Last Updated : 18 Sep, 2014 12:36 PM

 

Published : 18 Sep 2014 12:36 PM
Last Updated : 18 Sep 2014 12:36 PM

ஷபனா ஆஸ்மி 10

இந்திய சினிமா ஆளுமைகளுள் முக்கியமானவரான ஷபனா ஆஸ்மியின் பிறந்தநாள் இன்று. அவரைப் பற்றி அரிய முத்துக்கள் பத்து...

# அப்பா கைஃப் ஆஸ்மி கவிஞர், அம்மா ஷவ்கத் ஆஸ்மி மேடை நடிகை. இருவருமே கம்யூனிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள். அதனால் இவருக்கும் பொதுவுடமைக் கொள்கைகளில் ஆர்வம்.

# உளவியலில் பட்டம் பெற்றவர், புனே ஃபிலிம் இன்ஸ்டிடியூட்டில் சினிமா கற்றார். ஷ்யாம் பெனகலின் ‘அங்கூர்’ இவரது முதல் படம். தேசிய விருது கிடைத்தது.

# ‘அர்த்’, ‘காந்தார்’, ‘பார்’ மூன்று படங்களுக்கும் அடுத்தடுத்து சிறந்த நடிகைக்கான தேசிய விருதுகளைப் பெற்றார்.

# ஐந்து தேசிய விருதுகள், 4 ஃபிலிம்ஃபேர் விருதுகள், ஏராளமான பன்னாட்டு விருதுகளையும் பெற்றிருக்கிறார்.

# கவிஞரும் திரைக்கதை ஆசிரியருமான ஜாவித் அக்தரைத் திருமணம் செய்திருக்கிறார்.

# இதுவரை 120 திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

# மதவாத எதிர்ப்பு நாடகங்கள், செயல்பாடுகளில் தீவிரமாக பங்கு கொள்வார். ஒருமுறை ஆப்கன் மதத்தலைவர் ஒருவர் அங்கு போரிட இந்திய இஸ்லாமியர்களுக்கு அழைப்பு விடுத்தபோது அதனைக் கடுமையாகக் கண்டித்தார்.

# மும்பை குடிசைவாசிகள் கட்டாயமாக இடம்பெயர்க்கப்படுவதை எதிர்த்து, தீவிரமாகப் போராடினார்.

# ஹெச்.ஐ.வி. விழிப்புணர்வு பிரச்சாரம், நில நடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி, ஐம்பதாயிரம் சேரிவாழ் மக்களுக்கு அரசுடன் இணைந்து வீடு கட்டி தந்தது என்று நீள்கிறது இவரது பொதுச் சேவை.

# மாநிலங்களவை உறுப்பினராகவும் ஐக்கியநாடுகள் சபையின் மக்கள்தொகை நிதியத்தின் நல்லெண்ணத் தூதுவராகவும் செயல்பட்டு வருகிறார்.

(மீண்டும் நாளை சந்திப்போம்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x