Last Updated : 23 Sep, 2014 11:51 AM

 

Published : 23 Sep 2014 11:51 AM
Last Updated : 23 Sep 2014 11:51 AM

அகஸ்டஸ் சீசர் 10

ரோம் சாம்ராஜ்யத்தின் முதல் பேரரசர் அகஸ்டஸ் சீசரின் பிறந்த நாள் இன்று. அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து...

• ஜூலியஸ் சீசர் தங்கையின் பேரன் அகஸ்டஸ் சீசர். கயஸ் ஆக்டேவியஸ் என்பது இயற்பெயர். 4 வயதில் தந்தையை இழந்தார். சிக்கலான சூழலிலேயே வளர்ந்தார்.

• ஹிஸ்பேனியா (ஸ்பெயின்) மீது நடந்த தாக்குதலின்போது நடுக்கடலில் ஆயிரக்கணக்கான எதிரி வீரர்களிடம் சிக்கிக்கொண்டார். ஆனாலும், தீரத்துடன் தப்பித்தது, இன்றும் வரலாற்றில் பேசப்படுகிறது. அப்போது அவருக்கு வயது சுமார் 16.

• ஜூலியஸ் சீசர் சர்வாதிகாரி ஆக முயற்சிக்கிறார் என்பதால் படுகொலை செய்யப்பட்டார். அதன் பின் அவரது உயில் திறக்கப்பட்டது. அதில் அகஸ்டஸை வாரிசாக அறிவித்திருந்தார் சீசர்.

• மார்க் ஆன்டனியை போரில் வென்று அகஸ்டஸ் சீசர் நாட்டின் தலைமைப் பொறுப்புக்கு வந்தார். ஆனால், மன்னன் என்று அதிகாரப்பூர்வமாக சொல்லவில்லை. ஆனாலும், தேசம் இவரது கட்டுப்பாட்டுக்கு வந்தது.

• நின்றபடியே பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் ராணுவம், காவல் துறை, தீயணைப்பு துறை ஆகிய அனைத்தையும் முதன்முறையாக அறிமுகப்படுத்தியது அகஸ்டஸ் சீசர்தான். இவரது நினைவாகவே ‘செக்ஸ்ட்டிலிஸ்’ என்று இருந்த மாதத்தின் பெயர் ‘ஆகஸ்ட்’ என மாற்றம் செய்யப்பட்டது

• போர் நிமித்தமாக அற்புதமான சாலைகளை அமைத்தார். உறுதியான அரசியல் சட்டத்தை உருவாக்கி ரோமப் பேரரசில் 200 ஆண்டுகால அமைதிக்கு வழிகோலினார்.

• மக்களின் பொழுதுபோக்குக்காக கிளாடியேட்டர் போர்களை மைதானத்தில் நடத்தினார். 10 ஆயிரம் வீரர்கள் ஒரே சமயத்தில் மோதிக்கொள்ளும் வரலாற்றின் ரத்தப் பக்கங்கள் அவை!

• அகஸ்டஸ் சீசர் ஒழுக்கத்துக்கு முக்கியத்துவம் கொடுத்தார். விதிகளுக்கு கட்டுப்படாததால் சொந்த மகளையே நாடு கடத்தினார்.

• அகஸ்டஸ் சீசர் இறந்தபோது அவரை கடவுள் என்று அறிவித்து, அவரையே வழிபட வேண்டும் என்று செனட் அறிவித்தது.

• 100 ஆண்டுகால உள்நாட்டுக் குழப்பங்களுக்கு அகஸ்டஸின் ஆட்சியே மக்களுக்கு அமைதியைத் தந்தது. ‘ரோமை என்னிடம் களிமண்ணாகக் கொடுத்தார்கள். அதை நான் பளிங்காக மாற்றினேன்’ என்பது அவரின் புகழ்பெற்ற வாசகம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x