Last Updated : 22 Sep, 2018 01:45 PM

 

Published : 22 Sep 2018 01:45 PM
Last Updated : 22 Sep 2018 01:45 PM

கடைக்குட்டி மகளுக்காக தாடி வளர்க்கும் அன்புமணி

தன் கடைசி மகள் அன்பாகக் கேட்டுக்கொண்டதற்காக பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தாடி வளர்க்க ஆரம்பித்துள்ளார்.

பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் எப்போதும் கிளீன் ஷேவ் செய்து புத்துணர்ச்சியுடனே காணப்படுவார். கடந்த 16 ஆம் தேதி மறைந்த முன்னாள் பாமக எம்எல்ஏ ஜெ.குரு சிலை திறப்பு விழாவில் அன்புமணி ராமதாஸ் தாடியுடன் காணப்பட்டார். சனிக்கிழமை சரஸ்வதி சட்டக்கல்லூரி திறப்பு விழாவிலும் தாடியுடன் இருந்தார்.

இதுகுறித்து வழக்கறிஞர் பாலுவிடம் கேட்டபோது, அன்புமணி தன் மகள் விருப்பத்திற்காக தாடி வளர்ப்பதாக சொன்னார் என்றார்.

மேலும் இதுகுறித்து பாமக வட்டாரங்களில் கேட்டபோது, மூன்று மகள்களில் கடைசி மகளான சம்யுக்தா “தாடி வையுங்கள்” என்று அன்புமணியிடம் கேட்டுக்கொண்டதற்கிணங்க தாடி வளர்க்க ஆரம்பித்தார். அவருக்கு இந்த கெட்டப் நன்றாக இருப்பதாக குடும்பத்தினர், கட்சிக்காரர்கள் வெளிப்படையாகச் சொல்லத் தொடங்கியதும் தன் தாடியில் அன்புமணி கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளார் என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x