Published : 03 Jan 2025 10:27 AM
Last Updated : 03 Jan 2025 10:27 AM

அண்ணா பல்கலை. விவகாரம்: தேவையா இந்த ‘விளம்பரம்’?

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்துக்குள்ளேயே மாணவி ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்ட விவகாரம் மாநிலம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சட்டம் - ஒழுங்கு சரியில்லை என அரசைக் கண்டித்து அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன. இந்நிலையில் அரசு கல்லூரி மாணவிகள் சிலர், ‘We are safe in Tamil Nadu’ என்கிற பதாகைகளை ஏந்தியபடி கல்லூரி வாசலில் நின்றனர். அவர்களின் இந்த அணுகுமுறை சமூக வலைதளங்களில் கடும் விமர்சனத்துக்குள்ளானது.

‘தமிழகத்தில் பாதுகாப்பாக உள்ளோம்’ என்று பதாகைகளை தாங்கி நின்ற கல்லூரி மாணவிகளின் செயல், பாதிக்கப்பட்ட மாணவியின் தரப்பு நியாயத்தை நீர்த்துப்போகச் செய்கிறது என்றும், சட்டம் - ஒழுங்கைச் சரியாக கையாளாமல் அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்தில் ஏற்பட்ட அவப்பெயரை நீக்க கல்லூரி மாணவிகளைப் பகடைக் காயாக திமுக அரசு பயன்படுத்துவது தவறில்லையா என்றும் சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர். இப்பிரச்சினையைத் திசை திருப்பாமல் முறையாக விசாரணை நடத்த வேண்டும், நீதி கிடைக்க வேண்டும் என்பதே அத்தனை பேரின் கருத்தாக உள்ளது. - சிட்டி

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x