Published : 15 Aug 2024 01:27 PM
Last Updated : 15 Aug 2024 01:27 PM

#HTTMadrasDay: இந்து தமிழ் திசை ‘சென்னை தினம்' புகைப்பட போட்டி! - முழு விவரம் இதோ...

வரும் ஆகஸ்ட் 22-ம் தேதி 'சென்னை தினம்' கொண்டாடப்படுகிறது. '385' வயதை எட்டியிருக்கும் சீர்மிகு சென்னையை உங்களது படைப்புத் திறனால் இந்து தமிழ் திசையுடன் இணைந்து கொண்டாடலாம். இந்து தமிழ் திசை நடத்தும் புகைப்பட போட்டியில் பங்கேற்று எங்கள் வலைதளத்தில் உங்கள் படங்களை இடம்பெறச் செய்யுங்கள்:

தலைப்புகள்:

  1. Emotions in Chennai
  2. Chennai at night
  3. Heritage of Chennai

இந்தத் தலைப்புகளின் கீழ் உங்கள் படங்களை ஆகஸ்ட் 15 முதல் ஆகஸ்ட் 20-ம் தேதி வரை அனுப்பலாம். நீங்கள் அனுப்பும் படத்தை என்ன காரணத்துக்காக எடுத்தீர்கள் என்பதைப் பதிவிடுவதும் அவசியம். உங்கள் படத்தின் நேர்த்தியும் அதற்கான காரணமும் சிறப்பாக இருக்கும்பட்சத்தில் இந்து தமிழ் திசை வலைதளத்தில் உங்கள் படம் ஆகஸ்ட் 22-ம் தேதி வெளியிடப்படும்.

படங்கள் அனுப்பும் விதிகள்:

  • சென்னையின் வசீகரத்தையும் தனித்துவத்தையும் உணர்த்தும் படி நாங்கள் கொடுத்திருக்கும் தலைப்புகளின் கீழ் நீங்கள் எடுக்கும் படங்களை #HTTMadrasDay என்ற ஹேஸ்டேக்குடன் எங்களது இன்ஸ்டாகிராம் பக்கமான @hindu_tamil ஐ tag செய்து பதிவிடுங்கள்.
  • படத்திற்கு தலைப்பு அவசியம். எதற்காக எடுத்தீர்கள் என்பதையும் விளக்கியிருக்க வேண்டும்.
  • நீங்கள் எடுக்கும் படத்தை ஆகஸ்ட் 15 - 20 வரை பதிவிடலாம்.
  • ஒன்றுக்கும் மேற்பட்ட படங்களையும் பதிவிடலாம். ஒவ்வொரு படத்தையும் தனித்தனியாக tag செய்யவும்.
  • உங்கள் இன்ஸ்டாகிராம் Public Account- ஆக இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
  • சிறந்த படங்கள் ஆகஸ்ட் 22-ம் தேதி ’தி இந்து-தமிழ் திசை’ இணையதளத்தில் வெளியிடப்படும்.
  • இதில் பங்கேற்பதன் வாயிலாக உங்கள் படங்களை எங்கள் தளங்களில் வெளியிடும் உரிமையை ‘தி இந்து தமிழ் திசை’ பெறுகிறது.

    மேலும் தகவலுக்கு: https://www.instagram.com/p/C-m0dL2I2Ni/?igsh=MTZhNnJuODRqbXE4MA==

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x