Published : 03 Oct 2017 03:53 PM
Last Updated : 03 Oct 2017 03:53 PM

நெட்டிசன் நோட்ஸ்: தாஜ்மஹால் சர்ச்சை - காவியும் காதலும்!

உத்தரப் பிரதேச அரசின் சுற்றுலாத் துறைக் கையேட்டில் இருந்து தாஜ்மஹால் நீக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. இதுகுறித்த நெட்டிசன்களின் கருத்து இன்றைய நெட்டிசன் நோட்ஸில்...

Sujith Kumar‏ @sujithkumar13

உலகின் 7 அதிசயங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்ட தாஜ்மஹாலால், உத்தரப் பிரதேச சுற்றுலாக் கையேட்டில் இடம்பிடிக்க முடியவில்லை. #TajMahal

சேட்டுபெரியார்!‏ @shaitboy

தாஜ்மகால் சுற்றுலாத் தல பட்டியலில் இருந்து நீக்கம்...

இதுவும் உலக அதிசயம்தான்! புதிய இந்தியால இதுவும் சாத்தியம்தான்....

இயற்கையின் தோழி @_ilavarasi

மனைவி நியாபகமா கட்டுனது. பிரம்மச்சாரிக்கு அதோட அருமை தெரியுமா? #TajMahal

Fahad @fahadtwts

மோடி ஜி, தாஜ்மகால் இல்லைன்னா இந்தியாவுக்கு யாருமே வரமாட்டாங்க.

Gaurav Pandhi‏ @GauravPandhi

இந்தியாவில் அதிகம் சம்பாதிக்கும் நினைவுச் சின்னம் தாஜ்மஹால்தான். அதைக் கண்டு களிக்கவே ஏராளமான சுற்றுலாப் பயணிகள் இந்தியா வருகின்றனர்.

T-REX‏ @samnaction

தாஜ்மஹாலுக்கு எப்போதும் விளம்பரம் தேவையில்லை.

Sawan Gupta‏ @sawangupta981

உலக அதிசயத்தை சுற்றுலாப் பட்டியலில் இருந்து நீக்கி, இந்திய கலாச்சாரத்தை நாசமாக்குகிறார் யோகி.

Anjali K Shastri‏ @AnjaliShastri

தாஜ்மஹாலை நீக்கியாகி விட்டது. குதுப் மினாரையும் நீக்கிவிட்டு இந்திய சுற்றுலாத் துறையில் நிறைய கோ சாலைகளைச் சேர்த்துக் கொள்ளுங்கள். #IncredibleIndia

எஸ்.கருணா‏ @skaruna63

தங்கள் காவிய நாயகன் ராமன், சீதைக்கு ஒரு சீதாமஹால் கட்டி வைக்கலயே என்கிற வயிற்றெரிச்சலால்தான் இவங்க தாஜ்மகால் மேல காண்டாவுறாங்கப்பா!

Sadhavi Khosla‏ @sadhavi

பிரிட்டன் இளவரசர் சார்லஸ், அமெரிக்க முன்னாள் அதிபர் கிளிண்டன் ஆகியோர் அடுத்த முறை இந்தியா வரும்போது சுற்றுலாவுக்கு கோரக்பூர் அழைத்துச் செல்லப்படுவார்கள்.

அபிவீரன் @Akku_Twitz

தாஜ்மஹால் சுற்றுலா பட்டியலில் இருந்து நீக்கம்- தாஜ்மஹால் உலக அதிசயத்துல ஒன்னுன்றதே தெரியாம இருக்கீங்களேப்பா.

Naveen‏ @naveenarendran

இந்திய கலாச்சாரப்படி தாஜ்மஹால் கட்டப்படவில்லை - யோகி ஆதித்யநாத்.

தாஜ்மஹால் முழுசும் ஆரஞ்சு கலர் பெயிண்ட் அடிச்சா கலாச்சாரத்துல சேரும் போல.

JALEEL @jaleelmoh

தாஜ்மஹால் இஸ்லாமியரின் அடையாளம் அல்ல...

அது இந்தியாவின் சரித்திரம்...

Alex Pandian

தாஜ்மஹால் ஒரு கல்லறை.

ஷாஜஹானின் மனைவிகளில் ஒருவரே மும்தாஜ்,

மும்தாஜின் கணவர்களில் ஒருவரே ஷாஜஹான்.

இனியும், இந்த அவலமான கல்லறையைப் போற்றத்தான் வேண்டுமா?

Erode Kathir‏ @erode_kathir

எப்படியோ இதுவரைக்கும் தாஜ்மஹால் பார்க்காதவங்களையும் பார்க்கத்தூண்டும் உ.பி அரசுக்கு நன்றி சொல்வோம்.

 Mannar Mannan

அமர்நாத் பனிலிங்கத்தைக் கண்டறிந்தவர் புதாமாலிக் என்ற இசுலாமியர், நெடுஞ்சாலைகளைக் கண்டறிந்தவர்கள் அரேபியர்கள், இந்திய நாணயத்துக்கு ரூபாய் எனப் பெயரிட்டவர் இசுலாமிய அரசர் ஷெர்ஷா, பீரங்கியை இந்தியாவுக்கு அறிமுகப்படுத்தியவர் பாபர், 1799 களிலேயே ஏவுகணைகளைப் பயன்படுத்தியவர் திப்பு சுல்தான், எல்லாவற்றுக்கும் மேலாக செங்கோட்டையைக் கட்டியதும் அதே ஷா ஜஹான்தான் என்பதையும் நினைவுபடுத்திக் கொண்டு...

Kesava Raman Konar‏ @kesavaessar

கலை நுணுக்கம் மிகுந்த தாஜ்மஹால் கட்டிடத்தை கட்டிய கலைஞர்களின் கரங்களை வெட்டிய வரலாறைச் சொல்லிக் கொடுக்க விரும்பவில்லை. #உபி_அரசு

Ra Sindhan

அதானி ஊழல் வெளிநாட்டு ஊடகங்களில் அம்பலமாகியிருக்கிறது. உடனே தாஜ்மஹால் சர்ச்சையை உருவாக்கிவிட்டார்கள்.

Murugan Manthiram

தாஜ்மஹால் உலக அதிசயங்களில் ஒன்று. 1983-லேயே தாஜ்மஹால் யுனெஸ்கோவால் கலாச்சார பிரிவின் கீழ் பாரம்பரிய இடமாக அறிவிக்கப்பட்ட பகுதி. ஐ.நா.வின் நேரடிக் கண்காணிப்பில் உள்ள பகுதி. போர்க்காலங்களில் கூட பாதுகாக்கப்பட்ட பகுதி.

Hariharasuthan Thangavelu

காவி சங்கங்கள் நாட்டை ஆளும்போது, காதல் சின்னங்கள் எல்லாம் நீக்கப்படத்தான் வேண்டும்! #தாஜ்மஹால்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x