Published : 16 Feb 2017 10:09 AM
Last Updated : 16 Feb 2017 10:09 AM
என் படத்தோட டைரக் ஷன் வேலை யில் இருக்கும்போது, என்னோடு வேலை பார்க்கிறவங்க ஷார்ப்பா இருக்கணும்னு விரும்புற டைப் நான். அதைப் பார்த்துட்டு என்னோட ரைட்டர், ‘‘உங்களை மாதிரியே எல் லோரும் சரியா இருக்கணும்னு ஏன் நீங்க நினைக்கிறீங்க. எல்லாருக் கும் ஏதாவது ஒரு குறை இருக்கு மில்லையா?’’னு கேட்பார். ‘‘எல்லா ரும் கரெக்டா இருக்கணும்னு நினைக் கிறதுதான் என்னோட குறை’’னு சொல்லிட்டு சிரிச்சுப்பேன்.
ஷூட்டிங் ஆரம்பிக்கிறதுக்கு முன் னாடியே, அதுக்கு என்னென்ன தேவைன்னு ஒரு லிஸ்ட் கொடுத்திருப் போம். உதாரணத்துக்கு, ‘இந்த கலர்ல ஒரு கார் வேணும், இப்படி ஒரு மாடல்ல டிரெஸ் வேணும்’னு சொல்லியிருப் பேன். சில நேரத்தில் அதில் ஏதாவது ஒண்ணு மாறியிருக்கும். இல்லேன்னா, நான் கேட்ட பொருள் இல்லாமலே இருக்கும்.
மறுநாள் ஷூட்டிங் ஸ்பாட்ல உதவியாளரைக் கூப்பிட்டு, ‘‘என் னாச்சு?’’ன்னு கேட்பேன். அதுக்கு அவர், ‘‘நான் ஆர்ட் டிபார்மென்ட்க்கு சொல்லிட்டேன். ஆனா, அவங்க கிடைக்கலைன்னு சொல்றாங்க’’னு சொல்வார். ‘‘அப்படியா? ஆர்ட் டிபார் மெட்ன்ட்டை கூப்பிடுங்க?’’னு சொல் வேன். அவங்க வந்து, ‘‘இல்லை சார், வாங்கணும்னு நிர்வாகத் தயாரிப் பாளர்ட்ட சொன்னோம். ஆனா, அவங்க பதிலே சொல்லலை’’னு சொல் வாங்க. உடனே நிர்வாகத் தயாரிப் பாளரைக் கூப்பிட்டுக் கேட்பேன். அதுக்கு அவர், ‘‘ஈவ்னிங் 7 மணிக்கு வந்து சொன்னாங்க. லேட்டா ஆயி டுச்சு. இது தயாரிப்பாளருக்கும் தெரி யும்!’ன்னு சொல்வார். உடனே, ‘‘தயா ரிப்பாளருக்கு போன் போடுங்க?’’ன்னு சொல்வேன். அவரும், ‘‘இதோ ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வர்றேன்’’னு கிளம்பி வருவார். ஆக, மொத்தத்துல எங்க தப்பு நடந்தது? அதுக்கு சரியான காரணம் என்னன்னு தெரியற வரைக்கும் அந்த விஷயத்தை விடவே மாட்டேன்.
எனக்கு எப்பவுமே ஒரு வேலையை ஆரம்பிச்சா, அதை அந்த நிமிஷமே முடிச்சிடணும். உதாரணத்துக்கு, ‘‘ஒரு ஃபோட்டோ தேவைப்படுது’’னு போன் கால் வரும். அப்புறமா அனுப்ப லாம்னு இருக்க மாட்டேன். போன் பேசி முடிச்ச கையோட அதை அனுப்பிடு வேன். அதுதான் என் டைப். சில பேர் கிட்டே அஞ்சு வேலைகளை ஒப்படைப் பேன். அதில் ரெண்டு விஷயத்தை மறந்துடுவாங்க. அதை சொல்லவும் மாட்டாங்க. நாம் கேட்ட பிறகு, ‘‘சொல்லணும்னுதான் இருந் தேன்’’ன்னு சொல்வாங்க. என்னால் அப் படியெல்லாம் இருக்கிறது கஷ்டம்.
