Published : 07 Jul 2024 06:08 AM
Last Updated : 07 Jul 2024 06:08 AM

திண்ணை: தமுஎசகவுக்குப் பொன் விழா

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் 50ஆவது ஆண்டை முன்னிட்டு கோயம்புத்தூர் பீளமேடு பி.எஸ்.ஜி. தொழில்நுட்பக் கல்லூரியில் இன்று (07.07.24) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை ஒருநாள் நிகழ்வாக விழா ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது. பொன் விழா இலச்சினை வெளியிடப்படவுள்ளது. இந்த விழாவை ஒட்டி எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் கெளரவிக்கப்படவுள்ளார். அவர் தொகுத்த ‘முதல் 50 ஆண்டு சிறுகதைத் தடங்கள்’ நூல் வெளியிடப்படவுள்ளது. தமிழ்ச்செல்வன் படைப்புலகம் சார்ந்து கருத்துரைகளும் வழங்கப்படவுள்ளன. நாஞ்சில் நாடன், சு.வேணுகோபால், ஆதவன் தீட்சண்யா, சு.வெங்கடேசன், மதுக்கூர் ராமலிங்கம், சிற்பி பாலசுப்பிரமணியம், ‘விஜயா’ வேலாயுதம் உள்ளிட்ட பலர் இந்த விழாவில் கலந்துகொண்டு பேசவுள்ளனர். தொடர்புக்கு: 93620 26972

நூல் விமர்சனக் கூட்டம்

நன்னூல் பதிப்பகம் வெளியிட்ட ம.செ.லோகநாதனின் ‘வாய்தா’ சிறுகதைத் தொகுப்பு விமர்சனக் கூட்டம் இன்று (07.07.24) மாலை 5 மணி அளவில் சென்னை சேலையூர் பிடிஎன் பேஸ் ஆதர்ஷா அடுக்குமாடிக் குடியிருப்பு வளாகத்தில் உள்ள மீட்டிங் ஹாலில் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் பதிப்பாளர் மணலி அப்துல் காதர், பத்திரிகையாளர் மானா பாஸ்கரன், வழக்கறிஞர் வெற்றிச்செல்வன் ஆகியோர் கலந்துகொள்கின்றனர். தொடர்புக்கு: 9841684416

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x