Published : 27 Jan 2018 05:56 PM
Last Updated : 27 Jan 2018 05:56 PM
ஐபில் 2018-ம் ஆண்டுக்கான ஏலம் பெங்களூருவின் மும்முரமாக இன்று (சனிக்கிழமை) நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் அணி ஹர்பஜன் சிங், டுவைன் பிராவோ, ஷேன் வாட்சன், கேதார் ஜாதவ், அம்பாட்டி ராயுடு, கரண் சர்மா, இம்ரான் தாஹிர், டூ ப்ளெஸ்ஸி இதுவரை ஏலம் எடுத்துள்ளது. சென்னை அணியின் ஏலம் குறித்து இது பற்றி நெட்டிசன்கள் தங்கள் கருத்துகளை பதிவிட்டு வருகின்றன. அவற்றை பற்றி இன்றைய நெட்டிசன் நோட்ஸில்...
Lone Wolf
CSK Haters: என்னங்கடா ஃபார்ம்ல இல்லாதவனா எடுத்து இருக்கீங்க?
அடேய், நாங்க Nehra வயே எடுத்து ஃபார்ம்க்கு கொண்டு வந்தவங்கடா
நீங்க ஃபார்ம்ல இருக்க ப்ளேயர்ஸ நம்புறீங்க...
நாங்க MS ஓட கேப்டன்சிய நம்புறோம்
DON ஸ்டைல் பாண்டி
யாரை எடுக்கறோம்ங்கிறது முக்கியம் இல்லடா.. புல்லட் எப்டி எறங்குதுங்கிறதுதான் முக்கியம்..
விநோதன்
#CSK எப்பவும் கோப்பைய வாங்கறாங்களோ இல்லியோ 'fair play award' கண்டிப்பா வாங்கிருவாங்க..
ஆனா, இனிமே அதுக்கும் வாய்ப்பே இல்ல..
ஹர்பஜன், தாஹிர், வாட்சன்,.. எல்லாரும் வீம்புக்குனே கத்தறவனுங்க..
Little Sachin
இப்ப இப்டிதான் வயசானவனுகனு கலாய்ப்பானுக.. தோத்துப்போன அப்பறம் எக்ஸ்பீரியன்ஸ்டு பிளேயர்சா இறக்கி ஜெயிச்சிங்க இளைஞர்கள வளர்த்து விடலனு நொட்டம் சொல்ல வருவானுக
ரைட்டர் இம்ச
சென்னை சூப்பர் கிங்ஸ் பிளேயர் செலக்சன பாத்தா
சத்யராஜ், வடிவேலு ஆப்பம்பட்டி அணி செலக்சன் நினைவுக்கு வரது எனக்கு மட்டும்தானா
யுகராஜேஸ்
அடுத்த வருஷம் டீம் மேனேஜர், கோச், அட்வைஸர் ஆகிற நிலையில் இருக்கிற ஆளுங்களையா பார்த்து பார்த்து எடுக்கிறானுங்களே இந்த சிஎஸ்கே ஏதாவது நீண்டகால திட்டம் இருக்குமோ
ஆல்தோட்டபூபதி
அடுத்து சிஎஸ்கே கவாஸ்கரையும் கபில்தேவையும் ஏலம் எடுப்பானுங்கன்னு நினைக்கிறேன்
Prabhu Palanivel
பல சின்ன பசங்கள எடுத்து யாரை வெளிய ஒக்காரவைக்கரதுனு யோசிக்கறதவிட
பல பெரிய மனுசங்கள எடுத்து யாரை விளையாடவைக்கறதுனு யோசிக்கறது ஈசி.....
இதசொன்னா நம்மல!!!!!!
Vagabond
ஆஷிஷ் நெஹ்ராவ csk எடுத்தப்ப அப்ப என்ன சொன்னானுகளோ அதையேதான் இப்ப சொல்றானுகn
தண்ணி குழாய்க்குள்ள இறங்குனதுக்கப்புறம் CSK பவர் தெரியும்டா
BS Thala My Heart...
இப்போ சண்டை போட்டு மண்டைய ஒடச்சிக்கிறவன எல்லாம் பார்த்தா சிரிப்புதான் வருது
ஆட்டம் ஆரம்பிக்கட்டும் அதிரடிய காட்டுவோம்
#CSK டா ... கெத்தா சொல்லிட்டு போவோம்
mydeen
ஆர்சிபி பவுலிங்க்கு ஆள் எடுக்கணும், மும்பை பேட்டிங்க்கு. சென்னை எல்லாத்துக்குமே எடுக்கவேண்டி இருக்கு
காக்கா முட்டை
#Dhoni க்கு backup கீப்பர் எடுக்க நினைத்தது தப்பில்லை..ஆனா அதுக்கு திருப்பி ஒரு 30+ ஆளு எடுக்கும் லாஜிக் தான் சுத்தமா விளங்குல
ℳsᴅ பிளேடு
தாகிர்னா விக்கெட் எடுத்துட்டு க்ரவுண்ட்க்குள்ள ட்ரெயின் ஓட்டுவானே அவன்தான அதுக்காகவே எடுக்கலாம்.
ஏன்டா தோனி இருக்குற தைரியத்துல யார வேணாலும் எடுப்பிங்களாடா
AG
“கங்கை நதி புறத்து கோதுமை பண்டம்,
காவிரி வெற்றிலைக்கு மாறு கொள்வோம்”
ℳя.தமிழ்
எத்தன பேரு இருக்காங்கன்றது முக்கியம் இல்ல யார் இருக்கான்றது தான் முக்கியம் - பிளேடு
IPL Poet
எந்த ப்ளேயர எடுத்து வச்சாலும் அத பலமான டீமா தோனியால மாத்த முடியும்ன்ற நம்பிக்கை தான்டா..
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT