Last Updated : 27 Mar, 2018 04:32 PM

 

Published : 27 Mar 2018 04:32 PM
Last Updated : 27 Mar 2018 04:32 PM

நெட்டிசன் நோட்ஸ்: தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம் - தாமிரம் உனக்கு... புற்றுநோய் எனக்கா?

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையின் விரிவாக்கத்திற்கு தடை விதிக்கக் கோரியும், அந்த ஆலையை முழுவதுமாக மூட வலியுறுத்தியும் பொதுமக்கள், மாணவர்கள், வணிகர்கள் என அனைவரும் தன்னெழுச்சியாக கடந்த ஒரு மாதமாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் இப்போராட்டம் கடந்த சில நாட்களாக தீவிர தன்மையை அடைந்துள்ளது இது குறித்து நெட்டிசன்கள் தங்கள் கருத்தை பதிவிட்டு வருகிறார்கள் அவற்றின் தொகுப்பு இன்றைய நெட்டிசன் நோட்ஸில்...

  

Arun Rahul Sankar

‏97ல #வைகோ சொன்னதை கேட்டிருந்தால் இன்று தூத்துக்குடி மக்கள் வீதிக்கு வந்து போராட வேண்டிய அவசியமே வந்திருக்காது...

NAGARAJ RAMARAJ

‏இந்த நிறுவனம் ஆரம்பத்தில் அங்கு எத்தனை குடியிருப்புகள் இருந்தன,இப்போ எவ்வளோ குடியிருப்புகள் இருக்கு?

Vinoth Sekar

‏ யாருக்காக அந்த தொழிற்சாலை ?

govindasamyKalaimani

‏ஆலை ஆரம்பிக்கும் போது

அனுமதியளித்தது யாரோ?

அரசியல்வாதிகளின்

அறியாமையா?

அமைதியாகவிருந்த மக்களா? அறிந்து கொள்வோம்!

சிபி_ராகவன்

‏முல்லைப்பெரியாறு அணையில் இருந்து 350கி.லிட்டர் எதற்காக மக்கள் தாகத்திற்காக, விவசாய தேவைக்காக...

தமிழகத்தில் நீருக்காக போராடும் போது ஆய்வுக்காக நீர் எதற்கு.

மக்களுக்கான அரசாங்கம் என்றால் நீங்கள் பூர்த்தி செய்ய வேண்டியது மக்கள் தேவைகளை.

ராக்கிங் ராம்

‏உண்மையாகவே நீங்க எங்க

உயிர் #காப்போர் தான்-ஆ?

இல்லை எங்கள் உயிர் எடுக்கும்

#காப்பர் தான்-ஆ?

Muniyandi

‏இந்தியாவின் சுடுகாடாக மாறும் தமிழ்நாடு

 

S Amudhan

‏அது எப்படி தமிழ்நாட்டுக்கு மட்டும் ஜல்லிக்கட்டு, நெடுவாசல், காவேரி, ஸ்டர்லைட்டுனு ஒவ்வொரு பிரச்சினையா லைன் கட்டி வருது?? #SterliteProtest

senthil murugan

‏மக்களின் உயிரையும், வாழ்வாதாரத்தையும் பாதிக்கும் ஸ்டெர்லைட் ஆலையை  மூட அரசு தயங்குவது ஏன்???

M.Basharath Ahmad

‏மக்களை பாதிக்கும் எந்த திட்டமும் தமிழ்நாட்டிற்கு தேவை இல்லை.

மிடில் பென்ச்

‏அந்த பேக்டரி பக்கத்துல இவங்க வசிக்க வாடகைக்கு வீடு கொடுங்க ப்ளீஸ். அப்படியே நம்ம  முதல்வருக்கும், கவர்னருக்கும்..

 

 

JohnSackson

‏’தாய்ப்பால் கொடுக்க முடியல.மாத்திரையைத்தான் குழந்தைகளுக்கு கொடுக்கிறோம்’:தவிக்கும் தூத்துக்குடி பெண்கள்!

இது போன்றே இன்னும் என்னென்ன கதறல்களை நாம் கேட்கவிருக்கிறோம்???!!

Saravanan Prakash

‏மண்ணையும் இயற்கையும் மனிதத்தையும் அழித்து எதை சாதிக்க போறோம்... #BanSterlite #Tuticorin #SterliteProtest

Salem Surandiran

‏நீங்கள் செய்த வினையும், செய்கின்ற தீவினையும் ஓர் எதிரொலியைக் காட்டாமல் மறையாது.

மக்கள் செய்த வினை - காசுக்கு வாக்களித்தது.

எதிரொலி- பல தீய திட்டங்களுக்கு அரசு கையெழுத்து இட்டு தொடங்கி வைத்தது.

insane

‏இப்போ ஸ்டெர்லைட்யை மூட சொல்லி போராட்டம் பண்றது பாராட்ட வேண்டிய விஷயம் ஆனா அதே மாதிரி தாமிரபரணி ஆற்றில் இருந்து ஸ்டெர்லைட்க்கு தண்ணீர் எடுப்பதை தடை செய்ய எவனாவது பேசுறானா?

#BANSterliteSAVETHOOTHUKUDI

The_Prakash

‏ஏன்டா..???

உங்களுக்கு காப்பர் எடுக்க லைசென்ஸ் கொடுத்தாங்களா.? இல்ல மக்களுடைய உயிரை எடுக்க லைசென்ஸ் கொடுத்தாங்களா..???

சாய்  ராஜ்

‏மக்களுக்காக ஆலையை மூடாமல் ஆதாயம் தேடுகின்ற அரசு 

Ilayathalaimurai

‏தலைவன் இல்லாத தன்னெழுச்சியான போராட்டத்திற்கு தான் மக்கள் ஒன்று சேர்கின்றனர்.

thiyagu

‏ஆமா கேன்சர் தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கா இல்ல தமிழக அரசிற்கா ???

Srinivasan Rahul  

‏கமலும் ரஜினியும் தூத்துக்குடி ஸ்டெர்லைட்டு பிரச்சினையில தலையிடனும்னு நினைக்காம மக்கள் போராட்டத்தினாலேயே சல்லிக்கட்டு புரட்சி போல சாதித்து காட்டினால் இவர்களுக்கு பயம் வரும் 

மக்கள் சக்தியே மகேசன் சக்தி

பிளாக் லைட்

‏ஆபத்தை நமக்கு அளித்து விட்டு அதன் காசில் வெளிநாடு உயர்கின்றது என்பது முற்றிலும் உண்மையே என்பதை நிரூபிக்கின்றது

Bala Chakravarthi

‏போராட்டக்களத்திலேயே தூளி கட்டி தூங்க வைப்போம்.

போராடுவது அடுத்த தலைமுறைக்கும் சேர்த்துத்தான்..!

Nishanth Antony Raj

‏நம் தம்பிகள்... துபாயில் இருந்து...

வேண்டாம் ஸ்டெர்லைட்...

தாமிரம் உனக்கு... புற்றுநோய் எனக்கா....

சே ரா

‏ஊடகங்கள் ஸ்டெர்லைட் போராட்டத்தை திட்டமிட்டு மறைப்பதற்கும் , ஜல்லிக்கட்டு போராட்டத்தை மீடியாக்கள்  ரிலையன்ஸ் ஜியோ வுடன் போட்டி போட்டு ஒளிபரப்பியதற்கும் இடையில் தான் நாம் புரிந்து கொள்ளக்கூடிய அரசியல் உள்ளது.

Dinesh Raja.s

‏சாதி மத பேதமின்றி அரசியல் கட்சி வேறுபாடு இன்றி முத்துநகரை காக்க கூடிய கூட்டம்.

 

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x