Published : 13 Dec 2024 03:46 PM
Last Updated : 13 Dec 2024 03:46 PM
திரைப்படங்களில் வரும் காட்சிகள் நேரடியாகவோ மறைமுகமாகவோ பார்ப்பவர் மனதில் தாக்கத்தை ஏற்படுத்திவிடுகின்றன. ஒரு திரைப்படம் ஒருவரை நல்வழியிலும் கொண்டுச் செல்லும், தவறான பாதையையும் காட்டிவிடும். அந்த வகையில் திரைப்படப் பாணியில் அரங்கேறிய கொள்ளைச் சம்பவங்கள் அவ்வப்போது தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்திருக்கின்றன. அதைப் போல, அண்மையில் வெளியான ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படத்தைப் பார்த்துவிட்டு ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் நான்கு பேர் பள்ளி விடுதியைவிட்டு ‘எஸ்கேப்’ ஆகியுள்ளனர்.
சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் கோடீஸ்வரர் ஆவதே ‘லக்கி பாஸ்கர்’ படத்தின் ‘ஒன்-லைன்’. இப்படத்தின் தாக்கத்தால் தாங்களும் கார் வாங்கும் அளவுக்குப் பணம் சம்பாதிக்கப் போவதாக சக நண்பர்களிடம் இம்மாணவர்கள் தெரிவித்துள்ளனர். சொன்னதைப் போலவே பள்ளி விடுதியில் இருந்து இவர்கள் ‘எஸ்கேப்’ ஆகும் காட்சிகள் சிசிடிவி-யில் பதிவாகியுள்ளதால், போலீஸார் இவர்களைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதெல்லாம் இந்த வயசுல வேண்டாம் மக்கா! - வசி
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT