Last Updated : 09 Sep, 2014 09:58 AM

 

Published : 09 Sep 2014 09:58 AM
Last Updated : 09 Sep 2014 09:58 AM

இன்று அன்று | 1976 செப்டம்பர் 9: மா சே துங் மறைந்த நாள்

சீனாவின் ஹுனான் மாகாணத்தில் உள்ள ஷாஷான் கிராமத்தில் டிசம்பர் 26, 1893-ல் பிறந்தவர் மாவோ என்று அழைக்கப்படும் மா சே துங். சன் யாட் சென் தலைமையில், 1911-ல் நடந்த புரட்சிப் போரில் புரட்சிப் படையில் சிப்பாயாக இருந்தார்.

சீனக் குடியரசின் முதல் அதிபராகப் பதவியேற்ற சன் யாட் சென்னுக்குப் பின் அதிபரான சியாங்-கே-ஷேக்குக்கும் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இடையி லான உறவு சரியானதாக இல்லை. சியாங்-கே-ஷேக்கின் ஆட்சிக்கு எதிராக மக்கள் விடுதலை ராணுவத்துக்குத் தலைமையேற்று மாவோ சண்டையிட்டார். 6,000 மைல்கள் தூரம் நடந்த அந்தப் படை, அக்டோபர் 1935-ல் வடக்குப் பகுதியான ஷென்சி மாகாணத்தைச் சென்றடைந்தது. இரண்டாம் உலகப் போர் சமயத்தில் சீனா மீது போர் தொடுத்த ஜப்பானுடன் மோதி வென்றது, மக்கள் விடுதலை ராணுவம்.

1945-ல் மீண்டும் உள்நாட்டுப் போர் தொடங்கியது. 1949-ல் மக்கள் விடுதலை ராணுவம் வென்றது. அதே ஆண்டில், சீன மக்கள் குடியரசை நிறுவி, அதன் முதல் அதிபரானார். பார்க்கின்ஸன் நோய் உள்ளிட்ட கோளாறுகளால் பாதிக்கப்பட்டிருந்த அவர், 1976-ல் இதே நாளில் தனது 82-வது வயதில் மரணமடைந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x