Published : 24 Apr 2018 02:48 PM
Last Updated : 24 Apr 2018 02:48 PM
இந்திய கிரிக்கெட் கடவுள் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் சச்சின் டெண்டுல்கர் இன்று (செவ்வாய்க்கிழமை) தனது 45-வது பிறந்த நாளைக் கொண்டாகிறார். இதனையொட்டி சமூக வலைதளங்களில் அவரது ரசிகர்கள் பலரும் கருத்துகளைப் பதிவு செய்து வருகின்றனர். அவற்றின் தொகுப்பு இன்றைய நெட்டிசன் நோட்ஸில்...
விஜய் பிரதாப்
"சச்சின் விளையாடும் வரை மேட்ச் பார்த்துவிட்டு அப்பறம் படிக்க போயிடணும் சரியா" இந்த வார்த்தையை அனுபவித்த எல்லாருக்கும் தெரியும் சச்சின் என்பது வெறும் பெயர் மட்டும் அல்ல.. வாழ்க்கையின் பெரும் பக்கம் என்று!
பியானிஸ்ட்
சச்சினும் ரஹ்மானும் ஒரே மாதிரி.
எவ்வளவு புகழ் இருந்தாலும் அலட்டிக்காம எப்படி இவ்வளவு அடக்கமா இருக்காங்கனு யோசிக்கவைக்கும்.
Ashok kumar
IPL இல்லாமயே நீங்க எல்லா வீட்டுலயும் "எங்க வீட்டுப் பிள்ளை" யா இருந்தீங்க.
Murthy Venkat
எதிரி கூட ரசிக்கும் ஒருவன் உண்டென்றால் அவன் தான் சச்சின். @sachin_rt
சகாவே
சச்சினுக்கு முன்
இந்தியாவில் விளையாட்டு ஒரு இருண்ட காலம்...
சச்சினுக்கு பின்....
இந்தியாவே ஒரு விளையாட்டுக்கு அடிமையானது..
இன்விசிபிள்™
அவசரஅவசரமா சாப்டு லன்ச் இன்டர்வல்ல ஸ்கூல் பக்கத்து டீக்கடைல நின்னு ஒரு நாலு ஓவர்ல சச்சின பாத்துட்டா போதும், ஸ்கூல் விடுற வரைக்கும் அதையே சிலாகிச்சிக்கிட்டு இருப்போம்.
TendulkarAnand
எதிரிக்கூட்டம் உனக்கு மட்டும் கைகள் தட்டும் அதிசயமோ...
சிற்பன்©
MRF bat இல்லாமல் குழந்தைப் பருவம் முழுமையடைவதில்லை...
காரணம் இந்த ஒரு மனிதன்...
சச்சின்
IPL GєNιυ$
ஒரு தோனி உருவாகுறத்துக்கும் ஒரு சச்சின் தேவைப்படுறார்ல
Sudhakar Dhamotharan
கிரிக்கெட்டுக்கு இன்று பிறந்த நாள் #HappyBirthdaySachin
குழந்தை அருண் New
80's கிட்ஸ்களின் ஹீரோ..
90's கிட்ஸ்களின் கிரிக்கெட் கடவுள்..
இருபதாம் நூற்றாண்டு கிட்ஸ்களின் லெஜண்ட்.
காலம் கடந்தும் போற்றப்படும் ப்ளேயர்
Gowrishankar
சச்சின் சச்சின்
சோறு தண்ணி திங்காம கிரிக்கெட் மேட்ச் பாத்த கூட்டம் இது. இந்தியா தோத்துட்டா நாம தோத்த மாறி சோகம் ஆயிருவோம். ஜெயிச்சா பட்டாசு கேக் கொண்டாட்டம் . ஸ்கூல் லன்ச் டைம்ல வெளில வந்து ஸ்கோர் பாத்துட்டுப் போவோம்..
