Last Updated : 18 Nov, 2017 03:57 PM

 

Published : 18 Nov 2017 03:57 PM
Last Updated : 18 Nov 2017 03:57 PM

எகிப்து - சூடானுக்கு இடைப்பட்ட பகுதிக்கு தன்னைத் தானே அரசனாக அறிவித்த இந்திய இளைஞர்

எகிப்து - சூடானுக்கு இடைப்பட்ட பகுதியான பிர் தவலுக்கு தன்னைத் தானே அரசனாக அறிவித்துக் கொண்டுள்ளார் இந்திய இளைஞர் ஒருவர்.

மன்னர்கள் போர் புரிந்து பிற நாட்டு பகுதிகளை வென்று தங்கள் பகுதியாக அறிவித்துக் கொண்டதை வரலாறுகளில் நாம் கேள்விப்பட்டிருபோம், படித்திருப்போம்.

ஆனால் 21-ம் நூற்றாண்டில் இந்திய இளைஞர் ஒருவர் எகிப்து - சூடான் நாடுகளுக்கு இடையே அமைந்துள்ள பாலைவனப் பகுதியான 800 சதுர மைல்கள் இடத்தைக் கண்டறிந்து அதனை ’தீக்சித்தின் நாடு’ என்று அறிவித்திருக்கிறார்.

இந்தியாவின் இந்தூரைச் சேர்ந்தவர் சுயாஷ் திக்சித் இவர் கடந்த நவம்பர் 7-ம் தேதி தனது ஃபேஸ்புக்கில் பதிவில் ”Became ruler of a country | Claimed an unclaimed land | Kingdom of Dixit” என்று குறிப்பிட்டு ஒரு பதிவை இட்டிருந்தார். தற்போது இந்த பதிவுதான் சுயாஷ் தீக்‌ஷித்தை சமூக ஊடகங்களில்  பிரபலமாக்கியுள்ளது.

இதோ அந்த பதிவில் சுயாஷ் தீக்சித், “நான் சுயாஷ் திக்சித், நான் இன்று முதல் என்னை அரசன் சுயாஷ் என்று அழைக்கப் போகிறேன். எகிப்து மற்றும் சூடானுக்கு இடையே அமைந்துள்ள எந்த நாட்டாலும் உரிமைக் கோரப்படாத 800 சதுர மைல்கள் உள்ள நிலப்பகுதியான பிர் தவல் பகுதிக்கு நான் உரிமை கோருகிறேன்.

நான் சுமார் 319 கிமீ பயணித்து பாலைவனப் பகுதியாக உள்ள பிர் தவலுக்கு உரிமை கோரியுள்ளேன். 800 சதுர மைல்கள் உள்ள இந்த இடத்துக்கு எந்த நாடும் இதுவரை உரிமைக் கோரவில்லை. உலகிலேயே இந்தப் பகுதி மட்டும்தான் மனிதர்களுக்கு வாழ்வதற்கான சூழல் இருந்தும் இன்னும் எந்த நாட்டாலும் உரிமைக் கோரப்படாமல் உள்ளது.

பிர் தவலை நோக்கிய இந்த அற்புதமான பயணம் அதிகாலை 4 மணியளவில் அபு சிப்லிருந்து தொடங்கியது. நான் உள்ளூர் ஓட்டுநரான முஸ்தபாவின் உதவியுடன் பிர் தவாலை நோக்கி புறப்பட்டேன். நான் முதலில் எனது பயணத்தை முஸ்தபாவின் கூறியபோது, அவர் என்னை பைத்தியக்காரன் என்று நினைத்தார். இருந்தபோதிலும் இந்தப் பயணத்துக்கு அவர் ஒப்புக் கொண்டார் (அதற்காக அவருக்கு நிறை பணம் அளித்தேன்).

ஆபத்தான அப்பயணத்துக்கு எகிப்து ராணுவம் பல கட்டுபாடுகளை விதித்தது அதில் ஒன்று, ராணுவ பகுதிகளில் புகைப்படம் எடுக்கக் கூடாது. ஒரே நாளுக்குள் திரும்ப வரவேண்டும், மற்றும் உயர்ந்த பொருட்களை எடுத்து செல்லக் கூடாது என்பதுதான் அவை.

தீக்சித் பயணம் செய்த வாகனம்

நாங்கள் பாலைவனங்களுக்கிடையே எங்களது பயணத்தை தொடர்ந்தோம். ஆறு மணி நேர பயணத்துக்கு பிறகு, நான் அந்த மலைக் குன்றுகளை பார்த்தேன். நான் எனது தோழியிடம் ''நான் திரும்ப வரவில்லை என்றால் போலீஸை அழை'' என்று கூறிவிட்டு... சென்றேன். அங்கு சென்ற முதல் நபர் நான்தான்.

இரண்டு இடங்களில் எனது கொடியை நட்டு வைத்தேன். என்னை பிர் தவலின் அரசனாக அறிவித்து கொண்டேன். நான் எனது மக்களுக்காகவும், எனது நாட்டுக்காகவும் தொடர்ந்து பணியாற்றுவேன்.

நான் இந்த பயணத்தில் ஒன்றை கற்றுக் கொண்டேன். இதுபோன்று மீண்டும் முயற்சிக்கக் கூடாது என்பதுதான் அது” என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் அந்தப் பகுதிக்கு தீட்சித் ராஜ்ஜியம் என்று பெயரிட்டு அதன் தலை நகரம் சுயாஷ்பூர் என்று அவர் அறிவித்துள்ளார்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x