மும்பையில இருக்கிறப்ப, ‘‘எப்படி உங்களால கொரியோகிராஃபி, நடிப்பு, டைரக் ஷன்னு எல்லா வேலைகளை யும் சோர்வே இல்லாமப் பண்ண முடியுது?’’ன்னு கேட்பாங்க. எப்பவுமே எந்த ஒரு விஷயமா இருந்தாலும் அதோட முடிவை வேகமா எடுத்துடு வேன். அது பல நேரத்துல சரியா நடந்துடும். சில நேரத்துல நல்ல ரிசல்ட் இல்லாமலும் போயிருக்கு. அதுக் காக நான் என்னோட வேகத்தைக் குறைச்சிக்கணும்னோ, என்னை மாத் திக்கணும்னோ நினைக்கிறதில்லை. அதே மாதிரி ஒருத்தரை முழுசா நம் பிட்டேன்னா அவ்வளவுதான். கெட்ட வங்களா, நல்லவங்களான்னு நம்புன துக்குப் பிறகு ஆராய்ஞ்சு பார்க்க மாட் டேன். ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் அவங் களால தப்பு நடந்தாலும், ‘‘சரிப்பா, ஓ.கேப்பா’’ன்னு விட்டுடுவேன்.
டைரக்டரா ஒரு படத்தில் வேலை பார்க்கிறப்ப 24 மணி நேரமும் என்னை போன்ல பிடிக்கலாம். ஷூட்டிங் ஸ்பாட்ல இருக்குறப்ப மட்டும் போன் எடுக்க மாட்டேன். அதே மாதிரி எனக்கு டைமிங் ரொம்ப முக்கியம். சொல்ற நேரத்துக்கு ஷார்ப்பா இருக்கணும். முடியலையா, முன்னாலயே போன்ல, ‘‘சார் கொஞ்சம் லேட்டாவுது. வர முடி யலை’’னு சொல்லிடணும். எதுவுமே சொல்லாம தாமதமா வந்தா, ஏதோ வேலை இல்லாத மாதிரி நம்மை நினைக்கிறாங்கன்னு எனக்கு பயங்கர கோபம் வந்துடும். அதே மாதிரி ஷூட்டிங் ஸ்பாட்ல பசி எடுத்துட்டாலும் எனக்குக் கோபம் வரும். அதனாலயே மதியம் 1 மணிக்கு சரியா பிரேக் விட்டுடுவேன். என்னால பசி தாங்க முடியாது. ஆனா, இந்த மாதிரியான என்னோட கோபத்தை ரெண்டு, மூணு நிமிஷத்துக்கு மேல எனக்கு வெச்சிக்கவும் தெரியாது.
நான் டைரக் ஷன் செய்ற படத்தில் நடிக்கிற நடிகர், நடிகைங்க எப்பவும் சோர்வா இருக்கவே கூடாது, எப்பவும் ஜாலியா இருக்கணும்னு நினைக்கிற ஆள் நான். ஆனா, என்னோட அசோ ஸியேட்டுக்கும், ஹீரோயினுக்கும் சின்னச் சின்ன வாக்குவாதம் நடக்கும். என்கிட்ட வந்து, ‘‘சார் ஹீரோயின் மேக்கப் போட லேட்டாக்குறாங்க? இந்த டிரெஸ் வேணாம்கிறாங்க?’’ன்னு புகார் சொல்லிட்டே இருப்பார். அதுக்கு நான் கூலா, ‘‘ஜென்ஸா இருந்தா உடனே கிளம்பிடலாம். ஹீரோயின் அழகா தெரியணும்னா மேக்கப் ரொம்ப முக்கியமாச்சே. அவங்களுக்கும் நடிப்பு எக்ஸ்பீரியன்ஸ் இருக்கு. என்ன மாதிரி காஸ்ட்யூம்ல வர ணும்னு அவங்க விருப்பத்துக்கு விட்டுடுங்க’’ன்னு சொல்வேன். நேரம் ஆகுதேன்னு கோபப்படுற இடத்துல இந்த மாதிரியான விஷயங்களையும் ஹேண்டில் பண்ணணும். என்னதான் இருந்தாலும் பெண் இல்லையா? அவங்களுக்கும் சில கஷ்டம் இருக்கும். அதை புரிஞ்சிக்கிட்டு நாம நடந்துக்கணும்.
கவனத்தோட ஒரு வேலையில ஈடு படுறப்ப நமக்கு பின்னாடி இருந்து, சிலர் அதை குறை சொல்வாங்க. எனக்கும் அப்படி நடந்திருக்கு. அதுக்கெல்லாம் அந்த நேரத்தில் பதில் சொன்னா, நாம லோ லெவல் ஆகிடுவோம். பெரிய லெவலை அடைய முடியாது. எட்டு பேர் புகழ்றப்ப ரெண்டு பேர் திட்டுவாங்கதான். அதுக்கெல் லாம் பதில் சொல்லிட்டிருந்தா புதுசா நம்மால எதுவுமே செய்ய முடியாது.