SRI
ஆயிரம் விமர்சனங்கள் காழ்ப்புணர்வுகள் இருந்தாலும் கிரிக்கெட்டில் சச்சின் ஒரு சகாப்தம் #
RamKumar
இன்று தோனிக்கு இருக்கும் ரசிகர்களை விட சச்சினுக்கு அதிக ரசிகர்கள் இருந்தார்கள் என்று சொன்னால் மிகையாது
ராசு
ப்ராட்மேன் காலத்தில் பிறக்கவில்லை
சச்சினின் காலத்தில் பிறந்து அவர் அறிமுகப்படுத்திய
அசத்திய அத்தனை நுட்பமான
கிரிக்கெட்டையும்
பார்த்துவிட்டோம் என்ற திருப்தி உள்ளது.
ஊர்நாட்டான்
அந்த ஸ்டார் சேனல் பெய்ட் சேனலா மாறுன டைம். எங்க உர்ல அந்த சேனல் வராது. சச்சின்ங்குற ஒரு மனுசனுக்காக நெறைய பேர் வெளியூர் பேய் மேட்ச் பாக்க வெச்சது ஷார்ஜா டோர்னமென்ட்.
Abinaya Ram
கிரிக்கெட் என்ற வார்த்தையின் முழு உருவமாய் திகழ்ந்தவர்..
அயல்நாட்டவர் ரசனைகளில் முதன் முதலில் ஊறியவர்..
இவர் வெளியேறியதும் ஆட்டத்தைத் தொடர்ந்து காணாத கண்களே இங்குண்டு எனும் வரலாற்றுக்குச் சொந்தக்காரர்..
ராபின்ஹுட்
ஒரு தலைமுறையே சச்சின் அவுட்டானா டிவிய ஆஃப் செய்துவிட்டு வேலையைப் பார்க்கப் போனார்கள்
Siluvai Mathan
பாடப்புத்தகத்தில்
ஓர் அங்கமாய் இடம்பெற்ற
ஒரே கிரிக்கெட்வீரர்...
Viki
Sachin Essay லாம் ரெண்டு வருஷத்துக்கு மனப்பாடமா நியாபகத்துக்கு வெச்சிருந்தேன்
SPARTAN™
மதச்சண்டையால் இந்தியர்கள் மதி இழந்திருந்த பொழுது.. கிரிக்கெட் தான் அமைதிக்கான மதம் என உணர்த்தியவர் சச்சின்..
MI புத்தன்
என் பால்யம் என்பது சச்சினின் ஸ்ட்ரெயிட் டிரைவ்களாலும் பவர்பிளே இல்லாத இன்னிங்ஸ்களாலும் நிரம்பியுள்ளது.தலைவாஆஆ
SaRaThY
இந்தியா விளையாடுறப்ப இந்தியா எவ்ளோ ரன் அடிச்சு இருக்குனு கேட்டத விட
சச்சின் எவ்ளோ அடிச்சாருனு கேட்டது தான் அதிகம்.
தனுஷ் கார்த்தி
ஒரு தலைமுறையையே லீவு நாட்களில் கிரிக்கெட் பேட்டோடு சுற்ற வைத்து, MRF என்பது பேட் செய்யும் கம்பெனி என நினைக்க வைத்து, தான் அவுட்டானவுடன் டிவியை ஆஃப் செய்ய வைத்து, பூஸ்ட் குடிக்கலாம் என நினைக்க வைத்த God of Cricket சச்சின் என்பது பெயரல்ல..
சரித்திரம்
ஆரூர்.ம.எழிலன்
விடுமுறை நாட்கள் சச்சினின் 0 - 90 ரன்கள் போலவும்..
வேலை நாட்கள் சச்சினின் 90 - 100 ரன்கள் போலவும் போகிறது.
CSK Narcos
எத்தனை ஸ்டில்ஸ் வந்தாலும், பேட்டிங் பண்ணும்போது நான் ஸ்டிரைக்கர் எண்ட்ல, சச்சின் இடது கைய மடக்கி இடுப்புல வச்சிக்கிட்டு, வலது கைல பேட்ட தரைல முட்டுக்குடுத்து,லேசா சாய்ந்த மாதிரி நிக்கிற ஸ்டில்லுக்கு மேட்ச் கிடையாது.. காலும் ஸ்டைலா கிராஸ் ஆகியிருக்கும்.. #HappyBirthdaySachin
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT