை நோய்த்தாக்கத்தையும் குறைக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கார்போஹைட்ரேட் உணவுகள் உணவு உட்கொள்ளாத போதான இன்சுலின் அளவில் தாக்கம் செலுத்தக்கூடியவை.

ரன்னிங், வாக்கிங், உடற்பயிற்சி: உங்கள் மருத்துவர் மற்றும் உடற்பயிற்சியாளரின் ஆலோசனையுடன் சரியான உடற்பயிற்சி முறையைக் கடைபிடிப்பது சிறந்தது, ரன்னின் என்றால் எவ்வளவு தூரம் எவ்வளவு நேரம், எவ்வளவு வேகம், வாக்கிங்கிலும் இதே கணக்கீடுகள் ஆகியவற்றை உறுதி செய்து கொள்வது அவசியம். கன்னாபின்னாவென்று மாரத்தான் ஓடுகிறேன் என்று கால் முட்டிப்பிரச்சினை வந்து விடாமல் பார்த்துக் கொள்வது அவசியம். வாரம் 5 நாட்களுக்கு மிதமான உடற்பயிற்சி, சிறிய அளவில் வியர்வை ஆகியவை இருதய ஆரோக்கியத்துக்கு சிறந்தது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

 

டயட்டில் வித்தியாசத்தை கண்டுபிடியுங்கள்: நல்ல கொழுப்பு சத்து உள்ளவற்றை உண்டும், கெட்ட கொழுப்பை விட்டுவிடுவதையும் உறுதி செய்யுங்கள். தினமும் லேசாக உப்பு கலந்த வறுத்த பாதாம் 43 கிராம் எடுத்துக் கொண்டால் பசியைக் கட்டுப்படுத்தும். மேலும் வைட்டமின் ஈ-யை அதிகரிக்கும். இதன் மூலம் நல்ல கொழுப்பு உடலுக்குக் கிடைக்கும அதே வேளையில் உடல் வெய்ட் போடாது.

சர்க்கரை மற்றும் உப்பைக் குறைக்கவும்: இந்திய உணவுப்பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் தினசரி உணவில் சர்க்கரை, உப்பு, எண்ணெய் பதார்த்தங்களைக் குறைக்க பரிந்துரைக்கிறது. இதன் மூலம் இருதய நோய்கள் ஏற்படும் வாய்ப்பை பாதியாகக் குறைக்க முடியும்.

புகைப்பழக்கத்தைக் கைவிடுக: உலக அளவில் மாரடைப்பு, இருதய நோய்களுக்குப் பிரதான காரணம் புகைப்பழக்கம் என்பது அனைத்து ஆய்வுகளும் கண்டறிந்த உண்மை. ரத்த நாளங்களின் அமைப்பையும் செயலையும் சிதைப்பது நிகோடின். ரத்தக் குழாய்களில் ரத்தம் செல்லும் பாதையை அடைப்பதற்கு முக்கியக் காரணமாகிறது. சிகரெட் மூலம் நம் மூச்சுக்குழலுக்குள் செல்லும் கார்பன் மோனாக்சைடு ரத்தத்தில் உள்ள பிராணவாயு அளவைக் குறைக்கிறது. புகைப்பிடிக்காதவர்கள் கூட புகைப்பிடிப்பவர்களுடன் செல்லுதல் நிற்றல் போன்றவையும் இருதய நோய்களுகுக் காரணமாகிறது.

கவலை, மன அழுத்தங்களைக் குறைக்கவும்: இந்த உலக இருதய தினத்தில் நாம் செய்ய வேண்டியதெல்லாம் கூடியவரையில் மன அழுத்தங்களையும், கவலைகளையும், அனாவசியக் கவலைகளையும் விட்டொழிப்பதாகும். நாம் மகிழும் செயல்களில் ஈடுபடுவதன் மூலம் ஸ்ட்ரெஸ் என்பதை அண்ட விடாமல் செய்யலாம். தியானம் மிகப்பெரிய கருவியாகும் இதற்கு.

ஆகவே இந்த உலக இருதய தினத்திலிருந்து நம் உணவு முறை உள்ளிட்ட வாழ்க்கை முறையை ஆரோக்கியமாக மாற்ற உறுதி கொள்வோம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x