‘சிங் இஸ் ஃபிலிங்’ படப்பிடிப்பில் பிரபுதேவா, அக்ஷய்குமார்
தொடர்பு இல்லைன்னாலும் இந்த இடத்துல ஒரு சம்பவம் நினைவுக்கு வருது. ‘சிங் இஸ் ஃபீலிங்’ ஹிந்தி படத் தோட ஷூட்டிங். அக் ஷய்குமார் சார் ஹீரோ. சர்க்கஸ்ல ஒரு ரிங் இருக் குமே. அந்த மாதிரி ஒரு ரிங்கை நெருப் புல எரிய வெச்சிட்டோம். அந்த ரிங்குள்ள ஜம்ப் பண்ணி நெருப்புல சிக்காமப் பல்டி அடிச்சு, அக் ஷய் சார் எதிர் பக்கம் போய் கீழே விழ ணும். முதுகு அடிபட்டுடாம இருக்க பெட் எல்லாம் போட்டாச்சு. ஷாட் ரெடி. ஒரே நேரத்துல ரெண்டு பேர் அதே மாதிரி தாண்டும்போது டைமிங் மாறிடுச்சு. இதை அக் ஷய் சாரும் கவனிச்சிட்டார். ‘‘பிரபு ஜி... திரும்பவும் ஒன் டேக் போலாம்’’ன்னு கேட்டார். நானும் ஓ.கேன்னு ரெடியானேன்.
ரெண்டாவது முறை தாண்டுறப்ப அவரோட முழங்கால்ல அந்த ரிங் மாட்டிக்கிச்சு. அவர் கால்ல நெருப்பு பட்டு டிரெஸ் எரிய ஆரம்பிச்சுடுச்சு. சுத்தியிருந்த எங்க எல்லாருக்கும் ஷாக். சின்ன பதற்றத்துக்குப் பிறகு ஒருவழியா அவர் மீண்டு வந்தார். வந்ததும் நான் உடனே, ‘‘சரி சார் நாம் ஃபர்ஸ்ட் எடுத்த டேக்கை யூஸ் பண்ணிக்கலாம். ஒ.கே சார்! நெக்ஸ்ட் ஷாட் போலாம்’’னு சொன்னேன். அதுக்கு அவர், ‘‘இல்லை... இல்லை. இன்னொரு டேக் எடுப்போம். அந்த ஷாட் ஓ.கேன்னு நினைச்சு விட்டுட்டா, அந்த நெருப்போட பயம் லைஃப் லாங் இருக்கும். உடனே அதை ஓவர் கம் பண்ணணும்’’னு சொல்லிட்டு, மூணா வது முறை அந்த ஷாட்டுக்கு ரெடியா னார். அந்த முறை பெட்டை எடுத்துடுங் கன்னு சொல்லிட்டு தரையில துணிச் சலாப் பண்ணினார். ஆச்சர்யமா இருந்தது. அதுதான் அக் ஷய்!
டைரக் ஷன் செய்துட்டு இருக் கிறப்ப நம்மை சுத்தி நூத்தம்பது பேருக் கும் மேல, நாம என்ன சொல்லப் போறோம்கிறதுக்காக காத்துட்டு இருப்பாங்க. கோடிக் கணக்குல பணம் புரளுற இடம். எழுத்தா கையில இருக் கிற ஒவ்வொரு பக்கமும் ஒவ்வொரு கோடி. எந்த விஷயத்துக்கும் நாம தலையாட்டும்போது ரொம்பவும் கவ னமா இருக்கணும். அதனாலதான் வேஸ்ட் எதுவுமே இருக்கக் கூடா துன்னு வேகம் வேகம்னு போய்ட்டே இருப்பேன். எடிட்டிங்கிலும் அப்படித் தான். ரெண்டே கால் மணி நேரம் படம்னா, மொத்தப் படத்தையும் அதை விட பத்து நிமிஷம்தான் அதிகமா ஷூட் பண்ணியிருப்பேன். செலவு, டைம் ரெண்டுத்துலயும் ரொம்ப கவனமா இருப்பேன்.
எல்லோரும் பயபக்தி… பயபக்தின்னு சொல்றோம்ல. எப்படி அது? பயந்து பயந்து பக்தியா இருக்கணுமா? என்னோட விஷயத்துல பயபக்தின்னா என்னங்கிறதைத்தான் அடுத்த வாரம் உங்கக்கிட்ட சொல்லப் போறேன்.
- இன்னும் சொல்வேன்…
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT